Snapjudge

Posts Tagged ‘Contests’

Sun TV Athirady Singer: Sakthi Loganathan Special

In Tamilnadu, TV on ஏப்ரல் 15, 2009 at 9:33 முப

சன் டிவி அதிரடி சிங்கரில் வெல்ல தேவையான பத்து தகுதி:

sun-tv-athirady-singer-judges-serials-programmes-contest

  1. வாரிசு: தாத்தாவின் பெயர் ‘திருச்சி லோகநாதன்‘ என்றிருக்க வேண்டும்.
  2. முயற்சி: ஏ ஆர் ரெஹ்மான் பாடல் எல்லாம் எடுத்துக் கொள்ளாமல் எழுபதுகளின் எளிமையான sakthy-loganathan-athiradi-singer-shakthi-winnersமெட்டுகளை பாடிவிட வேண்டும்.
  3. தோல்வி: விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தோற்றிருக்க வேண்டும்.
  4. ஜாலி: இந்தப் போட்டி எல்லாம் சின்னத் திரை சீரியல் போல் அனுபவிக்கணும்; வீற்றிருக்கும் நடுவர் கூட ஆராய மாட்டார்.
  5. கவனிக்கவைத்தல்: கவனிக்க வேண்டிய தயாரிப்பாளர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால், கவனம் கோருமாறு பெர்ஃபார்மனஸ் இல்லாவிட்டாலும் நடுவர்களால் கவனிக்கப்படுவார்கள்.
  6. கலவை: எத்தனை தமிழ்த் தொலைக்காட்சி வந்தாலும் அதே நடிகர்களைக் கொண்டு ஒரே மாதிரி நெடுந்தொடர் வருகிறது அல்லவா? அங்கே போய் வெரைட்டி கேளுங்க! அவர்களை நிறுத்த சொல்லுங்க!
  7. நம்பிக்கை: ஜெயிச்சுடுவோங்கிற உடல் மொழி தானா வரதில்ல… அதற்குரிய ஸ்டேட்டஸ், பலம், தராதரம் எல்லாம் இருக்கில்ல!
  8. சிபாரிசு: சிசு என்பதன் விரிவாக்கம்தான் சிபாரிசு.
  9. அதிரடியின்மை: பங்குனி உற்சவத்தில் கணபதியும் சிவனும் பார்வதியும் முருகனும் நடுநாயகமாக உலா வந்தாலும் கூடவே சண்டிகேஸ்வரர் தொற்றிக் கொள்வார். அது மாதிரிதாங்க இது.
  10. தையற்கலை: சிங்கர் தையல் மெசின் இருக்கும். அதை பெண்கள் வீட்டில் வைத்துக் கொண்டு அவ்வப்போது தைப்பதாக பாவ்லா காட்டுவார்கள். அது போல், ‘சிங்கர்’ போட்டில் பாவ்லா காட்டியதால் அதிரடி சிங்கர் – சக்தி!

1982 – Top 11 Short Story Writers: Kumudam

In Books, Lists, Literature, Magazines, Tamilnadu on ஏப்ரல் 9, 2009 at 3:01 முப

இவர்களில் யாருக்கு ரூ. 5,000? இளமைக் கதை என்னும் தலைப்பில் 1982 குமுதத்தில் வெளியான எழுத்தாளர்களும் கதைத் தலைப்புகளும்:

1982 - Short Story Contest in Kumudham

1982 - Short Story Contest in Kumudham

  1. மேடை ராஜாக்கள் – அனுராதா ரமணன்
  2. பெட்டர் லேட் தென் நெவர் – ஹேமா ஆனந்ததீர்த்தன்
  3. சுழல் பந்து – பாலகுமாரன்
  4. ஆ! அந்த நிமிஷம்! – கோவி மணிசேகரன்
  5. ஒரு காதல் கடிதம் வந்தபோது – சு சமுத்திரம்
  6. காதலின் முகங்கள் – ஆதவன்
  7. வனிதா, என்னைத் தொட்டு விடு! – புஷ்பா தங்கதுரை
  8. ஒரு பஸ் நிற்க மறுக்கிறது – அழகாபுரி அழகப்பன்
  9. குணாலட்சுமி – ஜெயந்தன்
  10. கண்ணும் காதும் – அசோகமித்திரன்
  11. ஸ்டெப்னி – சிவசங்கரி