Snapjudge

Posts Tagged ‘Comments’

Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்?

In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப

1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்

2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்

3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்

4. மொழிபெயர்த்தல்

5. தமிழ் கற்றுத் தருதல்

6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்

7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்

8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்

9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்

10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்

சில தொடர்புள்ள பதிவுகள்:

அ) பெட்னா விழா – செந்தழல் ரவி

ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012

இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America

25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012

In Life, Srilanka, Tamilnadu, USA on ஜூலை 12, 2012 at 9:17 பிப

குளிர் 100 டிகிரி

அகர முதல எழுத்தெல்லாம் அமலா 
பால் முதற்றே உலகு

(பெட்னா குறள் எண் : 1)

நீராருங் கடலுடுத்த

தமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல்? சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு!!

Abercrombie to ‘Actor Bharath’ : Ditch our brand

நடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது! ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க

மூன்று முடிச்சு

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.

தொப்பி & திலகம்

நான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.

கம்யூனிஸ்ட் என்றால் சிவப்பு

எந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன்?

ஆட்டமா! தேரோட்டமா!!

நாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே!

புள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை

’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க!’

என்னது பத்து லட்சமா?

அமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா? எனக்கு பத்தாக்கும்!

நடிகர் பரத்:நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்!!

அறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்



பிரபாகரன் பிசினெஸ்

இறந்தாலும் ஆயிரம் பொன்

பொழிப்புரை

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே

காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!

உன்னைக் கண்டு நானாட

எ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்

நான் அறிந்த நெட் நாட்டாமைகள்

In Blogs, Tamilnadu on நவம்பர் 16, 2011 at 4:11 முப

இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் எல்லோருமே சில காலம் முன்பு புகழ்பெற்றவர்கள். சச்சின் டெண்டுல்கர் போல் இப்பொழுதும் களத்தில் இருக்கலாம். காஜி கேட்கலாம். ஆனால், பதின்ம வயதின் சச்சின் போல் பத்தாண்டுகளுக்கு முன்பு ரவுண்டு கட்டியவர்கள்.

நெட் நாட்டாமையின் மாண்புகள் என்ன?

  • நிறைய வாசிக்க வேண்டும்; அவனப் பத்தியும் எவளப் பத்தியும் சுட்டத் தெரிய வேண்டும்.
  • எல்லோருக்கும் ஒன்பது துவாரம் இருக்கலாம். ஆனால், யூஸ் செய்வது முக்கியம். அனைவரும் எழுதலாம். காத்திரமான கருத்து வேண்டும்.
  • அச்சில், திரையில் கொடி பறக்ககூடாது.
  • மறுமொழி இடுவதற்கு அசரமாட்டார். வாக்குவாதத்தில் கெட்டி.
  • முசுடு கிடையாது. பெருங்கோபமிருக்கும் இடத்தில்தானே, நோ நான்சென்ஸ் குணம் இருக்கும்!?
  • நிர்வாகி. ஒருங்கிணைப்பாளர். பின்னணியில் செயல்படும் காரியவாதி.
புகழ்பெற்ற தமிழ்ப்பதிவர்களைப் பற்றி சொல்லும்போதே நாட்டாமையின் குணாதிசயங்களை அறியலாம்:
  1. பெயரிலி:
    பிள்ளையார் சுழி மாதிரி இவரைப் போடாவிட்டால் எந்தப் பட்டியலும் சரிப்படாது. புனிதப் பசுவாக இருக்கட்டும்; சுய எள்ளல் ஆகட்டும்; எல்லாவற்றிலும் பாயும் புலி.
  2. பாலபாரதி:
    நெட்டில் மட்டுமே அதிகாரம் செலுத்தியவர்களின் மேற்சென்று, ரியலிசத்திலும் நாட்டாமையாக முன்னின்று பஞ்சாயத்து செய்தவர். ட்ரைவ் இன் வுட்லண்ட்ஸ் தயிர் வடை கோஷ்டியைத் தாண்டி சென்னைப் பதிவர்களை பட்டறை போட்டவர்.
  3. பி கே சிவகுமார்:
    தனி மரம் தேர்தல் சின்னமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், தோப்பாகாது. தனக்குப் பின்னே அன்பால் அமைந்த கூட்டணி கொண்டவர். பிரபாகரன் தொட்டு முதலியம் வரை பேசாப் பொருள்களுக்கு குத்து விளக்கேற்றியவர்.
  4. நேசகுமார்:
    மண்டனமிஸ்ரரின் மனைவியிடம் தோற்ற ஆதிசங்கரராக இஸ்லாம் கற்றுத் தேர்ந்தவர். முகமது சொன்னதை முல்லாக்களும் அறியாத காலத்தில், முஸ்லீம்களுக்கும் முகத்தை களைய நினைத்தவர்களுக்கும் மண்டை காய வைத்தவர்.
  5. மதி கந்தசாமி:
    தமிழ்மண நட்சத்திரமா? சிறுகதைப் போட்டியா? நுட்பக் கோளாறா? எல்லாவற்றுக்கும் விடையும் நேரமும் வைத்திருந்தவர். தீர்க்கமான தலைமை & தொலை நோக்கம் என்பதற்கு பாடமாக விளங்கியவர்.
  6. முகமூடி:
    சிலருக்கு இவர் புழு – நசுக்க நினைத்தார்கள். சிலருக்கு இவர் பட்டாம்பூச்சி – கேயாஸ் தியரி என்பார்களே… அது மாதிரி அடுக்கடுக்கான மாற்றங்களை உருவாக்கினவர். PMK விரிவாக்கத்தை நினைவில் நிறுத்தியது மட்டுமல்ல. திராவிடத்தின் தோலுரிப்புகளையும் அபிமன்யுவாக கையாண்டவர்.
  7. முத்து தமிழினி:
    விவாதங்களில் கெட்டித் தயிர்; கொள்கை விளக்கங்களில் வெண்ணெய்; நேர்ப்பேச்சில் வழிந்தோடும் மோர்; அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் தூய்மையான வெள்ளந்தி பால்.
  8. குழலி:
    ஒருவன் ஒருவன் முதலாளி என்னும் தேய்பதத்திற்கு உள்ளாகும் அபாயம் இருந்தாலும், அவர்களுக்குக் கிடைத்த உபாயம்.
  9. டோண்டு ராகவன்:
    மூர்த்தியா? இவரா? என்னும் ஒண்டிக்கு ஒண்டி பலப்பரீட்சையில் எல்லோரும் ஒதுங்கிக் கொள்ள, அசராமல் ஆடி ஜெயித்த வீரர்.
  10. ரோசா வசந்த்:
    பூர்ஷ்வா, ரோசா போன்ற நேம் டிராப்பிங் இருக்கும். இளையராஜா என்னும் அணுக்கமும் இருக்கும். கொண்ட முடிவின் கறார்த்தனத்திற்கு ஜெயலலிதாவே வெட்கப்பட வேண்டும். விலாவாரியாக எதிர்வினையின் நீள அகல ஆழத்தைக் கண்டு ஜெயமோகனே நாணங்கொள்ள வேண்டும்.
தூக்கக் கலக்கத்தில் விட்டவர்களை நினைவூட்டவும்.

Post #100: 10 Hot’s Top 10 – Stats

In Blogs, Lists, Misc on ஏப்ரல் 24, 2009 at 3:40 பிப

இது 10 ஹாட் -இன் நூறாவது இடுகை.

Totals

Posts: 100
Comments: 79
Categories: 25
Tags: 1,000

Total views: 18,923

Busiest day: 762 — Saturday, February 14, 2009

டாப் 10 Referrers

  1. tamilish.com
  2. bsubra.wordpress.com
  3. etamil.blogspot.com
  4. ta.wordpress.com
  5. thiratti.com
  6. payanangal.in/2009/04/blog-post.html
  7. twitter.com/home
  8. snapjudge.com
  9. snapjudge.blogspot.com
  10. tamil.net

Top Posts

  1. 10 Photos from Prabhu’s Daughter Wedding
  2. நான் கடவுள்: பாலா & ஜெயமோகனின் பத்து க்ளைமேக்ஸ்
  3. நடிகர் விஜய் ஏன் கோபப்பட்டார்?
  4. Science & Technology Advancements: Latest & Greatest from 2008
  5. Sun TV Athirady Singer: Sakthi Loganathan Special
  6. பத்து சம்ஸ்கிருத சினிமா கவர்ச்சி வாசகங்கள்
  7. ‘டாப்-10’ லஞ்சம் பெறும் துறைகள்
  8. Tamil Nadu Quotes: Elections 2009
  9. சுஜாதா கேள்விகள்: கற்றதும் பெற்றதும் (ஆனந்த விகடன்)
  10. 10 Reasons why you should voice your support for Tamil Eezham: ஏன் ஈழம்?