Snapjudge

Posts Tagged ‘Chumma’

Kanagvel Kaakka: What does the poster say?

In Lists, Misc, Movies on ஓகஸ்ட் 23, 2009 at 6:14 பிப

போஸ்டர் பாரு… ஒன்பது போடு!

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads

  1. அது என்ன! ஸ்கர்ட்டும் இல்லாமல், ஷார்ட்சும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவாந்தரமான ஆடை?
  2. கடற்கரையில் பச்சை புல்வெளி எப்படி சென்னையில் சாத்தியமில்லையோ… அது போல் பீச் வாலிபாலில் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வாங்குவதும் சாத்தியமில்லை.
  3. மிஸ்டி மே & கெரி வால்ஷ் போல் இருவர் கொண்ட அணியில் ஏன் ஐவர்! ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ? பா ராகவனாருக்கே வெளிச்சம்.
  4. திருவளர் செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. (வெண்)பா(ம்)கின்ற, பாடும், பாடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.
  5. பாராவின் ஒன்பது கட்டளைகள் பிரசித்தம். இது நாயகன் கரணின் சட்டையில் 99
  6. தன் தலையில் கைவைக்கக்கூடாது என்பார்கள். கன் வைக்கலாம்.
  7. அடைக்கப்பட்ட நூல்வேலி கம்பி கட்டத்திற்குள்ளிருந்து வெளியே குதிக்க பெண் கையை நீட்டுவது போஸ்டர் சங்கேதம்
  8. அதற்கும் ரகசிய வீடியோ கேமிரா வைத்து CCTV மூலம் கண்காணிப்பது கலிகாலம்
  9. வேல் எதைக் குறிக்கிறது என்று சொல்லவும் வேணுமோ?

Kanagavel-Kaakka-karan

10 Illogical Lyrics: Unpoetical analysis of Tamil Film Songs

In Lists, Movies, Music on ஓகஸ்ட் 23, 2009 at 4:07 பிப

1. பாடல்: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
திரைப்படம்: கந்தசாமி
எழுதியவர்: இளங்கோ – விவேகா
வரி: எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு
ஏன்: ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.

2. பாடல்: தாய் சொல்லும் உறவை வைத்தே
திரைப்படம்: கனாக் கண்டேன்
எழுதியவர்: வைரமுத்து
வரி: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்!
ஏன்: +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.

3. பாடல்: பூமாலையே தோள் சேரவா
திரைப்படம்: பகல் நிலவு
எழுதியவர்: ?
வரி: தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏன்: வண்டுகளை ஏமாற்ற தேன் தயாரித்துத் தராத பூக்களின் செய்கையை இந்த வரிகள் தவிர்த்துவிடுகிறது. Nectarless flowers: ecological correlates and evolutionary stability : Flowers may cheat by not producing nectar

4. பாடல்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
திரைப்படம்: சிங்காரவேலன்
எழுதியவர்: ?
வரி: காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள
ஏன்: இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!

5. பாடல்: ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
திரைப்படம்: மீரா
எழுதியவர்: ?
வரி: எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன்
ஏன்: பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.

6. பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
எழுதியவர்: ?
வரி: உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
ஏன்: இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.

7. பாடல்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
திரைப்படம்: பொல்லாதவன்
எழுதியவர்: ?
வரி: வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஏன்: வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.

8. பாடல்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை
எழுதியவர்: ?
வரி: கந்தன் தேடி வந்த வள்ளி
ஏன்: வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])

9. பாடல்: சின்னத் தாயவள் தந்த ராசாவே
திரைப்படம்: தளபதி
எழுதியவர்:
வரி: தேய்பிறை காணும் வெண்ணிலா
ஏன்: ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)

10. பாடல்: ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
திரைப்படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: வாலி
வரி: ஜகன் மோஹினி நீ
ஏன்: ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!