Snapjudge

Posts Tagged ‘Catchy’

பத்துப் பாட்டு

In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப

தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?

  1. கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
  2. கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
  3. ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
  4. பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
  5. அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
  6. நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
  7. புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
  8. ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
  9. Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
  10. இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.

பத்து சம்ஸ்கிருத சினிமா கவர்ச்சி வாசகங்கள்

In Lists, Literature, Movies on மார்ச் 4, 2009 at 3:16 பிப

அதர்வ வேதாந்தமான் மாண்டூக்ய உபநிஷதத்தில் அயம் ஆத்மா பிரம்ம [இந்த ஆத்மாவே பிரம்மம்] ரிக்வேதாந்தமாகிய ஐதரேய உபநிடதத்தில் பிரக்ஞானம் பிரம்ம [பிரக்ஞையே பிரம்மம்] யஜுர்வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] சாமவேதாந்தமான சாந்தோக்ய உபநிடதத்தில் ‘தத்வமஸி’ [அதுநீதான்] என்னும் மகாவாக்கியங்கள் – jeyamohan.in » கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் கருத்தரங்கில் ஆற்றிய உரை » மறைந்து கிடப்பது என்ன?

அஹம்ப்ரும்மாஸ்மி போல் பத்து உபதலைப்பு பரிந்துரை:

  1. தத்வமஸி
  2. அந்தர்யாமி (எப்ப வருவேன்! எப்படி வருவேன்னு தெரியாது!)
  3. ஸர்வ வ்யாபி (ஜித்தன் பட ரமேஷ் மாதிரி கதாபாத்திரம்)
  4. சர்வே ஜனா! லோகா ஸமஸ்தா!! சுகினோ பவந்து!!! (சுந்தர் சி படம்)
  5. சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து (காதல் கல்யாணம்)
  6. ஸித்தி புத்தி ப்ரதே தேவி (விஜயசாந்தி ரக ஹீரோயின் சப்ஜெக்ட்)
  7. தரித்ராய க்ருதம் தான்ம் (ராபின்ஹுட் ஹீரோ; ஷங்கர் படம்)
  8. சம்போ கதலீ பல ஸம்யுதம் (கிங் காங் தமிழ் டப்பிங்)
  9. ஸ்ரீமந் நாராயண / பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (எல்லாம் தல / தளபதிக்கு சமர்ப்பணம்)
  10. அனாத ப்ரேத ஸமஸ்காரம் (நான் கடவுள் பார்ட் டூ)