This post contains numerous spoilers about Foxcatcher and Director Shankar & Actor Vikram’s “I” movies
ஃபாக்ஸ் காச்சர்
ஐ
1.
மல்யுத்த வீரரைப் பற்றிய கதை
ஆணழகன் போட்டியில் கலந்துகொள்பவரைப் பற்றிய கதை
2.
பெரிய தொழிலதிபரான ட்யூபாண்ட் – முக்கிய வில்லன். ஹீரோவின் வாழ்க்கை நாசமாவதற்கு முக்கிய காரணம். இந்த வேடத்திற்கு என்று சிறப்பு மேக்கப் போட்டிருக்கிறார் – ஸ்டீவ் காரெல்
விஜய் மல்லய்யா போல் தோற்றமளிக்கும் இராம்குமார் – முக்கிய வில்லன். இங்கேயும் பெரும் பணக்காரர் + முதலாளி. இவரை தண்டிக்கப்படுவதற்காக சிறப்பு உடல் அலங்காரம் போடப்பட்டிருக்கிறது.
3.
தற்பால் சேர்க்கையாளர்களையும் ஓரின விழைவாளர்களையும் படம் உள்ளீடாக விமர்சிக்கிறது.
படத்தின் முக்கிய வில்லன் ஆக தற்பால் விரும்புபவரை அமைத்தது விமர்சனத்திற்கு உள்ளானது.
4.
மார்க் ஷூல்ஸ் என்னும் மல்யுத்த கதாநாயகனின் குரு + ஆதரவாளனாலேயே, மார்க் ஷூல்ஸ் அவதிக்கு உள்ளாகிறான்.
லிங்கேஸனின் முக்கிய புரவலரான டாக்டரின் செயல்பாடுகளினாலேயே, லீ – பிரச்சினைகளுக்கு உள்ளாகிறான்.
5.
டியுபாண்ட் பணத்தினால் மரியாதையைப் பெற நினைக்கிறார்.
டாக்டர் வாசுதேவன், சதித்திட்டத்தினால் நாயகி தியாவை கைப்பிடிக்க நினைக்கிறார்.
6.
ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றவர், அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தோற்பது அவமானத்தைத் தருகிறது.
அழகினால் உலகெங்கும் புகழ்பெற்ற ‘லீ’, அதே உருக்குலைந்ததால் அவமானம் அடைந்து கூனிக் குறுகிறார்.