Snapjudge

Posts Tagged ‘வெற்றி’

தமிழ் சினிமாவின் தலை பத்து கொலைகள்

In Movies, Tamilnadu on ஜூலை 4, 2022 at 5:01 பிப

தமிழ்ப் படத்தில் வந்த உயிர்ப்பலிகளில் எது உடனே நினைவிற்கு வருகிறது? அது காண்பிக்கப்பட்ட கொலையாக இருக்கலாம். அல்லது கொல்லுவதற்கான திட்டமிடலாக இருக்கலாம். காட்சியமைப்பாக இருக்கலாம். எதனாலோ, நினைவில் நின்று பாதித்த பலிகளின் பட்டியல்:

  1. வாராய் நீ வாராய் – மந்திரி குமாரி படத்தில் பாடலின் முடிவில் (மு. கருணாநிதி)
  2. நூறாவது நாள் – மொட்டை சத்யராஜ் (மணிவண்ணன்)
  3. விடியும் வரை காத்திரு – க்ளைமாக்ஸ் நோக்கிய பயணம் (பாக்யராஜ்)
  4. முதல் மரியாதை – ராதா (பாரதிராஜா)
  5. ஒரு கைதியின் டைரி – பாரதிராஜா + பாக்கியராஜ்
  6. கல்லூரி (தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்) – பாலாஜி சக்திவேல்
  7. தளபதி – நடு ரோட்டில் எரியூட்டும் சம்பவம் – ரஜினி + மணி ரத்னம்
  8. ஜெண்டில்மேன் – துவக்கத்தில் வரும் சகட்டுமேனியான கொலைகள் – ஷங்கர்
  9. நந்தா (பாடல் கூட நன்றாக இருக்கும் – ஓராயிரம் யானை கொன்றால்… பரணி) – இயக்குனர் பாலா
  10. நான் சிகப்பு மனிதன் – ரஜினி + எஸ்.ஏ. சந்திரசேகர்

கொசுறு:

அ) நாயகன் படத்தின் கொலைகளைப் பற்றிப் பேசாமல் இந்தப் பதிவு முழுமையாகாது

ஆ) அன்னியன் படமும் தொடர்கொலைகள், வித விதமாக அரங்கேறும் சித்திரைவதை பலிகள்.

இ) கடைசியாக, சமீபத்திய சுப்பிரமணியபுரம் (சசிகுமார்)

ஈ) மூன்று முடிச்சு – பாலச்சந்தரும் ரஜினிகாந்த்தும் கமலைக் காப்பாற்றாமல் கைவிடுவது கொலையா?

உ) யார்

ஊ) சிகப்பு ரோஜாக்கள் – பாரதிராஜா + பாக்யராஜ்

எ) விடிஞ்சா கல்யாணம் – மணிவண்ணன்

ஏ) பூவிழி வாசலிலே – ஃபாசில்

ஐ) மௌனம் சம்மதம் (மம்முட்டி + அமலா)

ஒ) கலைஞன் – கமல்

ஓ) சாவி

ஔ) ஆயிரத்தில் ஒருவன்: ஒருவரை “அரவான்’ போல பட்டினி நிமித்தமோ/ போரின் நிமித்தமோ பலியிடுவதாக ஒரு காட்சி இத்திரைப்படத்தில் இருக்கும். பலியிடல்கள்.

ஃ) மதுரை வீரன்: மாறுகால் மாறுகை என்று என் மாணவ பருவத்தில் பார்த்த படம். மனம் பதைபதைத்து போய்விடும்.

List of Tamil Juries for Sahitya Academy: சாகித்ய அகாடெமி ஜூரி பட்டியல்

In India, Lists, Literature, Tamilnadu on ஜூன் 1, 2012 at 8:20 பிப

சாஹித்ய அகாதெமி விருதில் நடுவர் குழுவில் இடம்பெற்றவர் யார்?

இவர்களில் எத்தனை பேர் விமர்சகர்கள்?

இலக்கிய ரசிகர்கள் என்று பெயர் எடுத்தவர் இருக்கிறார்களா?

படைப்பிலக்கியத்திலும் புனைவிலும் ஆளுமைகளா?

பத்திரிக ஆசியர்கள் உண்டா?

எவ்வளவு பேர் எவ்வித அரசியல் சார்பு கொண்டவர்கள்?

அவர்களின் கம்யூனிச, சித்தாந்த சாய்வு நிலை என்ன?

யார் தோழருக்கு நண்பர்?

  1. Dr. Abdul Rahman – அப்துல் ரெஹ்மான்
  2. Dr. E. Sundaramurthi – ஈ. சுந்தரமூர்த்தி
  3. Dr. K. S. Subramanian – கே. எஸ். சுப்ரமணியன்
  4. Dr. M. Palaniappan – எம். பழனியப்பன்
  5. Dr. R. Kumaravelu – ஆர். குமாரவேலு
  6. Dr. S. Chandra – எஸ். சந்திரா
  7. Prof. K. Chellappan – கே. செல்லப்பன்
  8. Smt. Madana Calliyani – மதன கல்யாணி
  9. Sri Kalladan – கல்லாடன்
  10. Sri Kovai Gnani – கோவை ஞானி
  11. Sri Kurinjivelan – குறிஞ்சிவேலன்
  12. Sri Samakodangi Ravi – சாமகோடங்கி ரவி
  13. Sri Tamilnadan – தமிழ்நாடன்
  14. Sri Thopil Mohamad Meeran – தோப்பில் முகமது மீரான்
  15. Sri V. Sabanayagam – வே சபாநாயகம்