Snapjudge

Posts Tagged ‘விமர்சனம்’

Bala’s Paradesi: How he should have taken the movie?

In Movies, Tamilnadu on மார்ச் 23, 2013 at 4:02 முப

பரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…

  1. இடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.
  2. தன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
  3. இரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.
  4. தமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.
  5. தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.
  6. படத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம்?! கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.
  7. முன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.
  8. தேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.
  9. ஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.
  10. இந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.

நிறைவேற்றுவதற்கு பெட்டிஷன் போட்டிருக்கிறேன்.

காவல் கோட்டம்: எஸ் ராமகிருஷ்ணன் விமர்சனப் பத்து

In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப

நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு

1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.

2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.

3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.

4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.

5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.

6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.

7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.

இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.

கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.

8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme

இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.

கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.

10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?

அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.

S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

In Books, Lists, Literature on ஜூன் 21, 2012 at 3:28 முப

முந்தைய எஸ் ராமகிருஷ்ணன் வீடியோ பதிவுகள்:

* Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

* Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

* S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

1. ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகம் – தமிழச்சி தங்கபாண்டியன் நடிக்கிறார்

2. நீயா நானா – புத்தக வாசிப்பு ஏன் அவசியம்?

3. சென்னை புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் இதழின் புத்தக வெளியீடு

4. தமிழ் கவிதைச் சூழல் – நூல்களும் கவிஞர்களும்: தமிழ்நாடு & ஈழம்

5. அன்னா கரேனினா – கரீநிநா கதையும் ஃபேஸ்புக் கலாச்சாரமும்

12 Hot Books on Indian Culture & Arts in Tamil for the Chennai Book Fair

In Books, Religions, Tamilnadu on ஜனவரி 4, 2012 at 5:50 பிப

தமிழ் ஹிந்து (TamilHindu.com) பரிந்துரைக்கும் புத்தகங்கள்:

  1. திராவிட மாயை: ஒரு பார்வை
    ஆசிரியர்: சுப்பு
    பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
    பக்கங்கள்: 320
    விலை: Rs.125
    தொலைபேசி எண்: 044-42970800
  2. ஓடிப்போனானா? – ஹரி கிருஷ்ணன்
    கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி
  3. சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்
    அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
    வெளியீடு: தமிழ்ஹிந்து.
    ISBN: 978-81-910509-1-2
    பக்கங்கள்: 48
    விலை: ரூ. 35
  4. பண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள்
    Pages 256
    Price: Rs 120.00
  5. ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
    Aravindan Neelakandan
    Pages 80
    கிழக்கு
    Price: Rs 30.00
  6. உடையும் இந்தியா?
    உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
    ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்
    வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
    ISBN: 978-81-8493-310-9
    பக்கங்கள் : 768
    விலை: ரூ. 425.
    இணையம் மூலம் வாங்கலாம்.
  7. எம். சி. ராஜா சிந்தனைகள்
    பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-
    தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.
    எழுத்து பிரசுரம் ::Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004
  8. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
    அரவிந்தன் நீலகண்டன்
    கிழக்கு பதிப்பகம்
  9. ஆரிய சமாஜம்
    Malarmannan
    Pages 112
    Price: Rs 65.00
  10. தோள்சீலைக் கலகம்தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்
    ஆசிரியர்கள்: எஸ்.ராமச்சந்திரன் & அ.கணேசன்
    வெளியிடுவோர்: தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்
    விலை: ரூ. 100
    பக்கங்கள்: 192
  11. மதச்சார்பின்மை
    அடல் பிகாரி வாஜ்பாய் – ரூ. 10/-
  12. நிகரில்லா நிவேதிதா :: (விலை ரூ 45/-)
    நூல் வெளியிடுவோர்:
    ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:
நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி
நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.
விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

‘Unnai Pol Oruvan’s lurking messages: What are the Hidden themes from Kamal?

In Movies, Tamilnadu on செப்ரெம்பர் 21, 2009 at 8:52 பிப

திரைப்பட அனுபவ, விமர்சன, நுண்ணரசியல், கமல் என்னும் நடிகன் vs பிரச்சாரகர், இன்ன பிற தொகுப்பு: உன்னைப் போல் ஒருவன்


இலவசக்கொத்தனார் கண்டுபிடித்தவை

  1. வெள்ளைக் கமல். வெள்ளை லட்சுமி. இருவரும் சேர்ந்து நிறம் மட்டாக இருக்கும் லாலை வதைப்பது – 6 minutes ago
  2. காய்கறி மட்டுமே வாங்கிச் செல்வதன் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிப்பதில் மாமிசம் உண்பவர்களை மட்டம் தட்டுவது – 10 minutes ago
  3. ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வது – 11 minutes ago
  4. நடாஷா என்ற அன்னிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடன் – 14 minutes ago
  5. மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அனைவரும் அடங்கி இருப்பது – 16 minutes ago
  6. காந்தியை கரம்சந்த என்றே அழைப்பது. காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. – 16 minutes ago
  7. போலீஸ் ஸ்டேஷனில் பாம் வைத்துவிட்டு வெளியில் வரும் பொழுது கையைக் கழுவிக்கொண்டு வராத லாஜிக் பிழை – 24 minutes ago

samsudeen_ariff

கரிகாலனுக்கு ஒரு வார்த்தை கூட வசனம் கிடையாது, நடாஷா கேள்வி கேட்கும் போது கூட தலைய மட்டுமே ஆட்டுகிறார் வாய் திறக்கமாட்டேன்கிறார் – 15 minutes ago

dynobuoy

  1. கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசர் இந்த படத்தில் வராதது,மனுஷ்யபுத்திரனின் பாடலும்இருட்டடிப்பு – கண்டிப்பா -துவா! – less than 10 seconds ago
  2. மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை… பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா? – 7 minutes ago
  3. கமல் மோகன்லாலுடன் பேசும் முக்கிய காட்சியில் அவருக்கு பின்னே இரண்டு கம்பிகள் தெளிவாக இருக்கும் – ட்வின் டவர்ஸ்? – 11 minutes ago
  4. சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland’னு இருக்கு… அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா? – 23 minutes ago
  5. லென்சு வச்சு பார்த்தா பாமோட வலது மூலை பக்கத்துல“Made in P…”னு இருக்கே, என்ன சொல்லவர்றார்? – 25 minutes ago
  6. தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? – 27 minutes ago
  7. ”ராம் ஜானே”ன்னோ, “பீட்டர் ஜானே”ன்னோ பாட்டு வைக்கலையே ஏன்? அந்த சாமிகளுக்கு தெரியாதா? – 28 minutes ago
  8. முகம்மதுகுட்டி என்ற மம்முட்டியை நடிக்கவைக்காமல், மோகன்லால் என்ற நாயரை தேர்ந்தெடுத்த நுண்ணரசியல்னு :)) – about 1 hour ago
  9. ஒரு காட்சியில் கமல் கழுத்து சுளுக்கு எடுப்பதைப்போல தலையாட்டுவார், கவனித்தீர்கள்னா அது துஆ செய்யறதைபோலவே இருக்கும்! – 2 minutes ago
  10. கமல் கையை கோர்த்திருக்கும் ஸ்டைல் ஒரு கிருஸ்துவர் சர்ச்சில் ப்ரே செய்வதைபோலவே இருக்கும்.மற்ற கமல் படங்களில் அது இல்லை! – 19 minutes ago

Sujatha Story Analysis in Numbers by Jeyamohan

In Books, Literature on மார்ச் 13, 2009 at 9:44 பிப

ஜெயமோகன் :: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் சுஜாதா :: உயிர்மை பதிப்பகம்

சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:

  1. சுருக்கம்
  2. நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு

சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:

  1. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
  2. குறைவான கதைமாந்தர்
  3. சிறிய கால அளவு
  4. மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்

அவரது கதைகளின் பலம்:

  1. வலுவான வடிவ உணர்வு
  2. நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.

சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:

  1. பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
    • ஒரே ஒரு மாலை
    • வழி தெரியவில்லை
    • சென்ற வாரம்
  2. பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம்.  உதாரணமாக
    • அம்மா மண்டபம்
    • கள்ளுண்ணாமை
    • கால்கள்
    • கரைகண்ட ராமன்

சுஜாதாவின் தொடக்கம்

  1. ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
  2. ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
  3. அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.

அவரது கதைகளின் வகை.

  1. நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
    • மகன் தந்தைக்கு
    • வீடு
    • சிலவித்தியாசங்கள்
    • செல்வம்
    • எல்டொராடோ
    • ரேணுகா
  2. . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.  உதாரணமாக
    • பார்வை
    • ரஞ்சனி
    • நீர்
    • நிபந்தனை
    • நிதர்சனம்
    • சாரங்கன்.
  3. உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
    • சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது.
    • மாமாவிஜயம்
    • சார் இந்த அக்கிரமத்தை
  4. ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
    • நகரம்
    • முரண்
    • நிலம்
    • நொ ப்ரொப்ளாம்
    • எப்படியும் வாழலாம்
    • பாரீஸ் தமிழ்ப்பெண்

சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்

  1. சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
  2. சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
  3. சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
  4. சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.

நான் கடவுள்: பாலா & ஜெயமோகனின் பத்து க்ளைமேக்ஸ்

In Lists, Movies, Tamilnadu on மார்ச் 3, 2009 at 5:22 பிப

நான் கடவுள் படத்திற்கு இன்னொரு உச்சகட்ட காட்சியை நெறியாளுநர் பாலா அமைத்திருந்தார்.

தற்போதைய உச்சகாட்சி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், இதை வைத்து மாற்றியமைத்து, அரங்கிற்கு மீண்டும் பார்வையாளர்களை அழைக்கலாம் என்பது சாதாரணமாக சினிமா இயக்குநர்கள் செய்வதுதான்.

அந்த இன்னொரு க்ளைமாக்ஸ் என்ன? அப்படி என்னதான் டைரக்டர் பாலா யோசித்திருந்தார்?? எதை எழுத்தாளர் ஜெயமோகன் மாற்று முடிவாக கதைக்கு எழுதிக் கொடுத்தார்???

10 ஹாட் எக்ஸ்க்ளூசிவ்:

  1. தாண்டவனும் அகோரி. ருத்ரனை தாண்டவன் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். literally.
  2. அம்சவள்ளியில் இந்த நிலைக்கு பழநி முழு முதற்காரணம். தொடர்வண்டியில் கண்டுபிடித்து, காவல்நிலையத்தில் வாங்கி, பிச்சைக்கு தயார் செய்தது அவரே. (தாண்டவனுக்கு பதிலாக) பழனியை ருத்ரன் சாகடிக்கிறார்.
  3. துவக்கத்தில் இருந்து பூஜாவின் எந்தக் கோரிக்கைக்கும் எந்தக் கடவுளும் செவிசாய்க்கவில்லை. தொலைநோக்குப் பார்வையற்ற ஆர்யாவின் மதியில்லாத செயலினால், ஆர்யாவின் அம்மாவுக்காக பரிந்து பேசியதைப் போல் விளக்கிச் சொல்லாமல் தடாலடியாகத் தீர்த்துக் கட்டியதால், அழகும் குலைந்ததால், அம்சவள்ளி நான் கடவுள் ஆகிறாள். ருத்ரனுக்கு ‘வர்தான்’ தருகிறார்.
  4. மலையாளத்தில் எழுதினால் இந்நேரம் ஜெயமோகனுக்கு சாகித்ய அகாதெமியும், கேரளாவினால் பாலாவிற்கு தேசிய கவனிப்பும் கிடைத்திருக்கும். எனவே, இதெல்லாம் மலையாள சேட்டனின் சூழ்ச்சி. முல்லைப் பெரியாறு போல் மொத்தமாக உருப்படிகளை அபகரிக்கும் திட்டத்திற்கு திராவிட தாண்டவன் பலியாகிறார்.
  5. தி டெவில்ஸ் அட்வகேட்: தாண்டவன் கடைசியில் உண்மையை சொல்கிறார். அவர்தான் ஆரியாவின் உண்மையான தந்தை. அவர் பிறிதொரு பிச்சைக்காரியுடன் உறவுகொண்டதில் பிறந்தவள் பூஜா. அமசவள்ளியும் மகள். இருவரையும் இணையச் சொல்கிறார்.
  6. தாண்டவன் பதுக்கி வைத்திருந்த அஞ்சு பைசா, பத்து பைசாக்கள் வெளிவருகிறது. இந்தியாவில் நிலவும் சில்லறைப் பஞ்சம் குறைகிறது. பணப்புழக்கம் ஏறுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
  7. ருத்ரன் பாகிஸ்தானில் வந்திருக்கும் தீவிரவாதி. வாரநாசி குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ருத்ரன் என்பதை தமிழகக் காவல்துறை துப்புதுலக்குகிறது.
  8. தாண்டவன் அழிந்தபின்பும் பகவான் காலபைரவருக்கு குடும்ப பந்தம் விலகவில்லை. ‘தசாவதார’ கோவிந்தும் ‘நான் கடவுள்’ ருத்ரனும் சந்திக்கும் தருணத்தில் சுனாமி நிகழ்கிறது. ருத்ரனுக்கு சரியான வேட்டை. இறுதியில் கமலும், பதினொன்றாவது கமல்ஹாசனாக இயக்குனர் பாலாவும் ‘யார் கடவுள்? நானே கடவுள்?’ என்று சண்டையிடுகின்றனர்.
  9. லகான் கடி குழு: தாண்டவன் ‘ஒண்டிக்கு ஒண்டி’ பதில், குழுப் போட்டிக்கு அழைக்கிறான். அவனுடைய டீமில் இருந்து பதினொன்று விளிம்புநிலையாளர்களும், ருத்ரனின் அகோரிக்கள் பதினோரு பேரும் இடையே கடிப் போட்டி. தாண்டவனின் கடி ஜோக்குகளுக்கு அகோரி சாமியார்கள் சிரித்துவிட்டால், காசி பிஷுக்கள் பிச்சையெடுக்க வந்துவிட வேண்டும். இல்லையென்றால், அகோரிக்களுக்கு உணவாகி விடுவார்கள்.
  10. கட்டாங்கடைசியாக — இடைவேளைக்கு அப்புறம் எவரும் திரையரங்கில் இருக்க மாட்டார். எனவே, அங்கேயே ‘தி என்ட்’ போட்டுடலாம் என்றிருப்பார் பாலா.

ஒரு ஷாட்டை வாசித்துப் பாருங்கள்

In Movies, Technology on ஜனவரி 26, 2009 at 3:03 முப

சினிமா பார்ப்பதென்பது ‘ஷாட்டை’ வாசிப்பது என்பதுதான். ப்ரஞ்சுக்காரர்களின் ‘Misc-en-scene’ எனும் கருத்தாக்கம் ஒரு ‘ஷாட்’டை reading செய்ய எளிதாக்குகிறது.

10 அம்சங்கள்:

1. ஷாட்: நிகழ்வுக்கும் கேமிராவுக்குமான் தூரம் எவ்வளவு?

2. கோணம் – Angle

3. ஒளியமைப்பு – Lighting

4. பிரதானமாக இருப்பது – Dominant: எவ்விதமாக ஈர்க்கிறது? நகர்விலா / ஒளியமைப்பிலா?

5. அடுத்ததாக கவனத்தை ஈர்ப்பது – Subsidiaries

6. ஒழுங்கமைவு – Composition

7. அமைப்பு – Form

8. செவ்வகவெளியைப் பயன்படுத்துதல் – Framing

9. அடுக்குகள் – Depth

10. பாத்திரங்கள் – பார்வையாளர் உறவு :: Staging Position

நன்றி: சினிமா: ஓர் அறிமுகம் இரா பிரபாகர் (கனவுப்பட்டறை வெளியீடு)