தமிழ் எழுத்துலகில் நிகழ்ந்துள்ள சமீபகால புரட்சி பிளாக்குகள்
1. இட்லிவடை
www.idlyvadai.blogspot.com
`பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா, பன்ச் வெச்சா இட்லி தாண்டா’ என பன்ச் டயலாக்குடன் அறிமுகமாகும் இந்த பிளாக்குக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், அதுதான் இதன் பலமும்கூட. முகம் தெரியாததால் தைரியமாக கருத்துச் சொல்கிறார்கள்.
2. திணை இசை சமிக்ஞை
www.nagarjunan.blogspot.com
சிறுபத்திரிகை எழுத்தாளர், ஆம்னஸ்டிக் இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் என பன்முகம் கொண்ட நாகார்ஜுனின் பிளாக். இந்த பரந்த அனுபவம் இவரது பலம். அதிகம் சீரியஸான விஷயங்களைத்தான் எழுதுகிறார்.
3. பிகேபிஇன்
www.pkp.blogspot.com
அமெரிக்கா சாஃப்ட்வேர்காரரான பி.கே.சிவகுமாரின் பிளாக். பிரசித்திப் பெற்ற அலெக்ஸா டாட் காம் சர்வேயில் நிறைய பேர் படிக்கும் தமிழ் பிளாக்காக தேர்வு செய்திருந்தார்கள். பொது அறிவு விஷயங்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார்.
4. எண்ணங்கள்
www.thoughtsintamil.blogspot.com
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியின் பிளாக். எல்லாவற்றைப் பற்றியும் தன் எண்ணங்களை எழுதியுள்ளார். எப்படி தமிழிலேயே டைப் செய்வது, ஃபாண்டுகளை மாற்றுவது என்பது உட்பட தமிழ் மென்பொருள்கள் பற்றியும் அறிவியல் விஷயங்களையும் எளிமையாக எழுதியுள்ளார்.
5. யுவகிருஷ்ணா
www.luckylookonline.com

தி.மு.க.வின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத்தான் பிளாக் தொடங்கியுள்ளதாக சொல்கிறார் இவர். படுசீரியஸாகவும் இல்லாமல் மொக்கையாகவும் இல்லாமல் நடுவாந்திரமாக எழுதுவதால் அனைத்து தரப்பினராலும் படிக்கப்படுகிறார்.
6. பரிசல்காரன்
www.parisalkaaran.com

திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமார் பிளாக். மே 2008ல்தான் தொடங்கியிருக்கிறார். நிறைய எழுதுவதால் குறுகிய காலத்திலேயே ஹிட் ஆகிவிட்டார். யூத் பிளாக்கர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு.
7. அதிஷாவின் எண்ண அலைகள்
www.athishaonline.com

பிளாக்கர்களின் பலமான மொக்கைத்தனமும், சகட்டுமேனிக்கு அடிக்கும் கிண்டலும்தான் இவரது பலமும். எந்த புது சினிமா வெளியானாலும் முதல் காட்சி முடிந்து இரண்டாவது காட்சி ஆரம்பிப்பதற்குள் இவர் விமர்சனம் வெளியாகிவிடும்.
8. மொழிவிளையாட்டு
www.jyovramsundar.blogspot.com
சென்னையைச் சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர் பிளாக். சிறுபத்திரிகை வட்டாரத்தில் பின்நவீனத்துவம் பேசுபவர்கள் குறைந்துவிட்டாலும், பிளாக்கில் ஒரு பெரிய அணியே இருக்கிறது. அவர்களில் இந்த பிளாக் பிரசித்தமானது.
9. சத்தியக்கடுதாசி
www.satiyakadatasi.com

ஈழத்து எழுத்தாளரான ஷோபாசக்தியின் பிளாக். இலங்கைப் பிரச்னை பற்றி இவர் அபிப்ராயத்தைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அ.மார்க்ஸ், ராஜன்குறை போன்ற சிறுபத்திரிகை பிரபலங்களும் எழுதுகிறார்கள்.
10. ஸ்மைல் பக்கம்
www.livingsmile.blogspot.com

திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் பிளாக். இலக்கியமும் சினிமா-வும் அதிகம். சினிமாகாரர்கள் திருநங்கைகளை சித்திரிக்கும் விதம் பற்றி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
– தளவாய் சுந்தரம் |