எனது பெயரை கொலை செய்வதே அமெரிக்கர்களுக்கு குலத் தொழில் என்பது போல் போலாஜி என்றும், பலாச்சீ என்றும், பாலாயீ (j சில மொழிகளில் அமைதியாக உச்சரிக்கப்படும்) என்றும், பாலாஹீ (j சில மொழிகளில் h என்று உச்சரிப்பாகிறது) என்றும் இஷ்டத்திற்கு விளிக்கப்படுகிறது.
அவர்கள் நியாயப்படி இது பெயர்ச்சொல். சானியா, சாணியோ, சான்யோ, ஸாண்டியாகோ என்று எப்படி வேண்டுமானாலும் கதைப்படி புனையலாம் என்கிறார்கள்.
அவ்வாறு நம் எழுத்தாளர்களில் எத்தனை பேர் யெவ்கெனி என்று எழுதுகிறார்கள். ருசிய மொழியில் யுஜீன் என்று அழைப்பதை எவ்வாறு பெயர்மொழிகிறார்கள் என்னும் ஆராய்ச்சி ஏழின் முடிவுகள்:
(இந்த வரிசை கூகிள் தேடலில் வந்த வரிசை)
1. உலைகள்…ஊழல்கள்…. « திண்ணை – ஞானி
ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்ட மிகப்பெரிய உயர் அதிகாரி ரொசாட்டமின் துணை இயக்குநர் யெவ்கெனி யெஸ்தரோவ்.
2. ஓ, மரியா! | பா. ராகவன்
கூடவே அலெக்சாண்டர் கஃபேல்நிகாவ் என்ற நண்பரும் கிடைத்தார். அவரது மகன் அப்போது ஒரு டென்னிஸ் ஸ்டார். யெவ்கெனி என்று பெயர். பெரிய சாம்பியன்.
3. ஒரு லோட்டா இரத்தம் பேயோன்
செம்யனோவ்களில் யாரையும் நான்அறிந்திருக்கவில்லை எனினும் யெவ்கெனி செம்யனோவை அரிதாக நடன விழாக்களில் காண்பதுண்டு.
4. இறுதி யந்திரம் (சிறுகதை) » எழுத்தாளர் ஜெயமோகன்
(1999 ல் வெளிவந்த பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் சிறுகதைகளில் ஒன்று)
“வியப்புதான். அப்படியொரு பெயர் இவற்றில் கையாளப்பட்ட தடயமே இல்லை.”
என்றார் யெவ்கெனிஃபதயேவ்.
5. எம்.ஏ.சுசீலா: அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 2
’’ஒரே மனிதனால்..ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பெண்களை நேசிக்க முடியும்?அதுவும் இரண்டும் இரு வேறு வகைப்பட்ட அன்பு..இது மிகவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.பாவப்பட்ட முட்டாள் இந்த இளவரசன் மிஷ்கின்..’’ – யெவ்கெனி பேவ்லோவிச்
6. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
பயங்கரவாதம் – புதிய அமெரிக்க ஆயுதம் by யெவ்கெனி லுகவோய் நிக்கொலாய் இலின் (yevkeni lukavooy nikkolaay ilin)
Year : 1985
7. விக்கிப்பீடியா – பல பக்கங்கள்