Snapjudge

Posts Tagged ‘முக்கியம்’

நான் அறிந்த நெட் நாட்டாமைகள்

In Blogs, Tamilnadu on நவம்பர் 16, 2011 at 4:11 முப

இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் எல்லோருமே சில காலம் முன்பு புகழ்பெற்றவர்கள். சச்சின் டெண்டுல்கர் போல் இப்பொழுதும் களத்தில் இருக்கலாம். காஜி கேட்கலாம். ஆனால், பதின்ம வயதின் சச்சின் போல் பத்தாண்டுகளுக்கு முன்பு ரவுண்டு கட்டியவர்கள்.

நெட் நாட்டாமையின் மாண்புகள் என்ன?

  • நிறைய வாசிக்க வேண்டும்; அவனப் பத்தியும் எவளப் பத்தியும் சுட்டத் தெரிய வேண்டும்.
  • எல்லோருக்கும் ஒன்பது துவாரம் இருக்கலாம். ஆனால், யூஸ் செய்வது முக்கியம். அனைவரும் எழுதலாம். காத்திரமான கருத்து வேண்டும்.
  • அச்சில், திரையில் கொடி பறக்ககூடாது.
  • மறுமொழி இடுவதற்கு அசரமாட்டார். வாக்குவாதத்தில் கெட்டி.
  • முசுடு கிடையாது. பெருங்கோபமிருக்கும் இடத்தில்தானே, நோ நான்சென்ஸ் குணம் இருக்கும்!?
  • நிர்வாகி. ஒருங்கிணைப்பாளர். பின்னணியில் செயல்படும் காரியவாதி.
புகழ்பெற்ற தமிழ்ப்பதிவர்களைப் பற்றி சொல்லும்போதே நாட்டாமையின் குணாதிசயங்களை அறியலாம்:
  1. பெயரிலி:
    பிள்ளையார் சுழி மாதிரி இவரைப் போடாவிட்டால் எந்தப் பட்டியலும் சரிப்படாது. புனிதப் பசுவாக இருக்கட்டும்; சுய எள்ளல் ஆகட்டும்; எல்லாவற்றிலும் பாயும் புலி.
  2. பாலபாரதி:
    நெட்டில் மட்டுமே அதிகாரம் செலுத்தியவர்களின் மேற்சென்று, ரியலிசத்திலும் நாட்டாமையாக முன்னின்று பஞ்சாயத்து செய்தவர். ட்ரைவ் இன் வுட்லண்ட்ஸ் தயிர் வடை கோஷ்டியைத் தாண்டி சென்னைப் பதிவர்களை பட்டறை போட்டவர்.
  3. பி கே சிவகுமார்:
    தனி மரம் தேர்தல் சின்னமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், தோப்பாகாது. தனக்குப் பின்னே அன்பால் அமைந்த கூட்டணி கொண்டவர். பிரபாகரன் தொட்டு முதலியம் வரை பேசாப் பொருள்களுக்கு குத்து விளக்கேற்றியவர்.
  4. நேசகுமார்:
    மண்டனமிஸ்ரரின் மனைவியிடம் தோற்ற ஆதிசங்கரராக இஸ்லாம் கற்றுத் தேர்ந்தவர். முகமது சொன்னதை முல்லாக்களும் அறியாத காலத்தில், முஸ்லீம்களுக்கும் முகத்தை களைய நினைத்தவர்களுக்கும் மண்டை காய வைத்தவர்.
  5. மதி கந்தசாமி:
    தமிழ்மண நட்சத்திரமா? சிறுகதைப் போட்டியா? நுட்பக் கோளாறா? எல்லாவற்றுக்கும் விடையும் நேரமும் வைத்திருந்தவர். தீர்க்கமான தலைமை & தொலை நோக்கம் என்பதற்கு பாடமாக விளங்கியவர்.
  6. முகமூடி:
    சிலருக்கு இவர் புழு – நசுக்க நினைத்தார்கள். சிலருக்கு இவர் பட்டாம்பூச்சி – கேயாஸ் தியரி என்பார்களே… அது மாதிரி அடுக்கடுக்கான மாற்றங்களை உருவாக்கினவர். PMK விரிவாக்கத்தை நினைவில் நிறுத்தியது மட்டுமல்ல. திராவிடத்தின் தோலுரிப்புகளையும் அபிமன்யுவாக கையாண்டவர்.
  7. முத்து தமிழினி:
    விவாதங்களில் கெட்டித் தயிர்; கொள்கை விளக்கங்களில் வெண்ணெய்; நேர்ப்பேச்சில் வழிந்தோடும் மோர்; அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் தூய்மையான வெள்ளந்தி பால்.
  8. குழலி:
    ஒருவன் ஒருவன் முதலாளி என்னும் தேய்பதத்திற்கு உள்ளாகும் அபாயம் இருந்தாலும், அவர்களுக்குக் கிடைத்த உபாயம்.
  9. டோண்டு ராகவன்:
    மூர்த்தியா? இவரா? என்னும் ஒண்டிக்கு ஒண்டி பலப்பரீட்சையில் எல்லோரும் ஒதுங்கிக் கொள்ள, அசராமல் ஆடி ஜெயித்த வீரர்.
  10. ரோசா வசந்த்:
    பூர்ஷ்வா, ரோசா போன்ற நேம் டிராப்பிங் இருக்கும். இளையராஜா என்னும் அணுக்கமும் இருக்கும். கொண்ட முடிவின் கறார்த்தனத்திற்கு ஜெயலலிதாவே வெட்கப்பட வேண்டும். விலாவாரியாக எதிர்வினையின் நீள அகல ஆழத்தைக் கண்டு ஜெயமோகனே நாணங்கொள்ள வேண்டும்.
தூக்கக் கலக்கத்தில் விட்டவர்களை நினைவூட்டவும்.

10 Reasons to be Proud about India

In India, Questions on மார்ச் 10, 2009 at 8:49 பிப

  1. நிஜ வாழ்க்கை நாயகர்கள் (காட்டாக புத்தர், காந்தி)
  2. மத நல்லிணக்கம்
  3. இயற்கை அழகு, வனம், மலை
  4. மொகஞ்சதாரோ காலத்தில் துவங்கிய சரித்திரம்
  5. யானை, மயில்
  6. பூஜ்யம், வான சாஸ்திரம், ஆரோக்கிய வாழ்க்கையை ஒட்டிய அறிவியல் கலாச்சாரம், கட்டிடக் கலை போற்றும் கோவில்
  7. உணவு
  8. சினிமா, இசை
  9. படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விடாமுயற்சியில் நம்பிக்கை, உயரத் துடிக்கும் ஆர்வத்தின் மேல் பிடிப்பு தரும் குணாம்சங்கள்.
  10. இந்தியக் களையுடன் தென்பட்டால், ‘ஆர் யூ ஃப்ரம் இந்தியா’ என்று உரிமை கலந்த நட்போடு அறிமுகம் செய்து கொள்ளும் அன்னியோன்யம்.