1. மதம்: குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சீக்கிரமே சொர்க்கம் அனுப்பும் திட்டத்தை அன்னை தெரஸா ஆரம்பித்தார்; சட்டு புட்டென்று சிறார் செத்தால்தானே படுக்கை காலியாகும்!
2. சட்டம்: அன்னை தெரசாவைப் பொறுத்தவரை பிறந்து விட்ட குழந்தையைக் கொல்வது ஒகே; ஆனால், வன்புணர்வினாலோ, பதின்ம வயது பருவக் கோளாறினாலோ, ஏழை வீட்டில் பத்தாவதாக பிறக்கும் மகவையோ கருக்குலைப்பது குற்றம்.
3. அரசியல்: குவாடாமாலா கொலைகளுக்கு முலாம் போட்டதாகட்டும். மத்திய அமெரிக்க சண்டைகளுக்கு ஆசி வழங்கியது ஆகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்; அதே சமயம் எப்போதுமே கொடுங்கோலரின் கனவு போல் வாடிகனுக்காக போரிட்டவர் மதர் தெரசா.
4. சுயநலம்: பத்தாயிரம் மில்லியன் எல்லாம் எண்பதுகளிலேயே புரண்ட தொண்டு நிறுவனம் மிக மிக சிறப்பான படுக்கைகளையும் மருத்துவ சிகிச்ச்சைகளையும் கவனிப்பாளர்களையும் நோயாளிகளுக்கான வசதிகளையும் செய்து தந்திருக்கலாம். ஆனால், அன்னை தெரசாவோ, தன் பெயரில் நூற்றி ஐந்து நாடுகளில் ஐநூறு கான்வெண்டுகளைத் தன் நிறுவனத்திற்காக திறந்து கன்னியாஸ்திரீகளை சேர்க்க ஆரம்பிக்கும் திருப்பலியை மேற்கொள்கிறார்.
5. குற்றவுணர்ச்சி: மேற்கத்திய உலகிற்கு நாம் மட்டும் நல்ல வாழ்க்கையில் திளைக்கிறோம்; அதே சமயத்தில் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் வறுமையில் வாடுகிறார்கள் என்னும் எண்ணம் நிறைந்த எழுபதுகளில் உதித்தவர். வெள்ளைக்கார பெண்மணியாக சேவை செய்தவர். அமெரிக்க மகளிர் பீச்சில் உல்லாசமாய் இருக்கும்பொழுது எழும் தர்மசங்கடமான வருத்தத்தை சிம்பாலிக்காக கலைத்தவர்.
6. சாதாரணரை வளரவிடாத அடக்குமுறை: சாலையில் செல்லும்போது நாய் அடிபட்டுக் கிடந்தால் என்ன செய்வீர்கள்? மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, காலை சரி பார்த்து நடக்க வைப்பீர்கள். ஏழைகளுக்கு கடன் கொடுத்து, நிமிர்ந்து நடக்க வைப்பது அது போன்றது. நாய் கால் விந்தி விந்தி நடந்தால் கூட முடக்கி மூலையில் உட்கார வைப்பது தெரசாவின் லட்சியம்.
7. பொருள்முதல்வாத போராளி: போபால் விஷவாயு கசிவினால் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டபோது, யூனியன் கார்பைட் நிறுவனத்தை மன்னித்து சும்மா விட்டு விடுங்கள் என்பார். ஹைதி நாட்டில் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பட்டயம் வழங்குவார். கிறித்துவத்திற்கு பணம் கொடுக்கும் எந்த அட்டூழியத்திற்கும் துணை நிற்பார்.
8. பாசிசம் (fascism): முசோலினியும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் மதர் தெர்சாவினால் ஆனுதாபிகளாகப் கொண்டாடப்பட்டவர்கள். அல்பேனிய சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார விஷயங்கள் தீர்மானிப்பவர்களையும், முதலாளிகளையும் வாழ்த்தி வணங்கியவர் அன்னை தெரசா.
9. ஏழைகளிடமிருந்து திருடியவர்: சென்றதெல்லாம் தனியார் விமானம்; சொகுசு கார்; உலகம் எங்கும் சுற்றுலா; இத்தனை கோடி நிதி திரட்டினாலும் கொல்கத்தா வறியவர்களுக்கு ஆஸ்பிரின் கூட கொடுக்காத கெடுபிடி சிறை. இவருக்கு இத்தனை பணம் ஏற்பாடு செய்து தந்த கீட்டிங் போன்ற பலர், தற்போது திருட்டுக் குற்றங்களுக்காக சட்டப்படி தண்டனை அனுபவிக்கின்றனர். பெற்றுக் கொண்ட அன்னை தெரசா ஞானி ஆகிறார்.
உசாத்துணை: Chatterjee’s book Mother Teresa: The Final Verdict is available on-line. Click here.
அடுத்தவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்காமல், தண்ணீரில் தள்ளிவிட்டு காப்பாற்றிக் கொண்டேயிருந்தவர். தெரசா போன்றவர்கள் இந்தியாவை வறுமையான நாடாக அடையாளம் காட்ட பயன்பட்டார்கள். மேற்கத்திய உலகின் கரிசனையை முழுப்பக்க விளம்பரமாக எடுத்துப் போட உதவினார். அவரின் நிறுவனத்தில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சம் காட்ட இந்திய ஊடகங்களே தயங்கினதால், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை நிறைவேற்றுவதும் எளிதாகியது.
தமிழ் ஹிந்து (TamilHindu.com) பரிந்துரைக்கும் புத்தகங்கள்:
திராவிட மாயை: ஒரு பார்வை ஆசிரியர்:சுப்பு பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
பக்கங்கள்: 320 விலை: Rs.125
தொலைபேசி எண்: 044-42970800
ஓடிப்போனானா? – ஹரி கிருஷ்ணன்
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி
பண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள் Pages 256 Price: Rs 120.00
ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம் Aravindan Neelakandan Pages 80 கிழக்கு Price: Rs 30.00
உடையும் இந்தியா?
உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன் வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ISBN: 978-81-8493-310-9
பக்கங்கள் : 768
விலை: ரூ. 425. இணையம் மூலம் வாங்கலாம்.
எம். சி. ராஜா சிந்தனைகள்
பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-
தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.
எழுத்து பிரசுரம் ::Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004
பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
அரவிந்தன் நீலகண்டன்
கிழக்கு பதிப்பகம்
ஆரிய சமாஜம் Malarmannan Pages 112 Price: Rs 65.00
தோள்சீலைக் கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் ஆசிரியர்கள்: எஸ்.ராமச்சந்திரன் & அ.கணேசன் வெளியிடுவோர்: தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் விலை: ரூ. 100 பக்கங்கள்: 192
நிகரில்லா நிவேதிதா :: (விலை ரூ 45/-) நூல் வெளியிடுவோர்: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்: நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை. விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.
சீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.
பெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:
“தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?”
– இந்திரா பார்த்தசாரதி 80
இந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல்? எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார்? யார் சொன்னால் பேச்சு எடுபடும்? எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:
கொசுறு: Questions: Sujatha Answers on God, Art movies (Kumudam): உங்களின் கடவுள் பக்தி பற்றி எங்கேயும் தெளிவாகக் கூறாமல் நாமம் போடுகிறீர்களே… முதலில் நம்பி, பிறகு நம்பாமல் விட்டீர்களா? முதலில் நம்பாமல் இருந்து பிறகு நம்பினீர்களா? நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருக்கிறீர்களா?