Snapjudge

Posts Tagged ‘பா ராகவன்’

எஸ்.ரா. போல் நீங்களும் தொகுப்பாசியராக 9 வழிகள்!

In Books, Business on ஜனவரி 7, 2014 at 4:14 முப

1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.

2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.

3. ஆம்னிபஸ்அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.

4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.

5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.

6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.

7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.

8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.

9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.

Writerpara picks Best Screenplays from Tamil Movies

In Movies, Tamilnadu on செப்ரெம்பர் 21, 2009 at 7:13 பிப

Source: திரையும் கதையும் – எழுத்தாளர் பா ராகவன்

சிறந்த திரைக்கதைகள் பட்டியல்

1. சிந்து பைரவி [கே.பாலசந்தர்]

2. மறுபடியும் [பாலுமகேந்திரா]

3. இருவர் [மணி ரத்னம்]

4. இது நம்ம ஆளு [கே. பாக்யராஜ்]

5. ராசுக்குட்டி [கே. பாக்யராஜ்]

6. டார்லிங் டார்லிங் டார்லிங் [கே. பாக்யராஜ்]

7. ஹே ராம் [கமல் ஹாசன்]

8. குருதிப்புனல் [கோவிந்த் நிஹலானி – கமல்ஹாசன்]

9. மொழி [ராதா மோகன்]

10. அபியும் நானும் [ராதா மோகன்]

11. சுப்பிரமணியபுரம் [சசிக்குமார்]

12. நாடோடிகள் [சமுத்திரக் கனி]

13. முதல் மரியாதை [பாரதிராஜா]

14. பாய்ஸ் [ஷங்கர்]

15. நாட்டாமை [கே.எஸ். ரவிக்குமார்]

16. கோபாலா கோபாலா [ஆர். பாண்டியராஜன்]

17. பாட்ஷா [சுரேஷ் கிருஷ்ணா]

18. ஆத்மா [பிரதாப் போத்தன்]

19. நள தமயந்தி [கமல் ஹாசன்]

20. சூரிய வம்சம் [விக்கிரமன்]

21. சிவகாசி [பேரரசு]

22. போக்கிரி [பிரபுதேவா]

23. தூள் [தரணி]

24. சென்னை 28 [வெங்கட் பிரபு]

25. பூவெல்லாம் கேட்டுப்பார் [வஸந்த்]

Kanagvel Kaakka: What does the poster say?

In Lists, Misc, Movies on ஓகஸ்ட் 23, 2009 at 6:14 பிப

போஸ்டர் பாரு… ஒன்பது போடு!

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads

  1. அது என்ன! ஸ்கர்ட்டும் இல்லாமல், ஷார்ட்சும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவாந்தரமான ஆடை?
  2. கடற்கரையில் பச்சை புல்வெளி எப்படி சென்னையில் சாத்தியமில்லையோ… அது போல் பீச் வாலிபாலில் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வாங்குவதும் சாத்தியமில்லை.
  3. மிஸ்டி மே & கெரி வால்ஷ் போல் இருவர் கொண்ட அணியில் ஏன் ஐவர்! ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ? பா ராகவனாருக்கே வெளிச்சம்.
  4. திருவளர் செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. (வெண்)பா(ம்)கின்ற, பாடும், பாடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.
  5. பாராவின் ஒன்பது கட்டளைகள் பிரசித்தம். இது நாயகன் கரணின் சட்டையில் 99
  6. தன் தலையில் கைவைக்கக்கூடாது என்பார்கள். கன் வைக்கலாம்.
  7. அடைக்கப்பட்ட நூல்வேலி கம்பி கட்டத்திற்குள்ளிருந்து வெளியே குதிக்க பெண் கையை நீட்டுவது போஸ்டர் சங்கேதம்
  8. அதற்கும் ரகசிய வீடியோ கேமிரா வைத்து CCTV மூலம் கண்காணிப்பது கலிகாலம்
  9. வேல் எதைக் குறிக்கிறது என்று சொல்லவும் வேணுமோ?

Kanagavel-Kaakka-karan