Snapjudge

Posts Tagged ‘பழமொழி’

ஆ – 10+1 பழமொழிகள்

In Life, Misc, Tamilnadu on திசெம்பர் 29, 2018 at 5:57 பிப

முந்தைய பதிவு: அ – பத்து பழமொழிகள்

தமிழ் எழுத்து ஆ - கோலம்: Tamil Letter A (aa) - Kolam
  1. ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
  2. ஆயிரம் அரைக்காசு
  3. ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா?
  4. ஆயிரம் பொன் பெற்ற குதிரையானாலும் சவுக்கடி வேண்டும்.
  5. ஆயிரம் வித்தை கற்றாலும் உலகத்தில் ஆடம்பரம் வேண்டும்.
  6. ஆழ அமுக்கினாலும் நாழி நானாழி கொள்ளாது.
  7. ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய்.
  8. ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அருச்சுனன் மனைவியரை எண்ண முடியாது.
  9. ஆற்றோடே போனாலும் போவேன்; தெப்பக்காரனுக்குக் கூலி கொடுக்க மாட்டேன் என்றானாம்.
  10. ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவு மேல்.
  11. ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை பூனையைத் தரையில் இழுக்குமா?

அ – பத்து பழமொழிகள்

In Lists, Tamilnadu on திசெம்பர் 25, 2018 at 4:33 பிப

அ - தமிழ் எழுத்துக் கோலம் - A - Tamil Alphabets
  1. அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்
  2. அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
  3. அக்கினி மலையிலே கற்பூரம் செலுத்தியது போல்
  4. அடி போன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?
  5. அதிகாரியும் தலையாரியும் கூடி விடியுமட்டும் திருடலாம்
  6. அந்திச் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை
  7. அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா?
  8. அவர்களுக்கு வாய்ச்சொல்; எங்களுக்குத் தலைச் சுமை.
  9. அனகாபுரியிலும் விறகு தலையன் உண்டு
  10. அறுபது அடி கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்க வேண்டும்.

Ravan Special – 10 Proverbs for Ramayanam

In Literature, Misc, Movies, Religions on ஜூன் 20, 2010 at 4:25 முப

இராமாயணத்தை வைத்து புகழ்பெற்ற பத்து பழமொழிகள்:

  1. ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.’
  2. படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்.
  3. விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்னால் எப்படி?
  4. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை
  5. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  6. குரங்கு பிடிக்க போய் பிள்ளையார் ஆன கதை
  7. கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள்.
  8. பிச்சை எடுத்தாரம் ராமர், பிடுங்கி திண்டாராம் அனுமார்
  9. அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்
  10. Caesar’s wife must be above suspicion