Snapjudge

Posts Tagged ‘பரிசு’

Top 10 Tamil Films of 2022 – தலை பத்து தமிழ்ப்படங்கள்

In Movies, Tamilnadu on ஜனவரி 7, 2023 at 4:32 பிப

சென்ற ஆண்டில் வெளியானதில் முக்கியமான தமிழ் சினிமா என்ன? தலை பத்தே பத்து படங்கள்:

  1. விட்னெஸ்
  2. டாணாக்காரன்
  3. நட்சத்திரம் நகர்கிறது
  4. கர்கி
  5. திருச்சிற்றம்பலம்
  6. வெந்து தணிந்தது காடு
  7. லவ் டுடே
  8. நானே வருவேன்
  9. கலகத் தலைவன்
  10. மஹான்

மேலும்:

20 தமிழ் இலக்கியவாதிகள்

In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 10, 2012 at 6:50 பிப

பல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.

அப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.

உரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல! சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக!!

1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி

2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்

3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து

4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி

5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்

6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்

7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு

8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி

9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்

10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை

11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்

12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்

13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்

14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்

15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி

16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்

17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்

18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா

19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்

20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்

21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்

Top 10 Hot Tamil Blogs

In Blogs, Lists, Tamilnadu on ஓகஸ்ட் 8, 2012 at 4:22 பிப

வலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.

அந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்?

இலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்?

சூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:

  1. வினவு – Vinavu – Tamil Forum – Revolutionary News
  2. IdlyVadai – இட்லிவடை
  3. adra saka – அட்ரா சக்க: CP Senthil Kumar
  4. kalakak kural: கலகக்குரல்
  5. true tamilans – உண்மைத்தமிழன்
  6. thamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்
  7. Cybersimman\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
  8. வருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்
  9. suvanap piriyan – சுவனப்பிரியன்
  10. விமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

List of Tamil Juries for Sahitya Academy: சாகித்ய அகாடெமி ஜூரி பட்டியல்

In India, Lists, Literature, Tamilnadu on ஜூன் 1, 2012 at 8:20 பிப

சாஹித்ய அகாதெமி விருதில் நடுவர் குழுவில் இடம்பெற்றவர் யார்?

இவர்களில் எத்தனை பேர் விமர்சகர்கள்?

இலக்கிய ரசிகர்கள் என்று பெயர் எடுத்தவர் இருக்கிறார்களா?

படைப்பிலக்கியத்திலும் புனைவிலும் ஆளுமைகளா?

பத்திரிக ஆசியர்கள் உண்டா?

எவ்வளவு பேர் எவ்வித அரசியல் சார்பு கொண்டவர்கள்?

அவர்களின் கம்யூனிச, சித்தாந்த சாய்வு நிலை என்ன?

யார் தோழருக்கு நண்பர்?

  1. Dr. Abdul Rahman – அப்துல் ரெஹ்மான்
  2. Dr. E. Sundaramurthi – ஈ. சுந்தரமூர்த்தி
  3. Dr. K. S. Subramanian – கே. எஸ். சுப்ரமணியன்
  4. Dr. M. Palaniappan – எம். பழனியப்பன்
  5. Dr. R. Kumaravelu – ஆர். குமாரவேலு
  6. Dr. S. Chandra – எஸ். சந்திரா
  7. Prof. K. Chellappan – கே. செல்லப்பன்
  8. Smt. Madana Calliyani – மதன கல்யாணி
  9. Sri Kalladan – கல்லாடன்
  10. Sri Kovai Gnani – கோவை ஞானி
  11. Sri Kurinjivelan – குறிஞ்சிவேலன்
  12. Sri Samakodangi Ravi – சாமகோடங்கி ரவி
  13. Sri Tamilnadan – தமிழ்நாடன்
  14. Sri Thopil Mohamad Meeran – தோப்பில் முகமது மீரான்
  15. Sri V. Sabanayagam – வே சபாநாயகம்

 

2011: Tamil Literary Awards to Writers and Authors: Book Felicitations & Rewards

In Lists on திசெம்பர் 22, 2011 at 10:41 பிப

இந்த வருடம் வழங்கப்பட்ட முக்கிய விருதுகளும் பெற்றவர்களும்:

1.

தமுஎகச இலக்கியப் பரிசு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்:

அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம், விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர்: சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர் டி. செல்வராஜ், நூலின் பெயர்- தோல், வெளியீடு-NCBH

புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ 4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ்.  நூலின் பெயர் – தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ 4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் மு. இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்

அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு – எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.

தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர் – அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.

அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்– சாக்பீஸ் சாம்பலில்

குறும்பட ஆவணப்பட பரிசு

பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,

குறும்படங்கள்-

விண்ட் – இயக்குநர் மணிகண்டன்
அதிகாலை – இயக்குநர் கவின் ஆண்டனி

ஆவணப்படங்கள்-

அக்றிணைகள் – இயக்குநர் இளங்கோவன்
புலி யாருக்கு? – இயக்குநர் ஆன்ட்டோ


2.

தமிழ் இலக்கியத் தோட்டம்

வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் : எஸ்.பொன்னுத்துரை

3. கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன்

4. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்: அகில் சாம்பசிவம்

5. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல்

வெளியீடு – உயிர்மை

6. கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது

7. வண்ணநிலவன் வண்ணதாசனுக்கு சாரல் விருது

8. பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

9.  விளக்கு விருது, தேவதச்சனுக்கு

10. தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது: மலேசியா வாழ் கணினியியலாளர் முத்து நெடுமாறன்

11. சாகித்ய அகாதமி விருது: காவல் கோட்டம் (நாவல்) – சு. வெங்கடேசன்

12. தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய (Tagore Literature Award) விருது: எஸ் ராமகிருஷ்ணனின்யாமம்

13. நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்: குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான எஸ் ராமகிருஷ்ணனின் கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது.

  • தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து
  • பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து
  • ஆங்கில புனைவிலக்கிய நூலின்  தமிழாக்கத்திற்கு ஒரு விருது
  • ஆங்கிலம்/பிற அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள்.  ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.
  • தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஒவ்வொருவருக்கும் ரூ.15000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

14. சாகித்ய அகாதெமியின் குழந்தை இலக்கிய விருது: தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா – “சோளக் கொல்லைப் பொம்மை’ என்னும் தலைப்பிலான குழந்தைகளுக்கான பாடல் நூல்

மற்றவை

i). விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ‘அம்பேத்கர் விருது’ : தமிழக அரசின் அன்றைய தலைவரான முதல்வர் கருணாநிதி

ii) திருவள்ளுவர் விருது : முனைவர் பா. வளன் அரசு

iii) கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது : என்.எச்.எம் ரைட்டர் மென்பொருள்

iv) அமுதன் அடிகள் இலக்கிய விருது: கே. எஸ். பாலச்சந்திரன்

v) கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா

  1. வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) – சங்கானைச் சண்டியன்
  2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு) – மாத்தகரி
  3. சை.பீர்முகமது (மலேசியா) – பெண் குதிரை
  4. நடேசன் (ஆஸ்திரேலியா) – வண்ணத்திகுளம்
  5. தெணியான் (இலங்கை) – ஒடுக்கப்பட்டவர்கள்
  6. கே.விஜயன் – (இலங்கை) – மனநதியின் சிறு அலைகள்
  7. சிவசுப்ரமணியன் (இலங்கை) – சொந்தங்கள்
  8. தனபாலசிங்கம் (இலங்கை) – ஊருக்கு நல்லது சொல்வேன்
  9. கலைச்செல்வன் (இலங்கை) – மனித தர்மம்
  10. உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.


பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

  1. ஆர்.எஸ்.ஜேக்கப் – பனையண்ணன்
  2. சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
  3. முனைவர் மு.இளங்கோவன் – இணையம் கற்போம்
  4. புவலர். இராச.கண்ணையன் – குறளோசை
  5. ப.ஜீவகாருண்யன் – கவிச்சக்ரவர்த்தி
  6. குறிஞ்சிவேலன் – முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
  7. லேனா தமிழ்வாணன் – ஒரு பக்கக் கட்டுரை 500
  8. வெண்ணிலா – நீரில் அலையும் முகம்
  9. பூங்குருநல் அசோகன் – குமரமங்கலம் தியாக தீபங்கள்
  10. கூத்தங்குடி அழகு ராமானுஜன் – காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்

தெரியாதவை

அ) கவிஞர் சிற்பி அறக்கட்டளை: கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது

ஆ) இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் விருது

&

முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் (நெய்தல்) விருது

இ) பெரியார் விருது

ஈ) அண்ணா விருது

உ) அம்பேத்கர் விருது

ஊ) காமராசர் விருது

எ) பாரதியார் விருது

ஏ) பாரதிதாசன் விருது

ஐ) திரு.வி.க. விருது

ஒ) கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

ஓ) திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள்

ஔ) ஆனந்த விகடனின் விருது

க) பாரதிதாசன் அறக்கட்டளை – மன்னர்மன்னன் இலக்கிய விருது நூல்கள்

ங) கலைமாமணி

ச) நொய்யல் இலக்கிய வட்டம் மூன்றாம் ஆண்டு இலக்கிய விருதுகள்

  1. கவிதை – 2 பரிசுகள்
  2. கட்டுரை – 2 பரிசுகள்
  3. சுற்றுப்புறச் சூழல் – 2 பரிசுகள்
  4. குழந்தை இலக்கியம் – 2 பரிசுகள்
  5. சிறுகதைகள் – 2 பரிசுகள்
  6. ஓவியம் – 3 பரிசுகள் (கோட்டுச் சித்திரம் 1, ஆயில் பெயிண்டிங் 1, வாட்டர் கலர் 1)