Snapjudge

Posts Tagged ‘பதிவர்’

நான் அறிந்த நெட் நாட்டாமைகள்

In Blogs, Tamilnadu on நவம்பர் 16, 2011 at 4:11 முப

இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் எல்லோருமே சில காலம் முன்பு புகழ்பெற்றவர்கள். சச்சின் டெண்டுல்கர் போல் இப்பொழுதும் களத்தில் இருக்கலாம். காஜி கேட்கலாம். ஆனால், பதின்ம வயதின் சச்சின் போல் பத்தாண்டுகளுக்கு முன்பு ரவுண்டு கட்டியவர்கள்.

நெட் நாட்டாமையின் மாண்புகள் என்ன?

  • நிறைய வாசிக்க வேண்டும்; அவனப் பத்தியும் எவளப் பத்தியும் சுட்டத் தெரிய வேண்டும்.
  • எல்லோருக்கும் ஒன்பது துவாரம் இருக்கலாம். ஆனால், யூஸ் செய்வது முக்கியம். அனைவரும் எழுதலாம். காத்திரமான கருத்து வேண்டும்.
  • அச்சில், திரையில் கொடி பறக்ககூடாது.
  • மறுமொழி இடுவதற்கு அசரமாட்டார். வாக்குவாதத்தில் கெட்டி.
  • முசுடு கிடையாது. பெருங்கோபமிருக்கும் இடத்தில்தானே, நோ நான்சென்ஸ் குணம் இருக்கும்!?
  • நிர்வாகி. ஒருங்கிணைப்பாளர். பின்னணியில் செயல்படும் காரியவாதி.
புகழ்பெற்ற தமிழ்ப்பதிவர்களைப் பற்றி சொல்லும்போதே நாட்டாமையின் குணாதிசயங்களை அறியலாம்:
  1. பெயரிலி:
    பிள்ளையார் சுழி மாதிரி இவரைப் போடாவிட்டால் எந்தப் பட்டியலும் சரிப்படாது. புனிதப் பசுவாக இருக்கட்டும்; சுய எள்ளல் ஆகட்டும்; எல்லாவற்றிலும் பாயும் புலி.
  2. பாலபாரதி:
    நெட்டில் மட்டுமே அதிகாரம் செலுத்தியவர்களின் மேற்சென்று, ரியலிசத்திலும் நாட்டாமையாக முன்னின்று பஞ்சாயத்து செய்தவர். ட்ரைவ் இன் வுட்லண்ட்ஸ் தயிர் வடை கோஷ்டியைத் தாண்டி சென்னைப் பதிவர்களை பட்டறை போட்டவர்.
  3. பி கே சிவகுமார்:
    தனி மரம் தேர்தல் சின்னமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், தோப்பாகாது. தனக்குப் பின்னே அன்பால் அமைந்த கூட்டணி கொண்டவர். பிரபாகரன் தொட்டு முதலியம் வரை பேசாப் பொருள்களுக்கு குத்து விளக்கேற்றியவர்.
  4. நேசகுமார்:
    மண்டனமிஸ்ரரின் மனைவியிடம் தோற்ற ஆதிசங்கரராக இஸ்லாம் கற்றுத் தேர்ந்தவர். முகமது சொன்னதை முல்லாக்களும் அறியாத காலத்தில், முஸ்லீம்களுக்கும் முகத்தை களைய நினைத்தவர்களுக்கும் மண்டை காய வைத்தவர்.
  5. மதி கந்தசாமி:
    தமிழ்மண நட்சத்திரமா? சிறுகதைப் போட்டியா? நுட்பக் கோளாறா? எல்லாவற்றுக்கும் விடையும் நேரமும் வைத்திருந்தவர். தீர்க்கமான தலைமை & தொலை நோக்கம் என்பதற்கு பாடமாக விளங்கியவர்.
  6. முகமூடி:
    சிலருக்கு இவர் புழு – நசுக்க நினைத்தார்கள். சிலருக்கு இவர் பட்டாம்பூச்சி – கேயாஸ் தியரி என்பார்களே… அது மாதிரி அடுக்கடுக்கான மாற்றங்களை உருவாக்கினவர். PMK விரிவாக்கத்தை நினைவில் நிறுத்தியது மட்டுமல்ல. திராவிடத்தின் தோலுரிப்புகளையும் அபிமன்யுவாக கையாண்டவர்.
  7. முத்து தமிழினி:
    விவாதங்களில் கெட்டித் தயிர்; கொள்கை விளக்கங்களில் வெண்ணெய்; நேர்ப்பேச்சில் வழிந்தோடும் மோர்; அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் தூய்மையான வெள்ளந்தி பால்.
  8. குழலி:
    ஒருவன் ஒருவன் முதலாளி என்னும் தேய்பதத்திற்கு உள்ளாகும் அபாயம் இருந்தாலும், அவர்களுக்குக் கிடைத்த உபாயம்.
  9. டோண்டு ராகவன்:
    மூர்த்தியா? இவரா? என்னும் ஒண்டிக்கு ஒண்டி பலப்பரீட்சையில் எல்லோரும் ஒதுங்கிக் கொள்ள, அசராமல் ஆடி ஜெயித்த வீரர்.
  10. ரோசா வசந்த்:
    பூர்ஷ்வா, ரோசா போன்ற நேம் டிராப்பிங் இருக்கும். இளையராஜா என்னும் அணுக்கமும் இருக்கும். கொண்ட முடிவின் கறார்த்தனத்திற்கு ஜெயலலிதாவே வெட்கப்பட வேண்டும். விலாவாரியாக எதிர்வினையின் நீள அகல ஆழத்தைக் கண்டு ஜெயமோகனே நாணங்கொள்ள வேண்டும்.
தூக்கக் கலக்கத்தில் விட்டவர்களை நினைவூட்டவும்.

Aged 70+ and Rockin’ active: Tamil Writers

In Lists, Literature, Tamilnadu on பிப்ரவரி 11, 2011 at 7:23 பிப

இந்தப் பதிவுக்கு மூலகர்த்தா என் அம்மா (ஆர் பொன்னம்மாள்).

எழுபதைத் தாண்டியும் எந்தத் தமிழ் எழுத்தாளர் சுறுசுறுப்பாக இயங்குகிறார்? கண்ணி யுகத்தில் எவரெல்லாம் தட்டச்சு கற்றுக் கொண்டு வலைப்பதிவு, இணைய இதழ் என்று புழங்கினார்? இரண்டு தலைமுறை மூத்தவரானாலும் யூனிகோடில் மின்னஞ்சலும் இளைய பாரதத்துடனும் வலைய வந்தது எவர்?

  1. எஸ்.வி.ராமகிருஷ்ணன்
  2. பாரதிமணி
  3. வெங்கட் சாமிநாதன்
  4. இந்திரா பார்த்தசாரதி
  5. சுஜாதா
  6. அ முத்துலிங்கம்
  7. பி ஏ கிருஷ்ணன்
  8. இ. அண்ணாமலை

அப்படியே 50+ ஆனவர்கள் பட்டியலும் பார்க்கலாம்:

  1. மாலன் நாராயணன்
  2. இரா முருகன்
  3. ஞாநி
  4. ஜெயமோகன்
  5. எஸ் ராமகிருஷ்ணன்
  6. பாமரன்
  7. சாரு நிவேதிதா
  8. கலாப்ரியா

வலைப்பதிவரிடம் பத்து வினாக்கள்

In Blogs, Life, Lists on ஒக்ரோபர் 21, 2010 at 7:02 பிப

சென்னைக்குப் போகிறேன். வலைப்பதிவரை சந்திக்கலாம். என்ன கேள்வி கேட்கலாம்? எதற்கு விடை அறிய ஆவல்?

  1. ஏன் வலைப்பதிகிறீர்கள்?
  2. உங்களுக்கு மணமாகிவிட்டதா? குழந்தை உள்ளதா?
  3. வேலை? ஊதியத்துக்கேற்ற உழைப்பைத் தருவதாக நினைக்கிறீர்களா?
  4. கடைசியாக பதவி மாறியது எப்போது?
  5. ட்விட்டர், ஃபேஸ்புக் பிடித்திருக்கிறதா? பதிவு அதிகம் பிடிச்சிருக்கா?
  6. குமுதம், விகடனில் எழுத ஆசையா?
  7. தமிழ்ப்பேப்பர், திண்ணை, சொல்வனம் குறித்த உங்கள் எண்ணம்.
  8. உங்கள் பதிவு எந்த இடங்களில் கவனிக்கப்பட்டிருக்கிறது?
  9. வலைப்பதிவு அறிமுகம் இல்லாதவர்களால், உங்கள் பதிவு எவ்வாறு நோக்கப்படுகிறது?
  10. பைசா பிரயோசனம் உண்டா?

Notable & Must Read Tamil Blogs: List II

In Blogs, Lists on செப்ரெம்பர் 3, 2009 at 3:39 முப

தமிழ்ப் பதிவுகளில் ஏற்கனவே 1-10 பட்டியல் போட்டது போல் அடுத்த பத்து போட்டு பார்க்கும் ஆசை. அடுத்த பத்து வலைப்பதிவுகளுக்கான 10 காரணங்கள்:

  1. முதல் பதிவு முழுக்க நேம் ட்ராப்பிங். இது ட்ரீம் ரைட்டிங்.
  2. எப்படி இட ஒதுக்கீடு? அடிக்கடி எழுதவேண்டும். தினந்தோறும் எழுதும் ஆர்வத்தில், செய்தித்தளங்களை சக்களத்தி ஆக்கிக் கொள்ளாமல், கருத்து கனகாம்பரங்களை மட்டும் வெறும் முழம் போடாமல் இருக்க வேண்டும்.
  3. அப்பொழுது பத்ரி. இப்பொழுது சன்னாசியின் இடப்புறத்தில் இடம் இருக்கிறதா?
  4. போன தடவை லக்கிலுக் உரல் காண்பித்து கூட்டம் கூட வைத்தார். இந்த முறையும் அந்த மாதிரி செய்யத் தகுந்த எவராவது ஒருவருக்காவது இடந்தர வேண்டும்.
  5. எமக்குப் பிடித்தது 3 மேட்டர்: சினிமா, அனுபவம், இலக்கிய அரசியல். இதைப் பற்றியெல்லாம் யார் ரெகுலரா எழுதறாங்களோ… அவங்க.
  6. தொடர்புள்ள பதிவு: முந்தைய 30 இட்டதில் இருந்து உருவலாம்
  7. சென்ற பத்து பதிவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள். பலர் அச்சு ராசியும், புத்தக லக்கின ஜாதகமும் கொண்டவர்கள். இந்தப் பட்டியலில் பலரும், எல்லோரும் அறிந்த எக்ஸ்க்ளூசிவ் இணைய எழுத்தாளர்கள்.
  8. யாம் படிப்பது பெறுக இவ்வையக விரிவு வலை.
  9. இன்று செப். 2; அப்படியானால் இரண்டாம் ஸ்டேஜ் பதிவர் ரிலீஸ்.
  10. உரிமைதுறப்பு: ‘மன்னன்‘ படத்தில் ரஜினி கேட்கும் கேள்வி: ‘ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா!’

எந்த வரிசையிலும் இல்லை.

15 books in 15 mins (fictions & non(fictitious) fictions

In Books, Lists on ஓகஸ்ட் 21, 2009 at 4:08 பிப

by முபாரக்

1) மொழியும் நிலமும் : ஜமாலன்

2) இசையின் அரசியல் : வளர்மதி

3) பேச்சு – மறுபேச்சு : ரமேஷ்-பிரேம்

4) கடவுளோடு பிரார்த்தித்தல் : மனுஷ்ய புத்திரன்

5) குருவிக்காரச் சீமாட்டி : ரமேஷ்-பிரேம்

6) மண்ட்டோ கதைகள் : மொழிபெயர்ப்பு – ராமாநுஜம்

7) கடவு (சிறுகதைகள்) : திலீப்குமார்

8) ரத்த சந்தனப்பாவை : என். டி. ராஜ்குமார்

9) வலியோடு முறியும் மின்னல் : பிரான்சிஸ் கிருபா

10) ஆழ்நதியைத் தேடி : ஜெயமோகன்

11) அமைப்பியலும் அதன் பிறகும் : தமிழவன்

12) சொற்கள் உறங்கும் நூலகம் : யவனிகா சிரீராம்

13) வரம்பு மீறிய பிரதிகள் : சாரு நிவேதிதா

14) பூமியை வாசிக்கும் சிறுமி : சுகுமாரன்

15) சாய்வு நாற்காலி : தோப்பில் முகம்மது மீரான்

Top 10 Tamil Blogs

In Blogs, Lists on ஓகஸ்ட் 10, 2009 at 7:10 பிப

இப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்?’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:

  1. இன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது?
  2. எவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்?
  3. உயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா?
  4. அலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.
  5. கூகிள் பேஜ் ரேங்க் என்ன?
  6. பத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா?
  7. கூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார்? செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு?
  8. ‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்?
  9. போன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா?
  10. என்னுடைய இதயத்தில் இடம் உண்டா?

இப்பொழுது ஆகஸ்ட் பத்து. தமிழ் வலைப்பதிவுகளின் தலை 10: (எந்தத் தரக் கட்டுப்பாடு வரிசையிலும் இல்லை)

  1. http://ariviyal.infoஅறிவியல்
  2. என். சொக்கன் மனம் போன போக்கில்
  3. twitter prakashicarusprakash
  4. Charu Nivedita charuonline.com
  5. ஜெயமோகன் jeyamohan.in
  6. எஸ். ராமகிருஷ்ணன் :: RAMAKRISHNAN ::
  7. லக்கிலுக் யுவகிருஷ்ணா
  8. ரவிசங்கர் –ரவி
  9. writerpara பா. ராகவன்
  10. இட்லிவடை IdlyVadai

முந்தைய பதிவுகள்:

1. March 10: Top 10 Tamil Blogs

2. Top Tamil Blogger Templates

இந்த இடுகைக்கு ஊக்கமூட்டிய பட்டியல்: Surveysan -ஆக்கியவன் அல்ல அளப்பவன்: பதிவுலகில், இந்த ஃபாலோயர்ஸ் கணக்கில், நல்ல மகசூல் பெற்றிருப்பவர்கள் சிலர்

Best of April: 20 Cool Tamil Blog Posts

In Blogs on ஏப்ரல் 28, 2009 at 7:25 பிப

பதிவை நான் படித்த (அல்லது வெளியான) காலவரிசைப்படி இருக்கிறது; வேறு எந்த வரிசைப்படியும் இல்லை 🙂

      Tamil Blogs Top 10: 2004

      In Blogs on மார்ச் 13, 2009 at 10:02 பிப

      இது இந்த மாசப் பட்டியல்: March 10: Top 10 Tamil Blogs « 10 Hot

      2004ல்?

      அனைத்து சுட்டிகளும் பழைய வலையகத்தைக் குறிப்பதால் இயங்காமல் இருக்கலாம். அந்தக் காலத்திற்கான முழுப் பட்டியல்.

      March 10: Top 10 Tamil Blogs

      In Blogs, Tamilnadu on மார்ச் 10, 2009 at 8:29 பிப

      முந்தைய பதிவு: Dhalavai Sundharam: Kumudam – Top 10 Tamil Blogs « 10 Hot

      இன்று பத்தாம் திகதி. பத்து போட உகந்த நாள். இந்த மாதத்தின் தலை பத்து தமிழ்ப்பதிவுகள்:

      தமிழ் நாடு & இந்தியா 2009 தேர்தலின் திசைகள் போல் தவறவிட்டதும் விடுபட்டதும் வரும் மாதங்களில் டாப் 10ல் நுழைக்கப்படும்.