- Voting for “clean” candidates – நல்ல வேட்பாளருக்கு வாக்களித்தல்
- Press for right to reject – வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையில் வாக்களித்தல்
- Seek more powers for gram sabha – கிராமசபாவுக்கு அதிக அதிகாரம் கோருதல்
- Citizens charter – குடிமக்கள் பட்டயம் தயார் செய்தல்
- Removing delays in official work – அலுவலகப் பணிகளில் தாமதத்தை தவிர்த்தல்
- Bringing police under “the control” of Lokpal and Lokayukta – போலீசையும் லோக்பால் அல்லது லோக்-ஆயுக்தா சட்டத்தின்கீழ் கொண்டு வருதல்
Posts Tagged ‘பணம்’
Anna Hazare Six Point Plan for Quick, Decisive and Measurable Improvements in India Politics
In India, Politics on செப்ரெம்பர் 6, 2012 at 9:48 பிபMother Teresa: அன்னை தெரசா: வாழ்வும் கொள்கையும்
In Business, India, Politics, Religions on ஓகஸ்ட் 27, 2012 at 3:25 முப1. மதம்: குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சீக்கிரமே சொர்க்கம் அனுப்பும் திட்டத்தை அன்னை தெரஸா ஆரம்பித்தார்; சட்டு புட்டென்று சிறார் செத்தால்தானே படுக்கை காலியாகும்!
2. சட்டம்: அன்னை தெரசாவைப் பொறுத்தவரை பிறந்து விட்ட குழந்தையைக் கொல்வது ஒகே; ஆனால், வன்புணர்வினாலோ, பதின்ம வயது பருவக் கோளாறினாலோ, ஏழை வீட்டில் பத்தாவதாக பிறக்கும் மகவையோ கருக்குலைப்பது குற்றம்.
3. அரசியல்: குவாடாமாலா கொலைகளுக்கு முலாம் போட்டதாகட்டும். மத்திய அமெரிக்க சண்டைகளுக்கு ஆசி வழங்கியது ஆகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்; அதே சமயம் எப்போதுமே கொடுங்கோலரின் கனவு போல் வாடிகனுக்காக போரிட்டவர் மதர் தெரசா.
4. சுயநலம்: பத்தாயிரம் மில்லியன் எல்லாம் எண்பதுகளிலேயே புரண்ட தொண்டு நிறுவனம் மிக மிக சிறப்பான படுக்கைகளையும் மருத்துவ சிகிச்ச்சைகளையும் கவனிப்பாளர்களையும் நோயாளிகளுக்கான வசதிகளையும் செய்து தந்திருக்கலாம். ஆனால், அன்னை தெரசாவோ, தன் பெயரில் நூற்றி ஐந்து நாடுகளில் ஐநூறு கான்வெண்டுகளைத் தன் நிறுவனத்திற்காக திறந்து கன்னியாஸ்திரீகளை சேர்க்க ஆரம்பிக்கும் திருப்பலியை மேற்கொள்கிறார்.
5. குற்றவுணர்ச்சி: மேற்கத்திய உலகிற்கு நாம் மட்டும் நல்ல வாழ்க்கையில் திளைக்கிறோம்; அதே சமயத்தில் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் வறுமையில் வாடுகிறார்கள் என்னும் எண்ணம் நிறைந்த எழுபதுகளில் உதித்தவர். வெள்ளைக்கார பெண்மணியாக சேவை செய்தவர். அமெரிக்க மகளிர் பீச்சில் உல்லாசமாய் இருக்கும்பொழுது எழும் தர்மசங்கடமான வருத்தத்தை சிம்பாலிக்காக கலைத்தவர்.
6. சாதாரணரை வளரவிடாத அடக்குமுறை: சாலையில் செல்லும்போது நாய் அடிபட்டுக் கிடந்தால் என்ன செய்வீர்கள்? மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, காலை சரி பார்த்து நடக்க வைப்பீர்கள். ஏழைகளுக்கு கடன் கொடுத்து, நிமிர்ந்து நடக்க வைப்பது அது போன்றது. நாய் கால் விந்தி விந்தி நடந்தால் கூட முடக்கி மூலையில் உட்கார வைப்பது தெரசாவின் லட்சியம்.
7. பொருள்முதல்வாத போராளி: போபால் விஷவாயு கசிவினால் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டபோது, யூனியன் கார்பைட் நிறுவனத்தை மன்னித்து சும்மா விட்டு விடுங்கள் என்பார். ஹைதி நாட்டில் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பட்டயம் வழங்குவார். கிறித்துவத்திற்கு பணம் கொடுக்கும் எந்த அட்டூழியத்திற்கும் துணை நிற்பார்.
8. பாசிசம் (fascism): முசோலினியும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் மதர் தெர்சாவினால் ஆனுதாபிகளாகப் கொண்டாடப்பட்டவர்கள். அல்பேனிய சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார விஷயங்கள் தீர்மானிப்பவர்களையும், முதலாளிகளையும் வாழ்த்தி வணங்கியவர் அன்னை தெரசா.
9. ஏழைகளிடமிருந்து திருடியவர்: சென்றதெல்லாம் தனியார் விமானம்; சொகுசு கார்; உலகம் எங்கும் சுற்றுலா; இத்தனை கோடி நிதி திரட்டினாலும் கொல்கத்தா வறியவர்களுக்கு ஆஸ்பிரின் கூட கொடுக்காத கெடுபிடி சிறை. இவருக்கு இத்தனை பணம் ஏற்பாடு செய்து தந்த கீட்டிங் போன்ற பலர், தற்போது திருட்டுக் குற்றங்களுக்காக சட்டப்படி தண்டனை அனுபவிக்கின்றனர். பெற்றுக் கொண்ட அன்னை தெரசா ஞானி ஆகிறார்.
10. பச்சிளங்குழந்தைகளின் பாலியல் பலாத்காரத்திற்கு துணை நின்றவர்: New Statesman:Mother Teresa defended notorious paedophile priest – Mother Teresa and the Paedophile
உசாத்துணை: Chatterjee’s book Mother Teresa: The Final Verdict is available on-line. Click here.
அடுத்தவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்காமல், தண்ணீரில் தள்ளிவிட்டு காப்பாற்றிக் கொண்டேயிருந்தவர். தெரசா போன்றவர்கள் இந்தியாவை வறுமையான நாடாக அடையாளம் காட்ட பயன்பட்டார்கள். மேற்கத்திய உலகின் கரிசனையை முழுப்பக்க விளம்பரமாக எடுத்துப் போட உதவினார். அவரின் நிறுவனத்தில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சம் காட்ட இந்திய ஊடகங்களே தயங்கினதால், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை நிறைவேற்றுவதும் எளிதாகியது.