சற்றேறக்குறைய பத்தாண்டுக்கு முந்தைய பழங்காலத்தில் ஆனந்த விகடனில் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’, குமுதம்.காம்-இல் பா ராகவனின் ‘தெரிந்தது மட்டும்’, விகடன்.காம்-இல் சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளும் வெளிவந்தது.
இன்றைக்கு அப்படி சிதறல்களைத் தொகுத்து எழுதும் பெருமகனார் சில:
- யெஸ்.பாலபாரதி: விடுபட்டவை
- ஆதிமூலகிருஷ்ணன்: புலம்பல்கள்.!: மிக்ஸ்டு ஊறுகாய் & த்ரீ இன் ஒன்..
- என். சொக்கன்: மூன்று சமாசாரங்கள் « மனம் போன போக்கில்
- வடகரை வேலன்:கதம்பம்
- கார்க்கி: சாளரம்: காக்டெயில்
- உண்மைத் தமிழன்(15270788164745573644): இட்லி-தோசை-வடை-சட்னி-சாம்பார்
- பரிசல்காரன்: அவியல்
- வால் பையன்: குவியல்!….
- டோண்டு ராகவன்: Dondus dos and donts: நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்
- ச்சின்னப் பையன் பார்வையில்: நொறுக்ஸ்
- மணிகண்டன்: தமிழ் வலையுலகம்.: கிச்சடி
- Cable Sankar: கொத்து பரோட்டா
- நாராயணன்: சனிமூலை
- இகாரஸ் பிரகாஷ்: மிக்சர் « Prakash’s Chronicle 2.0
கருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் பத்து கேள்விகள்:
- நாலு பதிவுக்கான விஷயங்களை ஒரே பதிவாக்குவது பிடித்திருக்கிறதா?
- ஒவ்வொரு அனுபவத்தையும், ஒவ்வொன்றாக சொல்லி, அதற்குறிய குறிச்சொல் இன்னபிற வலைப்பூச்சு இடவேண்டுமா?
- இப்படி ஆளுக்கொரு ப்ரான்ட் வைப்பது வலைப்பதிவை சந்தைமயமாக்குமா?
- அவரவரின் ‘குறிச்சொல்’ மெய்யாலுமே மனதில் பதிந்து, அவரைச் சொல்வதற்கு பதில் இந்த அடைமொழி நிழலாட வைக்கிறதா?
- பதிவின் தலைப்புக்கும், இந்தத் தொடர் இடுகை தலைப்புக்கும் வித்தியாசம் தேவையா?
- குட்டியாக இருக்கிறது என்னும் அவச்சொல்லை நீக்கத்தான், இப்படி தொகுக்கிறார்களா?
- இந்த மாதிரி துணுக்குத் தோரணத்திற்கு பதில் ட்விட்டர் தோரணம் தேவலாமா?
- கூகிள் தேடல் முடிவுகளில் தலைப்புக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும் காலத்தில், உபதலைப்பு கூட கிட்டாத இந்தப் பதிவுகளுக்கு போதிய ரீச் நிலைக்குமா?
- கடைசியாக: தனித் தனி இடுகை அல்லது மொத்த குவிப்பு – எது உங்கள் தேர்வு?
- இதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு தேவையா?