Snapjudge

Posts Tagged ‘படம்’

Top 10 Tamil Films of 2022 – தலை பத்து தமிழ்ப்படங்கள்

In Movies, Tamilnadu on ஜனவரி 7, 2023 at 4:32 பிப

சென்ற ஆண்டில் வெளியானதில் முக்கியமான தமிழ் சினிமா என்ன? தலை பத்தே பத்து படங்கள்:

  1. விட்னெஸ்
  2. டாணாக்காரன்
  3. நட்சத்திரம் நகர்கிறது
  4. கர்கி
  5. திருச்சிற்றம்பலம்
  6. வெந்து தணிந்தது காடு
  7. லவ் டுடே
  8. நானே வருவேன்
  9. கலகத் தலைவன்
  10. மஹான்

மேலும்:

தமிழ் சினிமாவின் தலை பத்து கொலைகள்

In Movies, Tamilnadu on ஜூலை 4, 2022 at 5:01 பிப

தமிழ்ப் படத்தில் வந்த உயிர்ப்பலிகளில் எது உடனே நினைவிற்கு வருகிறது? அது காண்பிக்கப்பட்ட கொலையாக இருக்கலாம். அல்லது கொல்லுவதற்கான திட்டமிடலாக இருக்கலாம். காட்சியமைப்பாக இருக்கலாம். எதனாலோ, நினைவில் நின்று பாதித்த பலிகளின் பட்டியல்:

  1. வாராய் நீ வாராய் – மந்திரி குமாரி படத்தில் பாடலின் முடிவில் (மு. கருணாநிதி)
  2. நூறாவது நாள் – மொட்டை சத்யராஜ் (மணிவண்ணன்)
  3. விடியும் வரை காத்திரு – க்ளைமாக்ஸ் நோக்கிய பயணம் (பாக்யராஜ்)
  4. முதல் மரியாதை – ராதா (பாரதிராஜா)
  5. ஒரு கைதியின் டைரி – பாரதிராஜா + பாக்கியராஜ்
  6. கல்லூரி (தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்) – பாலாஜி சக்திவேல்
  7. தளபதி – நடு ரோட்டில் எரியூட்டும் சம்பவம் – ரஜினி + மணி ரத்னம்
  8. ஜெண்டில்மேன் – துவக்கத்தில் வரும் சகட்டுமேனியான கொலைகள் – ஷங்கர்
  9. நந்தா (பாடல் கூட நன்றாக இருக்கும் – ஓராயிரம் யானை கொன்றால்… பரணி) – இயக்குனர் பாலா
  10. நான் சிகப்பு மனிதன் – ரஜினி + எஸ்.ஏ. சந்திரசேகர்

கொசுறு:

அ) நாயகன் படத்தின் கொலைகளைப் பற்றிப் பேசாமல் இந்தப் பதிவு முழுமையாகாது

ஆ) அன்னியன் படமும் தொடர்கொலைகள், வித விதமாக அரங்கேறும் சித்திரைவதை பலிகள்.

இ) கடைசியாக, சமீபத்திய சுப்பிரமணியபுரம் (சசிகுமார்)

ஈ) மூன்று முடிச்சு – பாலச்சந்தரும் ரஜினிகாந்த்தும் கமலைக் காப்பாற்றாமல் கைவிடுவது கொலையா?

உ) யார்

ஊ) சிகப்பு ரோஜாக்கள் – பாரதிராஜா + பாக்யராஜ்

எ) விடிஞ்சா கல்யாணம் – மணிவண்ணன்

ஏ) பூவிழி வாசலிலே – ஃபாசில்

ஐ) மௌனம் சம்மதம் (மம்முட்டி + அமலா)

ஒ) கலைஞன் – கமல்

ஓ) சாவி

ஔ) ஆயிரத்தில் ஒருவன்: ஒருவரை “அரவான்’ போல பட்டினி நிமித்தமோ/ போரின் நிமித்தமோ பலியிடுவதாக ஒரு காட்சி இத்திரைப்படத்தில் இருக்கும். பலியிடல்கள்.

ஃ) மதுரை வீரன்: மாறுகால் மாறுகை என்று என் மாணவ பருவத்தில் பார்த்த படம். மனம் பதைபதைத்து போய்விடும்.

13 Facebookers about Suzhal – Amazon Prime TV Series: சுழல்

In Lists, Movies, TV on ஜூலை 2, 2022 at 7:53 பிப

0. Suresh Kannan

‘சுழல்’ வெப்சீரிஸின் முதல் எபிஸோட் மட்டும் பார்த்தேன். சில வெளிநாட்டுத் தொடர்களின் தரத்தைப் பார்க்கும் போது ‘நம்மூரில் இது போல் வருவதற்கு பல வருடங்களாகும்’ என்கிற ஏக்கம் எனக்கு எப்போதும் ஏற்படும்.

இதுவரை தமிழில் வந்த பல அரைகுறையான இணையத் தொடர்களும் – நான் பார்த்த வரைக்கும் – அதை மெய்ப்பித்தன. என் எதிர்பார்ப்பை ஓரளவு எட்டிய தொடர் என்று கௌதம் மேனன் இயக்கிய ‘க்வீனை’ சொல்வேன்.

இந்த எதிர்பார்ப்பில் மேலும் சில படிகளை தாண்டிச் சென்றிருக்கிறது ‘சுழல்’. நமக்கு கொலம்பியா போதைப் பொருள் மாஃபியா போன்ற அயல் நாட்டுச் சமாச்சாரங்கள் எல்லாம் தேவையில்லை. நம்முடைய தொன்ம கலாசாரங்களில் இருந்து காட்டவே ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

அந்த வகையில், இந்தத் தொடரில் ‘மசானக் கொள்ளை’யின் பின்னணியை இத்தனை விஸ்தாரமாகவும் நுணுக்கமாகவும், பிரம்மாணடமாகவும் உருவாக்கிக் காட்டிய அந்த மெனக்கெடலுக்காகவே ஒரு பெரிய சபாஷ். ஏறத்தாழ ஒரு திரைப்படத்திற்கு நிகரான உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

இது தவிர தொழிற்சாலை போராட்டம், யூனியன் லீடரின் குடும்ப உறவுகள், சிக்கல்கள், இன்ஸ்பெக்டரின் குடும்பம் என்று முதல் எபிசோடியிலேயே தொடர் களை கட்டி விட்டது.

ஆனால் – மணிரத்னம் திரைப்படங்களைக் கவனித்தால் சில காட்சிக்கோர்வைகளை, உணர்வுகளை அத்தனை ஆழமாக, பிரமிப்பேற்றும் வகையில் உருவாக்கி விடுவார். இதற்கு முரணாக சில காட்சிகள் பிளாஸ்டிக் தன்மையுடன் ஒட்டாத வகையில் செயற்கையாக இருக்கும்.

இதிலும் அந்த வாசனையை சிலபல இடங்களில் உணர்ந்தேன். அந்த வகையில் இந்தத் தொடர் இன்னமும் கூட உயரத்தை எட்டியிருக்கலாம் என்று தோன்றியது. (முதல் எபிசோடை வைத்தே இதை சொல்லக்கூடாது என்றாலும்).

oOo

ஸ்ரேயா ரெட்டியை எனக்கு அவர் SS Music-ல் விஜேவாக இருந்த காலத்தில் இருந்தே அத்தனை பிடிக்கும். அவரின் தோற்றத்தில் ஏதோவொரு தனித்த வசீகரம் இருக்கிறது. இந்தத் தொடரில், போலீஸ் யூனிபார்மிலும் சரி, புடவையிலும் சரி, பார்ப்பதற்கே அத்தனை ரகளையாக இருக்கிறார். நெருங்கிச் சென்று ப்ரபோஸ் செய்து விடலாம் போல தோன்றுகிறது.

‘அழகி’ படத்தில் வரும் சண்முகம் என்கிற பாத்திரப் பெயரை வைத்து விட்டதாலோ என்னமோ, அந்தப் படத்தில் வருவது போலவே அவ்வப்போது கண்ணாடியைக் கழற்றி துடைத்துக் கொள்கிறார், பார்த்திபன். ஆனால் கவனிக்கத்தக்க நடிப்பு. மற்றபடி கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆசிரம மனைவி, பாக்டரி முதலாளி என்று ஒவ்வொரு பாத்திரமுமே தனித்துத் தெரிகிறார்கள். ஒவ்வொரு கேரக்ட்டரை அதன் தனித்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.

புஷ்கர் காயத்ரி என்கிற பெயரே இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அது வீண் போகவில்லை. முதல் எபிசோடை பிரம்மா சிறப்பாக இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ்.-ன் பின்னணி இசையும் சிறப்பு. ஒளிப்பதிவின் நோ்த்தி ரகளையாக இருக்கிறது.

oOo

ஏற்கெனவே சொன்னதுதான். தமிழ் வெப்சீரிஸ்களில் இதுவரை வந்தவற்றின் தரத்தில் ஒரு புதிய மைல்கல்லை இந்தத் தொடர் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். முழுதும் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.

Do not Miss it.


1. பொம்மையா முருகன்

நாலு இல்ல அஞ்சி எபிசோடுகளோட கிரிஸ்பா முடிக்க வேண்டியத எட்டு வரைக்கும் இழுவையா இழுத்திருக்காங்க.

பொதுவாக இந்த மாதியான சஸ்பென்ஸ் கதைகளில் முதலில் குற்றம் நடக்கும் கிளைமேக்சில் சஸ்பென்ஸ் உடையும் இடைப்பட்ட காட்சிகளின் டிவிஸ்ட் நம்மை அட போடவைக்கும் ஆனால் இதில் இடைப்பட்ட காட்சிகள் அப்படி அட போட வைக்கவில்லை ஓ… அப்படியா எனத்தான் சொல்லவைக்கிறது

அதனாலோ என்னவோ கிளைமேக்ஸ்சில் இவர்தான் குற்றவாளி என சஸ்பென்ஸ் உடையும் போதும் ஓ.. அப்படியா எனத்தான் கேக்க வைக்கிறது…

நேரடி குற்றவாளி அவர்தான் எனினும் மறைமுக குற்றவாளிகள் பார்த்திபனும் அவர் மனைவியும் இதை அடுத்த சீசனில் எடுத்துச் சொல்லவார்கள் என நினைக்கிறேன்.

பெண் குழந்தைகள் வளரும் வீட்டில் கனவன் மனைவிக்குள் ஈகோ இருக்கக் கூடாது ஈகோ வால் இருவரும் பிரிந்ததால் தான் அந்த குழந்தைகளுக்கு விபரீதம் ஏற்படுகிறது என்பதுதான் இந்த சீசனின் சொல்லப்படாத மையக்கரு.

மற்றபடி இந்த சீசனில் கவர்ந்தவர் ஸ்ரேயா ரெட்டி பாசமான அம்மா, பொறுப்பான காவல் அதிகாரி என ரெண்டுலயுமே ஸ்கோர் செய்கிறார். பார்த்திபனுக்கு கிட்டத்தட்ட இதில் கவுரவ தோற்றம் தான்.

மொத்தத்தில் O2 படத்துக்கு இது எவ்வளவோ பெட்டர்.


2. Ponnambalam Kalidoss Ashok

‘பெற்றோர் பிரிந்து வாழ்ந்தால் குழந்தைகளின் நிலைமை.குறிப்பாக , குழந்தைகள் பெண்களாக இருந்தால்? ‘

என்ற கருவை வைத்து ஒரு கிரைம் திரில்லர்..’சுழல்’

திரைக்கதையோடு மயானக் கொள்ளை என்ற ஒன்பது நாட்கள் நிகழ்வுகளையும் பொருத்தி படம் இயங்குகிறது. அதற்கான பொருத்தமான தலைப்புகள் ! Creation had it’s flavours! Great!

எட்டு எபிசோடுகள். இறுதி வரை படு சஸ்பென்ஸ். ஒவ்வருவரையும் சந்தேகித்து அவர்களை விடுவிக்க அடுத்த சுழல். இறுதியில் முடிச்சு அவிழும் பொழுது நாம் உறைகிறோம்.

இரு இயக்குநர்கள் எபிசோடு இயக்குநர்கள்.

கதிர் படம் முழுக்க படு வேகமாக.. அம்மாவின் மீது பாசமாக..வருங்கால மனைவியிடம் காவலர்களின் சூழலை புரிய வைத்தல்..கோபம் குமுறல் என படம் முழுக்க ரவுண்டு கட்டி அடிக்கிறார்.

அவர் அதிகாரியாக ஸ்ரேயா ரெட்டியும் தொழிலாளத் தலைவராக பார்த்திபனும் ஆஹா. ஹரிஷ் உத்தமன் ..அவரின் தந்தை..சந்தான பாரதி..குழந்தைகள்.. குமாரவேல்..காவல் நிலைய அலுவலர்கள் என ஒவ்வருவரும் படத்தை அற்புதமாக நகர்த்துகின்றனர். ஈஸ்வரனாக வருபவர் மிரள வைக்கிறார்.

திருநங்கையர் பற்றிய கருத்து சிந்திக்க வைக்கிறது. அதே போல் குழந்தைகளின் அவல நிலை.. அதனை மறைக்காது சொல்ல வேண்டும் என்ற பல உணர்வுகளை படம் சொல்வது தேவையான ஒன்று.

குமாரவேலும் ஐஸ்வர்யா ராஜேஷும் பிரமாதம். இசை சரியாக .

ஒளிப்பதிவு குறிப்பாக ஒன்பது நாள் மயானக் கொள்ளையை படத்துடன் நகர்த்த அபாரமாக உதவுகிறது. புரிசைக் குழுவினர் என்று நினைக்கிறேன். ஆஹா!

கதையையும் குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத்தையும் சேர்த்து விறு விறுப்புக் குறையாமல் அதே சமயம் எடுத்துக் கொண்ட கதையை தெளிவாகச் சொல்லிய குழுவிற்கு பேரன்பு!


3. Sivakumar Venkatachalam

சுழல் (ஸ்பாய்லர் இல்லை)

கொஞ்சம் ஏனோதானோ என்று போகும் கதை ஏழாவது எபிஸோடில் எழுந்து உட்கார வைத்து விடுகிறது.

அதுவரையிலும் சற்று அசுவராஸியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பது என்னவோ உண்மை. ஆனால் கடைசி இரண்டு எபிஸோடுகளில் இயக்குநரின் திறமை பளிச்சென்று வெளிப்படுகிறது. குழம்பிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு போகிற போக்கிலேயே விடைகள் கிடைத்து விடுகின்றன. அந்த நேரத்தில் டைரக்டரைக் கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டு விட்டோமோ என்கிற எண்ணத்தை வரவழைத்து விட்டார்கள்.

இதை மூன்று மணி நேரமாக ட்ரிம் செய்து தியேட்டரில் படமாக விட்டிருந்தாலும் சிறப்பாக ஓடியிருக்கும். மொத்தமாக ஒரு புதிய டீம், வித்தியாசமான காம்போ, ஃப்ரஷ்ஷான முகங்கள், யூகிக்கமுடியாத திருப்பங்கள் என்று பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.

அந்த மயானக்கொள்ளையை மிகவும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். அதற்காக ஒருநாள் செட் போட்டு முடித்துவிட்டு கழற்றி வைத்ததுமாதிரியும் தெரியவில்லை. முன்னும் பின்னுமான காட்சிகளில் அந்த மயானக்கொள்ளையில் கதாபாத்திரங்களை நடக்கவிட்டு கதையோடு கலந்திருக்கிறார்கள். அதற்கான இயக்குநரின் திட்டமிடுதல் மிகவும் பாராட்டத்தக்கது.

ஸ்ரேயா ரெட்டி. திமிரு படத்தையடுத்து இப்போதுதான் அவரைப் பார்க்கிறேன். என்னவொரு ஆளுமையான நடிப்பு! அதுவும் ஆம்பிளைகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு. இப்படிப்பட்ட கம்பீரம் கொண்ட பெண்கள் தனி அழகு.

பார்த்திபன் ஆரம்பத்தில் ரொம்பவே சுமாராக ஏதோ ஆர்வமில்லாதவர் போல நடிக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக லைன் பிடித்துவிட்டார்.

கதிர், ஹரீஷ் உத்தமன், அவரது அப்பாவாக வரும் சேட்டு, அந்த இளம் ஜோடி என்று எல்லோருமே இயல்பான நடிப்பு. கேரக்டர்களை பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து கதையோடு மிக அழகாக ஐக்கியமாக்கி இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் உச்சம் தொடுகிறார். கேரக்டரை உள்வாங்கிக் கொள்வதில் ரொம்பவே கில்லாடி.

சாம் சிஎஸ்ஸின் இசை சினிமாவுக்கு சமமாக இருக்கிறது. சின்ஸியராக வேலை செய்திருக்கிறார். கேமரா வொர்க், குறிப்பாக ட்ரோன் ஷாட்டுகள் பிரமாதம். எட்டு எபிஸோடுகள் கொண்ட கம்ப்ளீட் பேக்கேஜ். சோபாவில் குண்டுக்கட்டாக அமர்ந்தவாறு குட்டித் தலையணையை மடியில் போட்டபடி நகங்கடித்துக்கொண்டே பார்ப்பதற்கு ஒரு

அருமையான கண்டன்ட்


4. Braveenan Sritharan

சுழல்

முதல் 4 episodes இலயே series முடிச்சிருக்கலாமே 😔

சிறுபராயக்காதல் தான். ஆனால் அதன் ஆழத்தை ஒரு வசனத்தில் அழகாக சொல்லியிருப்பார்கள் “Postmortem பண்ணும் போது இரண்டு பேரையும் பிரிக்கவே கஷ்டமாப்போச்சு. நகமும் சதையுமா ஒட்டியே இருந்தாங்க.”

அடுத்த 4 episodes சமூகத்துக்கு இப்போது தேவையான கருத்தை நோக்கிய பகுதிகள். அதை இறுதி episode வரை கொண்டு வந்து தெளிவுபடுத்தியது தான் மொத்த webseries இன் வெற்றி.


5. Syeda Fareeha

தமிழ்ல வந்து இருக்கிற வெப் சீரிஸ்..

முழுமையான சமூக, குடும்ப, தனிமனித உளவியல் சார்ந்த கதை.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் பிண்ணனியா ஒரு உளவியல் காரணம், குடும்ப அமைப்பு சிதைவுகள், நம்பிக்கைக்கும் நிஜங்களுக்குமான இடைவெளி.. இப்டி பல அடுக்குகள்…

கதையோட கரு பெண் பிள்ளைகளுக்கு வீட்லயே நடக்குற sexual abuse‌ தான்..

So பேரன்ட்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க..

Last வரைக்கும் கொலையாளி யாருனு மண்டைய பிச்சுக்க வைக்குற செம திரில்லர் web series..


6. Sundar

#சுழல் must watch tamik web series #Suzhal

Must watch one, ஏன்?

சிவப்பு கொடி, கறுப்பு சட்டையை காட்டியதற்காக இல்லை,

Communism கடவுள் மறுப்பு கொள்கையை காட்டியதற்காக இல்லை

பெரியாரையும், Marxயும் காட்டியதற்காகவும் இல்லை.. 🙂

பின் எதற்கு என்றால், Gender equality இருக்கும், women charactersஅ மிக அருமையா காட்சி படுத்தியிருப்பாங்க..

ஆண்கள் எழுதி direct செ‌ய்‌கிற typical cinemaக்களுக்கு நடுவுல

பெண்கள் பார்வையில் பெண்களை காட்சிபடுத்தினால் எப்படி இருக்கும்னு இதுல சத்தமாசொன்ன மாதிரியான ஒரு கதை.. இன்னும் இது போன்று பல.. ❣️😌

“சுழல்” பற்றி உரையாட நிறைய இருக்கு,.. Must watch one


7. அருண் அலெக்ஸாண்டர்

The Vortex

நாளைக்கு சண்டே லீவு சரி ஒரு வெப்சீரிஸ் பார்க்கலாம்னு டவுன்லோட் பண்ணிட்டு ஒரு மூனு எபிசோட் வரைக்கும் பார்த்துட்டு மீதி நாளைக்கு பார்க்கலாம் தான் உட்கார்ந்தேன், ஆனா மூணாவது எபிசோடு இறுதியில் ஆரம்பிச்சு ஒரு பரபரப்பான திரில்லர் மூவி மேக்கிங்,ஸ்கிரீன்பிளே படத்தோட இறுதி வரைக்கும் விறுவிறுப்பாக கொண்டு போச்சு, கிரைம் நாவல் ரசிகர்களுக்கு நல்ல தீனி இந்த வெப்சீரிஸ். ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும் நம்ம யூகிக்க முடியாத ட்விஸ்ட் வச்சு பிரில்லியண்ட் மேக்கிங்….. 🙌🙌🙌

ஸ்ரேயா ரெட்டி ,சந்தானபாரதி மற்றும் கதிர் சிறப்பான நடிப்பு….

நல்ல தரமான வெப்சீரிஸ்… ஒரு சில இடங்களில் கெட்ட வார்த்தைகள் வரும், ஆனாலும் அனைவரும் குடும்பத்துடன் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம்…

மொத்தம் 8 எபிசோட் ஒரு தோராயமாக ஆறு மணி நேரம் தாண்டி வரும்.


8. சசி தரணி

கதிரையும்,திரிலோக்கையும் புடுச்சுது..

கடசி 3 எபிசோட் நல்லாருக்கு..

ரிப்பீட்டு ஆயிட்டே இருக்கற திருவிழா காட்சி ஒரு மாதிரி அயர்ச்சியா இருக்கு..

நைட் ஒரு மணி வரைக்கும் பாத்து முடிச்சேன்.என்னதா நடந்துச்சுனு பாக்க வெக்கற மாதிரிதா இருக்கு..


9. Valli Subbiah

சுழல்..

கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களில் (ஒரே நாளில் பார்ப்பது கடினம்) அமேசான் பிரைம் வீடியோ வில் பார்த்தது “சுழல்” வெப் சீரீஸ்…6.மணி நேரம் ஓடும் இந்த வெப் சீரீஸ் ஒரு க்ரைம் த்ரில்லர். அடுத்தடுத்து பார்க்கத் தூண்டும் கதையமைப்பு ..

இந்தக் கதையை எழுதியது புஷ்கர்- காயத்ரி ..இயக்கம் பிரம்மா G. அனுசரன் முருகையன்… கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரேயா ரெட்டி என நட்சத்திரப் பட்டாளத்துக்கு குறைவில்லை.

‘சர்க்கரை’ என்று அழைக்கப்படும் சக்கரவர்த்தியாக சப் இன்ஸ்பெக்டர் ரோலில் கதிர் படம் முழுக்க ஆதிக்கத்தை செலுத்துகிறார். உணர்ச்சிகள் நன்றாக முகத்தில் பிரதிபலிக்கிறது.அவருக்கு மேலதிகாரியாக வரும் பெண் கதாபாத்திரம் அருமை.முதல் பாதியிலும், பிற்பாதியிலும் இரு வேறுபட்ட உணர்வுகளை

அருமையாக காட்டியுள்ளார்.

பார்த்திபன் தன் அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ,அவர் தங்கையாக வரும் பெண் ..இன்ஸ்பெக்டர் மகன் ..ஆலையின் ஓனர், அவர் மகன் என அனைவரும் கொடுத்த பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவதோடு, இயல்பான நடிப்பால் கவர்கின்றனர் .

கதைக்குள் அதிகமாக போக விரும்பவில்லை, ஏனெனில் பார்க்காதவர்கள்… பார்க்க நினைப்பவர்கள்… நிறைய பேர் இருப்பார்கள் ..நடக்கும் ஒரு குற்றம். ..சந்தேக புள்ளி, ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் மாறிக்கொண்டே இருக்கிறது ..அந்த சஸ்பென்ஸ் இறுதி எபிசோடில் அவிழ்கிறது ..சுழல் என்ற தலைப்பு இதனாலேயே மிகப் பொருத்தம்.

ஊட்டியின் அழகான இயற்கை காட்சிகள் ஒவ்வொரு பிரேமிலும் மனதை கொள்ளை அடிக்கிறது. சினிமேட்டோகிராபி முகேஷ்வரன் நூறு சதவீத பாராட்டுக்கு தகுதியானவர்.

மெயின் கதையின் இணை கதையாக, அவ்வூர் பெண் தெய்வம் அங்காளம்மன்… 10 நாள் திருவிழாவான “மயான கொள்ளை” ஊரில் கொண்டாடப்படுகிறது .. ஒவ்வொரு நாள் ஒரு சிறப்பு. திருவிழா காட்சிகள் சுவாரசியமாக கதையுடன் சேர்த்து பின்னப் பட்டிருக்கிறது. அங்காளம்மன் திருவிழா காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக படமாக்கப்பட்டிருக்கிறது.. இறுதியில் பத்தாம் நாள் திருவிழாவில் கதையின் முடிச்சு அவிழ்கிறது.

மிக விறுவிறுப்பாக காட்சிகள் நகர்வதால் பார்க்க சலிப்பு தட்டவில்லை…இனிமையான இயற்கை சூழல்.. விறுவிறுப்பான கதை நகர்வு..இயல்பான நடிப்பு..

என நம்மை சுழல் இழுத்துச் செல்கிறது.

விறுவிறுப்பாக கதை சென்றாலும், அடுத்தடுத்த திருப்பங்கள், அடுத்தடுத்த நிகழ்வுகள் என்று இருந்தாலும், மிக அதிகப்படியான திருப்பங்கள் கொண்டதோ என்ற ஒரு சிறு எண்ணம் என் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை …அதனாலேயே சுழல் என்று பெயர் பெயர் பொருந்தும்…மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின்னணி கதை அவசியமா என்று தோன்றுகிறது.

போகிற போக்கில் சமூகத்திற்கு ஒரு

அருமையான , அவசியமான, மெசேஜையும் சொல்லிச் செல்கிறது இத்தொடர். சிறுவயது நிகழ்வுகள் குழந்தைகளை எப்படி பாதிக்கும் ..குழந்தைகள் அதனைப் பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாத போது அவர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறும் என்பது மிக ஆழமாக, அழுத்தமாக ,சொல்லப்பட்டிருக்கும் கருத்து .அதற்கு கதாசிரியருக்கு மிகப்பெரிய பாராட்டைக் கூறலாம்.

மொத்தத்தில் பார்த்து ரசிக்க வேண்டிய

அருமையான தொடர். …நம்மை எழ விடாமல் பார்க்க வைப்பதே இத்தொடரின் வெற்றி என்று கூறலாம்.

தி.வள்ளி.


10.தமிழன் விஷ்ணு

சாம்பலூர் எனும் மலை கிராமத்தில் இயங்கும் சிமெண்ட் தொழில்சாலை க்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்க, போலீஸ்களை வைத்து தொழில்சாலையின் முதலாளி போராட்டத்தை களைக்க….அன்று இரவே சிமெண்ட் தொழில்சாலை தீ பிடித்து எரிய,அதே இரவில் தொழில்சாலையின் யூனியன் லீடர் மகள் காணாமல் போக கிராமத்தில் அங்காளம்மன் திருவிழாவும் நடக்க…சிமெண்ட் தொழில்சாலைக்கு தீ வைத்தது யார்? காணாமல் போன மகள் என்ன ஆனால் என்ன என்பதை 8 பார்ட் ஆக சுழன்று அடிக்குது இந்த சுழல்……

கதிர் மிகவும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.அவர்போலவே ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ்,ரா.பார்த்திபன் அழுத்தமான வேடம் அம்சமாக நடித்துள்ளார்கள்…..மகள்கள் மற்றும் மனைவியை தான் சரியாக புரிந்துகொள்ள வில்லை என்று அவர் உடையும் இடத்தில் நல்ல நடிப்பு பார்த்திபன்…

சாம் C. S பின்னணி இசையும், திரைக்கதையும் சீரிஸின் தரத்தை முன் நகர்த்துகிறது. மேலும் ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். மயானக்கொல்லை எனப்படும் நிகழ்வை இவ்வளவு நேர்த்தியாக யாரும் எந்த படத்திலும் பதிவு செய்யவில்லை….

ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வோர் முடிச்சு என பயணித்து முடிவில் ஆஹா என பெருமூச்சு விட வைத்து அனுப்பும் இந்த சுழல்….மொத்தம் 8 பார்ட் 4,5 ம்ம்ம்ம் கொஞ்சம் ஸ்லோ ரொம்ப இழுவை மாதிரியும் 6,7,8 அப்டியே ஸ்பீட்ல போகும்.

இந்த சீரிஸில் ஒரு முக்கியமான மெசேஜ் இருக்கிறது.அதற்காக இந்த சீரிஸை அனைவரும் பார்க்கலாம்..

தமிழில் விலங்கு சீரிஸ் க்கு அப்றம் இந்த சுழல் ஹிட் ஏ…..


11. Vidhya M

சுழல் படத்தின் மையக்கருவை இன்னும் வெளிப்படையாக பேசவேண்டிய காலச்சூழலில் இருக்கிறோம்.

ஆனால் இன்ன காரணத்துக்காகத்தான் இந்த கொலைகள் நடந்தது என்றில்லாமல், திரில்லர் சீரிஸில் ஏழு எபிசோட்கள் எடுத்துவிட்டோம் எட்டாவது எபிசோடில் ஏதாவது காரணத்தை சொல்லியே ஆகவேண்டும் என்பதுபோல் மட்டுமே படத்தின் கரு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் கலை / போட்டோக்ராஃபி ரசனை, 43” அல்லது அதுக்கும் கூடுதல் திரை உள்ள டிவி அப்றம் நிறைய நேரமும் அதைவிட கூடுதல் பொறுமையும் இருந்தால் மயானக் கொள்ளை காட்சிகளுடன் சேர்த்து படம் பிடிக்கலாம்.

ஒரு

அருமையான திரில்லர் படத்தை ஏன் மயானக்கொள்ளை டாக்குமெண்ட்ரியுடன் மிக்ஸ் பண்ணி சீரிஸ் ஆக்கிவிட்டார்கள் என்பது மட்டும்தான் புரியவில்லை. 😌

மத்தபடி படம் பார்க்கலாம் 🖤


12. Dhitalkies

பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ படைப்பாளிகள்

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் சுவராசியங்களை வெளியிடவேண்டாம் என்றும், இந்த தொடரின் அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு பார்வையாளர்களும் பிரத்யேகமாக பார்த்து ரசிக்க அனுமதிக்க வேண்டும் என இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான புஷ்கர் & காயத்ரி அவர்களின் பட்டறையிலிருந்து தயாராகி, அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடர் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’. க்ரைம் த்ரில்லர் பாணியிலான புலனாய்வு தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, அனைவரது பட்டியலிலும் இது இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சுவராசியமான முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருப்பதால் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் இந்த தொடரில் இடம்பெற்ற திடுக்கிட வைக்கும் சுவராசியமான திருப்பங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஏனெனில் தொடரின் ஒவ்வொரு திருப்பங்களையும், அவர்களே ஆழமாக உற்றுப்பார்க்கும் போது அவர்களது எதிர்பார்ப்பும், ஊகங்களும் கூட தவறாக போகலாம்.

மேலும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரைப் பற்றி தயாரிப்பாளர்கள் பேசுகையில், ” ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எதிர்பாராத வகையில் திருப்பங்கள் இருக்கிறது. திருப்பத்திற்குரிய தடயங்கள் இருந்தாலும், அவை பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. ஆனால் இறுதி அத்தியாயத்திற்கல்ல. நீங்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் திருப்பங்களை ஊகித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த வேண்டாம். நீங்கள் அனுபவித்த கலை இன்பத்தை மற்றவர்களும் உணர அனுமதிக்கவேண்டும். இந்த தொடர் தரும் ஆச்சரியத்துடன் கூடிய திருப்பங்களை, ஒவ்வொருவரும் பார்க்கும் போது, அவர்களே கண்டுபிடித்து ரசிக்கும் வகையில் மகிழ்ச்சியை பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.” என்றனர்.

இசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்

In Lists, Movies, Music on ஜூலை 26, 2020 at 1:40 முப

தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்குப் படங்களில் எந்தத் திரைப்படங்கள் கர்னாடக இசையையோ சாஸ்திரீய சங்கீதத்தையோ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன? அவற்றில் எந்த சினிமாக்கள் இன்றும் உங்களின் மனதில் நிலைத்திருக்கின்றன? ஹிந்துஸ்தானி என்றோ ராப் பாடல் என்றோ மியூசிகல் என்றோ எதைச் சொல்வீர்கள்?

எந்த வரிசையிலும் இல்லை.

  1. தில்லானா மோகனாம்பாள் (1968)
  2. தியாகய்யா (1946) – தெலுங்கு
  3. சர்வம் தாள மயம்
  4. சங்கராபரணம் (శంకరాభరణం) – தெலுங்கு
  5. Rock On!! (2008) – ஹிந்தி
  6. Gully Boy (2019) – ஹிந்தி
  7. சுவாதித் திருநாள் (1987) – மலையாளம்
  8. கொஞ்சும் சலங்கை (1962)
  9. அருணகிரிநாதர் (1964)
  10. நந்தனார் (1942, 1935)
  11. மீரா (1945, 1979)
  12. Baiju Bawra (1952)

இசையை சும்மா ஊறுகாய் மாதிரி வைத்துக் கொண்டு தமிழ்ப்பட மசாலா ஆன காதல், அம்மா செண்டிமெண்ட், சண்டை எல்லாம் வைத்து எடுக்கப்பட்ட ஜனரஞ்சகப் படங்கள்:

  1. கிழக்கு வாசல் (1990)
  2. கரகாட்டக்காரன் (1989)
  3. சிந்து பைரவி (1985)
  4. சூயட் (1994)
  5. முகவரி (2000)
  6. பாய்ஸ் (2003)
  7. சங்கமம் (1999)
  8. திருவிளையாடல் (1965)

இசை – முப்பது பதிவுகள்

In Lists, Music, Tamilnadu on ஜூலை 18, 2020 at 10:01 பிப

  1. பூச்சி சங்கீதம்: வண்டுகளில் இசை லயமும் சத்தங்களும்
  2. Carnatic Music Appreciation for Classical lovers
  3. Carnatic Music Documentaries: Classical performers from Tamil Nadu
  4. Ustad Bismillah Khan & Late Night Hindustani Music
  5. Book Choices to Read: Library Picks for January 2016
  6. Magsaysay For T.M. Krishna: EPiC MAP
  7. ஏ ஆர் ரெஹ்மான் – ஆஸ்கார் விருது
  8. கச்சேரி – பட்டுத்துவம் 
  9. இசை – ராஜத்துவம் 
  10. ராஜா ஆண்டாலும்: Gangai Amaran Rocks!
  11. இளையராஜா பாடி இசையமைத்ததில் பிடித்தவை
  12. இளையராஜா கச்சேரிகள்: விடாயாற்றி உற்சவம்
  13. செல்பேசிக்காக பாடலா? கருவிக்காக திரைப்படமா? 
  14. மணக்கால் எஸ் ரங்கராஜன் – இசைக் கலைஞர் டாகுமெண்டரி 
  15. ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள்
  16. Naan Kadavul – Music
  17. இளையராஜா இசையில் இறுதியாக இதம் தந்த இந்தி அல்லாத இனியவை எது?
  18. ஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல் ஒருவன்: ஒலி அனுபவம் 
  19. கைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம் III
  20. Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review
  21. Top Hindi Songs 2008: Bollywood Music Lists
  22. Notable Hindi Songs – 2007 – Film Music: Top 13
  23. Tamil Film Songs – Best of 2007 Movie Music
  24. Tamil Film Songs – 2006 Best
  25. கிராம்மி விருதுகள் 2006
  26. Benny Dayal – A Performer
  27. Nilavum Malarum & Ethilum Vallavanda
  28. Ten Songs 
  29. Random Songs
  30. Tamil Movie Songs f***in rock maan!

Best Tamil Movies of 2018: Top 10 Cinema

In Movies, Tamilnadu on ஜனவரி 1, 2019 at 5:19 பிப

இந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம்.

2018ன் திராபையான திரைப்படங்களையும் பட்டியலிட்டோம். 

Best Films of 2018 - Tamil Cinema Picks: Must See Movies from South India
  1. மனுசங்கடா – படம் குறித்த பார்வை
  2. மேற்குத் தொடர்ச்சி மலை
  3. காலா – காலா என்னும் ராமர் – ரஜினியாயணம்
  4. பரியேறும் பெருமாள்
  5. கோலமாவு கோகிலா
  6. தமிழ் படம் 2
  7. வட சென்னை
  8. காற்றின் மொழி
  9. சர்கார்
  10. எந்திரன் (ரோபோ) 2.0

Top 10 Double Meaning Songs in Tamil Cinema

In Literature, Movies, Tamilnadu on திசெம்பர் 21, 2018 at 9:49 பிப

தமிழ் சினிமாவில் வந்த இரட்டை அர்த்த பாடல்கள் எவ்வளவு இருக்கும்?

இரட்டை அர்த்தம் என்றாலே காமம் மட்டும்தானா?

எந்தப் பாடலை இந்த தலை பத்து டபுள் மீனிங் பட்டியலில் சேர்க்கலாம்?

  1. ரெண்டு கன்னம் சந்தனக் கின்னம்! தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்!! – வைரமுத்து
  2. அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல – பேரரசு
  3. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – புலமைப்பித்தன்
  4. மாடில நிக்குற மான் குட்டி… மேலவா காட்டுறேன் ஊர சுத்தி – கானா பாலா
  5. எப்படி? எப்படி!? சமைஞ்சது எப்படி – வாலி
  6. நிலா காயுது நேரம் நல்ல நேரம் – வாலி
  7. எலந்தப் பழம், செக்கச் சிவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் – கண்ணதாசன்
  8. நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றார் – வாலி
  9. மல மல மல மருத மல மல்லே மருத மலை – வாலி
  10. வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்காத்துட்டே – கங்கை அமரன்
Simbu STR Silamabarasan as Tamilandaa!

“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பெருமை #8 பாடலைச் சேரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.

2018 – Top 10 Tamil Movies

In Movies, Tamilnadu on திசெம்பர் 15, 2018 at 5:59 பிப

2018ன் திராபையான திரைப்படங்களை பட்டியலிட்டோம். 

இது வரை வெளியான 2018 தமிழ்ப்படங்களில் எது ஏமாற்றமடையச் செய்தது?

எந்த தமிழ் சினிமா கோலிவுட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளியது?

எந்தத் திரைப்படங்கள் வெறும் மார்கெட்டிங் வர்த்தகத்தால் ஓடியது?

2018ன் மோசமான தலை பத்து படங்கள்:

  1. 96
  2. செக்கச் சிவந்த வானம்
  3. தானா சேர்ந்த கூட்டம்
  4. விஸ்வரூபம் II
  5. நடிகையர் திலகம்
  6. மெர்க்குரி
  7. இரும்புத் திரை
  8. எச்சரிக்கை! இது மனிதர்கள் நடமாடும் இடம்
  9. ஸ்கெட்ச்
  10. கடைக்குட்டி சிங்கம்

சிறந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Foxcatcher vs Shankar’s ‘I’

In Lists on மார்ச் 23, 2015 at 2:54 முப

This post contains numerous spoilers about Foxcatcher and Director Shankar & Actor Vikram’s “I” movies

ஃபாக்ஸ் காச்சர்

1. மல்யுத்த வீரரைப் பற்றிய கதை ஆணழகன் போட்டியில் கலந்துகொள்பவரைப் பற்றிய கதை
2. பெரிய தொழிலதிபரான ட்யூபாண்ட் – முக்கிய வில்லன். ஹீரோவின் வாழ்க்கை நாசமாவதற்கு முக்கிய காரணம். இந்த வேடத்திற்கு என்று சிறப்பு மேக்கப் போட்டிருக்கிறார் – ஸ்டீவ் காரெல் விஜய் மல்லய்யா போல் தோற்றமளிக்கும் இராம்குமார் – முக்கிய வில்லன். இங்கேயும் பெரும் பணக்காரர் + முதலாளி. இவரை தண்டிக்கப்படுவதற்காக சிறப்பு உடல் அலங்காரம் போடப்பட்டிருக்கிறது.
3. தற்பால் சேர்க்கையாளர்களையும் ஓரின விழைவாளர்களையும் படம் உள்ளீடாக விமர்சிக்கிறது. படத்தின் முக்கிய வில்லன் ஆக தற்பால் விரும்புபவரை அமைத்தது விமர்சனத்திற்கு உள்ளானது.
4. மார்க் ஷூல்ஸ் என்னும் மல்யுத்த கதாநாயகனின் குரு + ஆதரவாளனாலேயே, மார்க் ஷூல்ஸ் அவதிக்கு உள்ளாகிறான். லிங்கேஸனின் முக்கிய புரவலரான டாக்டரின் செயல்பாடுகளினாலேயே, லீ – பிரச்சினைகளுக்கு உள்ளாகிறான்.
5. டியுபாண்ட் பணத்தினால் மரியாதையைப் பெற நினைக்கிறார். டாக்டர் வாசுதேவன், சதித்திட்டத்தினால் நாயகி தியாவை கைப்பிடிக்க நினைக்கிறார்.
6. ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றவர், அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தோற்பது அவமானத்தைத் தருகிறது. அழகினால் உலகெங்கும் புகழ்பெற்ற ‘லீ’, அதே உருக்குலைந்ததால் அவமானம் அடைந்து கூனிக் குறுகிறார்.
7. Team_Mark_Dave_Schulz_foxcatcher-poster Amy_i-movie_Vikram_Shankar_ai_Tamil_Films
8.
  • போதை மருந்துக்கு அடிமையாகுதல்;
  • மனநிலை பிறழுதல்;
  • தந்தையற்ற வளர்ப்புமுறையில் பாதிக்கப்படும் சிறுவர்கள்;
  • கற்பிப்பவருக்கும் கற்றுக்கொள்பவருக்கும் இடையே உள்ள உறவு;
  • பணக்காரர்களின் அதீத வாழ்வு முறை

என அமெரிக்கக் கலாச்சாரம் பேசப்படுகிறது.

  • புற அழகை மட்டும் ஊக்குவிக்கும் விளம்பர உலகம்;
  • விற்பனைக்காக எதற்கு வேண்டுமானாலும் நடிக்கும் வியாபாரியாக உலாவரும் விளையாட்டு வீரர்களும், மணப்புரம் கோல்ட் ஃபைனான்ஸியர்களும்;
  • மருத்துவ சந்தையில் எளிதாகக் கிடைக்கும் நச்சுக்கிருமிகளும் அதன் சமூகத் தாக்கங்களும்;

என இந்திய வாழ்வியல் காணக்கிடைக்கிறது.

9. அண்ணனுக்கும் தம்பிக்கும் நடக்கும் போராட்டம் உளவியல் சிக்கலாகச் சொல்லப்படுகிறது. மாடல் ஜானுக்கும் மிஸ்டர் மெட்ராஸ் லிங்கேசனுக்கும் நடக்கும் விளம்பர யுத்தம் வெளிப்படையாக கறுப்பு-வெள்ளையாக அரங்கேறுகிறது.
10. ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

Top 10 Hot Tamil Blogs

In Blogs, Lists, Tamilnadu on ஓகஸ்ட் 8, 2012 at 4:22 பிப

வலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.

அந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்?

இலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்?

சூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:

  1. வினவு – Vinavu – Tamil Forum – Revolutionary News
  2. IdlyVadai – இட்லிவடை
  3. adra saka – அட்ரா சக்க: CP Senthil Kumar
  4. kalakak kural: கலகக்குரல்
  5. true tamilans – உண்மைத்தமிழன்
  6. thamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்
  7. Cybersimman\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
  8. வருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்
  9. suvanap piriyan – சுவனப்பிரியன்
  10. விமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?