- Gandhi Jeyanthi – Subramaniya Samy – RSS Sonia – Georgia – US Tamilan
- Jolie Movie – Campaign Trail – Tonsure – Nuclear – Movie Marxist
- Vijayganth Dialogues – Cricket Betting – MP Gas Leak – Tourist Election Observers
- Creamy Layer – AK Antony – Drunkard MLA – Bank Strike
- Netha Pensions – Internal Affairs – VHP – Chikun Kunya
- Govt Holidays – ADMK Heart Attack – Brahmaputra Dam by China
Posts Tagged ‘பகிடி’
அந்தக் கால பேசும் செய்திகள்
In Lists, Misc on ஓகஸ்ட் 13, 2020 at 2:50 முபWho is the Real Thamizhan?
In Blogs, Life, Lists, Tamilnadu on ஜூலை 15, 2010 at 4:32 முபட்விட்டரில் மாயவரத்தனார் எழுதிய ‘இவன் தான் தமிழன்’ குறுஞ்செய்திகளில் இருந்து சில:
1. ’தலை சுத்துதுன்னு’ சொன்னா, ‘அஜீத்தா?’ அப்படீன்னோ, ‘ஹை..முதுகை பார்க்கலாமே’ அப்படீன்னோ அச்சுபிச்சு ஜோக் (?!) அடிக்கிறவன் தான் #தமிளன்
2. யாருனாச்சும் கேமரா வெச்சிருந்தா தான் போட்டோ எடுத்து தர்றாதா சொல்லி தலையை பாதி கட் பண்ணி போட்டோ எடுக்கிறவன் தான் #தமிளன்
3. பிட்ஸா கண்டு பிடிச்சதே நம்மூரு ஊத்தப்பத்தை வெச்சு தான் அப்படீன்னு உலக மகா உண்மையை அடிச்சு விடுறவன் தான் #தமிளன்
4. பர்கரை வாங்கி ரெண்டு பன்னையும் தனித்தனியா பிச்சு சாப்பிடுறவன் தான் #தமிளன்
5. பக்கத்து தெருவுக்கு சும்மா போவுறதுக்கு கூட முதுகில ஒரு பொதி மூட்டையை மாட்டிக்கிட்டு கிளம்புறவன் தான் #தமிளன்
6. டொக்கு செல்போனிலயும் 4 ஜிபி மெமரி இருக்குறதா கதை உடுறவன் தான் #தமிளன்
7. கூட்டமான எலக்ட்ரிக் ட்ரெயினிலே நட்ட நடு செண்டரில நின்னு செல்போனிலே உச்சபச்ச டெசிபலில் பேசுபவன் தான் #தமிளன்
8. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ எல்லாம் ஒரு பஞ்ச் டயலாக்குன்னு இன்னமும் நம்பிட்டிருக்கவன் #தமிளன்
9. பாண்டிச்சேரிக்கு போறோம்ன்னு சொன்னாலே பாட்டிலுக்கு தான் அப்படீன்னு நெனச்சு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிறவன் தான் #தமிளன்
10. எந்த ஊர் பேர் சொன்னாலும் அந்த ஊர் ஸ்பெஷல் சாப்பாட்டைப் பத்தி பேசறவன் #தமிளன் – பெனாத்தல்
11. ரவுடியா இருந்தாலும் நடிகரா இருந்தாலும் ‘அடைமொழி’யோட தான் சொல்லுவேன்னு அடம் புடிக்கிறவன் தான் #தமிளன்
12. சன் டி.வி.யில ஒரு நியூஸ் பாத்திட்டு அதையே ஜெயா, கலைஞர், விஜய், டி.டி. எல்லாத்திலயும் மறுபடியும் பாக்குறவன் #தமிளன்
13. இளையராஜா காலத்தில எம்.எஸ்.வி.யையும், ரஹ்மான் காலத்துல இளையராஜாவையும் புகழ்ந்து பேசுறவன் #தமிளன்
14. டூத் பேஸ்ட் முடிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சும் ஏறி நின்னு மிதிச்சு உள்ள இருக்கிறதை உபயோக்கிறவன் #தமிளன்
15. பக்கத்து வீட்டுல இடியே விழுந்தாலும் கண்டுக்காம சீரியல் பாக்குறவன் #தமிளன்
16. டிவிட்டர் ஃப்ரீன்னா இப்படி எதையாவது சொல்லி ரிவிட் அடிக்கிறவன் #தமிழன். – ஹரன்பிரசன்னா
17. ’இந்த மாதிரி ஒரு சம்மரை என் லைப் டைம்ல பாத்ததில்லை’ன்னு ஒவ்வொரு வருஷமும் சொல்றவன் #தமிளன்
18. ஆனந்த விகடனில் தனது ட்விட் வராவிட்டால், ஆள் தெரியாததாலோ கவனிக்காததாலோ வராமல் போச்சுன்னு ட்விட்டறவன் தான் #தமிளன் – ஸ்னாப்ஜட்ஜ்
19. செஃல்ப் டேமேஜ் பண்ணிக்கிட்டாலும் சிரிச்சுக்கிட்டே யாருக்கோ மாதிரி நினைச்சுகிறவன் #தமிளன் – ஆயில்யன்
20. தன் மூஞ்சியை கண்ணாடில பார்க்காம விஜயகாந்த்தையும் T.Rரையும் கிண்டலடித்துக் கொண்டிருப்பவன் #தமிளன் – ஜிகார்த்தி1
21. தல தல என்று சொல்லியே அந்த தலயின் காலை வாருகின்றவன் #தமிளன் – மு75
22. பொழுதுபோகலன்னு தமிழனையே கிண்டல் பண்ணி பேசுறவன் தான் உண்மையான தமிழன் #தமிளன் – கார்க்கி
23. ஆக்ஸ்வலி என்னாது இது? இதை எப்படி செய்வாங்க என்று அரிசியை பார்த்து கேட்பவன் தான் தமிழன் # தமிளன் – குசும்புஒன்லி
24. 53 வயசான ஒருத்தரை இன்னமும் ‘இளைய’ திலகம் எண்டு அழைக்கிறவன் #தமிளன் – kangon
25. விடை தெரிந்தே கேள்வி கேட்கும் நீர்தான் உண்மையான #தமிளன் – கேஸ்வாமி
26. அமெரிக்க பொருளாதாரத்தை நினைத்து கவலை கொள்பவன் #தமிளன் – mu75
27. அடுத்தவன் தப்பை அருவாமணையா திருத்திகிட்டிருக்கறவன் # தமிளன் – ஜெயஸ்ரீ
28. தன் பெருமையே பேசிக்கிட்டு திரியறவன். #தமிளன் – Jsrigovind
29. அடுத்தவன் எழுதறதை சுட்டு, தானே எழுதியதாப் போடறவன் தமிழன் – ஸ்னாப்ஜட்ஜ்
30. டீ சர்ட்டும் முக்கால் டவுசரும் போட்டுக்கிட்டு கிராமத்து கோயிலில் காட் & கல்ச்சர் பத்தி டிபைனுறவன் #தமிளன் – aayilyan
31. மூணு பேரு சேர்ந்தா நாலு சங்கம் ஆரம்பிக்கறவன் #தமிளன் – ஸ்ரீகாந்த்
32. பறவை முனியம்மான்ற பேர் வெச்சிருக்காங்க. றெக்கையே இல்லையேன்னு ஆராய்ச்சி பண்ணுறவன் #தமிளன்
33. திருவள்ளுவர்தான் தெய்வம்னு சொல்லிக்கிட்டு, ஒரு திருக்குறளை கூட உருப்படியா சொல்லத் தெரியாதவன் #தமிளன் – ஹரன் பிரசன்னா
34. பாரின் போய்ட்டு வந்தா எப்பவும் அரைடிராயரோட கையில மினிமினரல் வாட்டர் பாட்டிலோட சுத்தறவன் #தமிளன் – அதிஷா
35. ஒருத்தன் ஒண்ணு சொன்னா இதை ஏற்கெனவே இன்னார் இங்க சொல்லிட்டாங்கன்னு உடனே ஓடிவர்றவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா
36. ஜப்பான்ல பொட்டிக்கடைக்காரனுக்கு இங்கிலீஷே தெரிலன்னு கோபப்படுறவன் தான் #தமிளன்
37. ஊர்க்காரங்களைப் பார்த்ததும் யார் ஜாதி என்னான்னு நேரடியா கேக்காம கண்டுபிடிக்கிறது எப்படின்னு யோசிக்கிறவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா
ஃபினிஷிங் டச்:
அடுத்தவன் நம்மை எதாவது சொல்லிடப் போறானேன்னு அவனுக்கு முன்னால் தானே சொல்லறவந்தான் #தமிளன் – இலவசம்
கொசுறு:
தான் என்னவோ வேற்றுகிரக ஆசாமி போல இப்படி ட்வீட்டுறவன் தான் #தமிளன்