Snapjudge

Posts Tagged ‘நாவல்’

Top 12 Tamil Books of Writer Jeyamohan

In Books, Literature, Tamilnadu on திசெம்பர் 15, 2018 at 11:54 பிப

நூறு புத்தகங்களாவது ஜெயமோகன் எழுதியிருப்பார். அதில் எனக்குப் பிடித்த தலை பத்து (சரி… பன்னிரெண்டு ஆகிவிட்டது; அதற்கே தாவு தீர்கிறது! ஈராறு கால்கொண்டெழும் புரவி எல்லாம் சேர்க்க முடியவில்லை)  நூல்கள் கீழே காணலாம். இதில் மஹாபாரதம் கிடையாது (இன்னும் வாசிக்கவில்லை); சிறுகதைத் தொகுப்புகளுக்கு ஒன்று உண்டு; நாவல்களும் உண்டு; கட்டுரைகள் எனக்கு உவப்பானவை – எனவே அவை நிறைய உண்டு:

  1.  இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
  2.  ஏழாம் உலகம்
  3.  இலக்கிய முன்னோடிகள்
  4.  புறப்பாடு
  5.  காடு
  6.  அபிப்பிராய சிந்தாமணி
  7. ஜெயமோகன் குறுநாவல்கள்
  8.  பின் தொடரும் நிழலின் குரல்
  9.  சங்கச்சித்திரங்கள்
  10.  விஷ்ணுபுரம்
  11.  சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்
  12.  ஜெயமோகன் சிறுகதைகள்

உதவி:

Maatruveli – மாற்றுவெளி

In Literature, Magazines, Tamilnadu on ஜூலை 11, 2014 at 2:28 பிப

ஃபேஸ்புக்கில் போகன் எழுதியது:

மாற்றுவெளி கோலின் மக்கன்சியைப் பற்றிய ஒரு சிறப்பிதழைக் கொண்டு வந்துள்ளது. மிக விஷய பூர்வமான கட்டுரைகளைத் தாங்கிய இதழ். ராணுவ அதிகாரியாக பணிபுரிந்துகொண்டே காலின் மக்கன்சி பக்கவாட்டில் செய்த காரியங்கள் மிக முக்கியமானவை. அழிந்து போகும் நிலையிலிருந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். வம்ச வரலாறுகளைப் பதிவு செய்தார்.கல்வெட்டுகளைப் படி எடுத்தார். வாய்மொழிக் கதைகளை பதிவு செய்தார். அவை மட்டுமல்ல கோவில்களை மனிதர்களை என்று அந்தக் காலத்தை ஓவியங்களில் பதிவு செய்ய முயன்றார். இன்றைக்கும் அவரது சேகரம் முழுக்க ஆராயப்படாமல் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் தேங்கிக் கிடக்கிறது

கால்டுவெல்லுக்கு முன்பே தென்னிந்திய அல்லது திராவிட வரலாறு வட இந்திய வரலாற்றிலிருந்து தனித்துவம் மிக்கது சுயேச்சையானது தமிழ் மொழி சமஸ்கிருதத்தில் இருந்து முளைத்ததல்ல என்ற கருத்தியலுக்கு அழுத்தமான துவக்கத்தை இவரும் எல்லிசும் தான் விதைத்தார்கள்.

Promising Tamil Writers: Nanjil Nadan picks Potential Literature Stars

In Books, Literature, Tamilnadu on ஜூன் 6, 2014 at 7:39 பிப

”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”

இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.

  1. சயந்தன்
  2. தமிழ்நதி
  3. இளங்கோ
  4. குமாரசெல்வா
  5. வா.மு.கோமு
  6. மு.ஹரிகிருஷ்ணன்
  7. ஜே.பி.சாணக்யா
  8. கே.என்.செந்தில்
  9. எஸ்.செந்தில்குமார்
  10. பா.திருச்செந்தாழை
  11. என்.ஸ்ரீராம்
  12. தூரன் குணா
  13. சந்திரா
  14. இளஞ்சேரல்
  15. அ.வெண்ணிலா
  16. லக்ஷ்மி சரவணக்குமார்
  17. கட்டுரைகள் — மீனா
  18. தி.பரமேசுவரி,
  19. ச.விசயலட்சுமி
  20. கவிஞர்களில் உமா மகேஸ்வரி
  21. குட்டி ரேவதி
  22. லீனா மணிமேகலை
  23. சுகிர்தராணி
  24. சக்தி ஜோதி
  25. சாம்ராஜ்
  26. லிபி ஆரண்யா
  27. இசை
  28. இளங்கோ கிருஷ்ணன்

Nanjil_picks_Writers

எஸ்.ரா. போல் நீங்களும் தொகுப்பாசியராக 9 வழிகள்!

In Books, Business on ஜனவரி 7, 2014 at 4:14 முப

1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.

2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.

3. ஆம்னிபஸ்அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.

4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.

5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.

6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.

7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.

8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.

9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.

85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி

In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.

  1. வாணிதாசன்
  2. முடியரசன்
  3. ஜெகசிற்பியன்
  4. தமிழவேள் உமாமகேசுவரனார்
  5. கா. அப்துல்கபூர்
  6. தி.கோ.சீனிவாசன்
  7. கா. சுப்பிரமணிய பிள்ளை
  8. கெ.என். சிவராஜ பிள்ளை
  9. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
  10. ஆனந்தரங்கப்பிள்ளை
  11. புலவர் குழந்தை
  12. பா. வே. மாணிக்க நாயக்கர்
  13. ஆர். சண்முகசுந்தரம்
  14. சி. இலக்குவனார்
  15. கா. அப்பாத்துரை
  16. மா. இராசமாணிக்கனார்
  17. அ.சிதம்பரநாதச் செட்டியார்
  18. வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
  19. டி.எஸ். சொக்கலிங்கம்
  20. சதாசிவ பண்டாரத்தார்
  21. சே.ப.நரசிம்மலு நாயுடு
  22. வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
  23. த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
  24. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
  25. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
  26. பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
  27. கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
  28. வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
  29. தொல்காப்பியர்
  30. ஒளவையார்
  31. கம்பன் (தமிழ் மகாகவி)
  32. மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
  33. பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
  34. புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  35. ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
  36. வேதநாயகம் பிள்ளை
  37. கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  38. ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
  39. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
  40. மறைமலை அடிகள்
  41. திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
  42. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
  43. அ. மாதவையா
  44. ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
  45. நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
  46. நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
  47. க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
  48. ம.ப. பெரியசாமித் தூரன்
  49. அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
  50. வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
  51. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
  52. பாரதியார்
  53. தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
  54. அறிஞர் அண்ணா
  55. கல்கி
  56. மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
  57. விந்தன்
  58. நா.வானமாமலை
  59. சோமலெ
  60. உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
  61. செய்குத் தம்பிப் பாவலர்
  62. வை.மு.கோதைநாயகி அம்மாள்
  63. தேவநேயப் பாவாணர்
  64. ந. பிச்சமூர்த்தி
  65. ஜீவ நாரண துரைக்கண்ணன்
  66. உடுமலை நாராயண கவி
  67. கோபாலகிருஷ்ண பாரதி
  68. குலசேகராழ்வார்
  69. தி. ஜானகிராமன்
  70. திரிகூடராசப்பக்கவிராயர்
  71. வ.உ. சிதம்பரனார்
  72. மா.பொ.சிவஞானம்
  73. பி. எஸ்.ராமையா
  74. பெரியார் ஈ.வெ.ரா
  75. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
  76. திருஞானசம்பந்தர்
  77. பரஞ்சோதி முனிவர்
  78. கு.அழகிரிசாமி
  79. க. அயோத்திதாச பண்டிதர்
  80. அழ. வள்ளியப்பா
  81. அருணகிரிநாதர்
  82. குமரகுருபரர்
  83. குன்றக்குடி அடிகளார்
  84. தேசிக விநாயகம் பிள்ளை
  85. காரைக்காலம்மையார்

20 தமிழ் இலக்கியவாதிகள்

In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 10, 2012 at 6:50 பிப

பல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.

அப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.

உரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல! சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக!!

1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி

2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்

3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து

4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி

5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்

6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்

7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு

8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி

9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்

10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை

11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்

12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்

13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்

14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்

15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி

16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்

17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்

18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா

19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்

20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்

21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்

காவல் கோட்டம்: எஸ் ராமகிருஷ்ணன் விமர்சனப் பத்து

In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப

நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு

1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.

2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.

3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.

4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.

5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.

6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.

7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.

இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.

கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.

8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme

இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.

கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.

10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?

அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.

S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

In Books, Lists, Literature on ஜூன் 21, 2012 at 3:28 முப

முந்தைய எஸ் ராமகிருஷ்ணன் வீடியோ பதிவுகள்:

* Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

* Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

* S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

1. ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகம் – தமிழச்சி தங்கபாண்டியன் நடிக்கிறார்

2. நீயா நானா – புத்தக வாசிப்பு ஏன் அவசியம்?

3. சென்னை புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் இதழின் புத்தக வெளியீடு

4. தமிழ் கவிதைச் சூழல் – நூல்களும் கவிஞர்களும்: தமிழ்நாடு & ஈழம்

5. அன்னா கரேனினா – கரீநிநா கதையும் ஃபேஸ்புக் கலாச்சாரமும்

List of Tamil Juries for Sahitya Academy: சாகித்ய அகாடெமி ஜூரி பட்டியல்

In India, Lists, Literature, Tamilnadu on ஜூன் 1, 2012 at 8:20 பிப

சாஹித்ய அகாதெமி விருதில் நடுவர் குழுவில் இடம்பெற்றவர் யார்?

இவர்களில் எத்தனை பேர் விமர்சகர்கள்?

இலக்கிய ரசிகர்கள் என்று பெயர் எடுத்தவர் இருக்கிறார்களா?

படைப்பிலக்கியத்திலும் புனைவிலும் ஆளுமைகளா?

பத்திரிக ஆசியர்கள் உண்டா?

எவ்வளவு பேர் எவ்வித அரசியல் சார்பு கொண்டவர்கள்?

அவர்களின் கம்யூனிச, சித்தாந்த சாய்வு நிலை என்ன?

யார் தோழருக்கு நண்பர்?

  1. Dr. Abdul Rahman – அப்துல் ரெஹ்மான்
  2. Dr. E. Sundaramurthi – ஈ. சுந்தரமூர்த்தி
  3. Dr. K. S. Subramanian – கே. எஸ். சுப்ரமணியன்
  4. Dr. M. Palaniappan – எம். பழனியப்பன்
  5. Dr. R. Kumaravelu – ஆர். குமாரவேலு
  6. Dr. S. Chandra – எஸ். சந்திரா
  7. Prof. K. Chellappan – கே. செல்லப்பன்
  8. Smt. Madana Calliyani – மதன கல்யாணி
  9. Sri Kalladan – கல்லாடன்
  10. Sri Kovai Gnani – கோவை ஞானி
  11. Sri Kurinjivelan – குறிஞ்சிவேலன்
  12. Sri Samakodangi Ravi – சாமகோடங்கி ரவி
  13. Sri Tamilnadan – தமிழ்நாடன்
  14. Sri Thopil Mohamad Meeran – தோப்பில் முகமது மீரான்
  15. Sri V. Sabanayagam – வே சபாநாயகம்

 

Top 10 Tamil Authors: Bestselling books and Popular mainstream Writers in Tamilnadu

In Literature, Tamilnadu on மே 8, 2012 at 9:02 பிப

இன்றைய தேதியில் யார் ஹாட்?

எவருடைய புத்தகங்கள் சுடச்சுட விற்கின்றன?

ஆயிரம் எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள என் வீட்டில் விருந்தினர் வந்தால், எவை விரும்பி கேட்கப்படுகின்றன?

பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு அயல்நாடு போய்விட்டாலும், பார்ட்டிகளிலும் சந்திப்புகளிலும் எந்த ஆசிரியரின் ஆக்கங்கள் அதிகம் பேசப்படுகின்றன?

புத்தக விற்பனையாளர் பத்ரியை கேட்காமல் விமரிசகர் ஜெயமோகனிடம் சர்வே போடும் இட்லி வடை சரிபார்க்காமல் சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி மதிப்பிடாமல் சாமானியனின் பட்டியல்:

எழுதாவிட்டாலும் இன்றும் ஆயிரம் பொன்

  1. சுஜாதா
  2. லஷ்மி
  3. கல்கி
  4. அறிஞர் அண்ணா
  5. தமிழ்வாணன்
  6. தி. ஜானகிராமன்
  7. ஜெயகாந்தன்
  8. கண்ணதாசன்
  9. சாண்டில்யன்
  10. பாரதியார்

புதியது லாண்டிரி குறிப்பாகவே இருந்தாலும் ஆயிரம் பொன்

  1. பாலகுமாரன்
  2. மதன்
  3. வைரமுத்து
  4. சுகி சிவம்
  5. ரமணிசந்திரன்
  6. ஜெயமோகன்
  7. ஜக்கி வாசுதேவ்
  8. எஸ் ராமகிருஷ்ணன்
  9. மல்லிகா பத்ரிநாத்
  10. சாரு நிவேதிதா

உங்க ஜோசியத்தில் யாருண்டு?