Posts Tagged ‘தேர்தல்’
ADMK, அம்மா, கருத்துக் கணிப்பு, கருத்துக்கணிப்பு, கலைஞர், ஜெஜெ, தேர்தல், மாலன், வாக்கு, வோட்டு, DMK, Eelam, Elections, GoSL, LTTE, Maalan, Malan, MP, Opinions, Politics, Polls, Sri Lanka, Srilanka, Surveys, Tamilnadu, Therthal, TN
In Magazines, Politics, Tamilnadu on ஏப்ரல் 27, 2009 at 10:02 முப
தேர்தலின் திசைகளில் இடம்பெற்ற மாலனின் பத்து தேர்தல்:
1. அடுத்த பிரதமரைத் தமிழகம் தீர்மானிக்கும் என்பது
மிகையான கற்பனை
|
|
நிச்சியம் நடக்கும்
|
|
வாய்ப்புக்கள் உண்டு
|
|
No Chance!
|
|
2. இளைஞர்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்காதது
ஏமாற்றமளிக்கிறது
|
|
எதிர்பார்த்ததுதான்
|
|
இருந்தால்தானே கொடுக்க முடியும்?
|
|
3. திருமாவளவனின் பேச்சு உணர்த்துவது
யதார்த்த நிலைமை
|
|
இரண்டு சீட்டுக்காகப் போடும் ஜால்ரா
|
|
இலங்கைப் பிரசினையில் இனித் திமுக எதுவும் செய்யாது
|
|
4. லாலுவின் பாப்ரி மஸ்ஜித் பேச்சு
பிளாக் மெயில்
|
|
சரி.ஆனால் Too Late
|
|
பாஜகவிற்கு சாதகம்
|
|
5. வெளிநாட்டிலுள்ள கறுப்புப் பணத்தைக்
கட்டாய்ம் கொண்டு வந்தே ஆக வேண்டும்
|
|
கொண்டுவருவது நடைமுறையில் சாத்தியமில்லை
|
|
கொண்டு வர முயற்சித்துப் பார்க்கலாமே?
|
|
முதல்ல இங்க உள்ளதைக் கொண்டாங்கய்யா!
|
|
6. இலங்கைத் தமிழர்களின் இன்றைய இன்னலுக்குப் பெரிதும் காரணம்
மத்திய அரசின் மெத்தனம்
|
|
பிரசினையை சரியான முறையில் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லாத கருணாநிதி
|
|
விடுதலைப் புலிகளின் அணுகுமுறை
|
|
7. திமுக அறிவித்துள்ள வேலை நிறுத்தம்
இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிததிலும் உதவாது
|
|
தேர்தல் நேரத்து வீரம்
|
|
இதைக் கூட செய்யவில்லை என்றால் எப்படி?
|
|
8. ஜெயலலிதா கூறும் ஊழல் புகார்
உண்மையாக இருக்கலாம்
|
|
உள்நோககம் கொண்டது
|
|
விரிவான விசாரணை தேவை
|
|
பொருட்படுத்தத் தக்கதல்ல
|
|
9. ஜெயலலிதாவின் மனமாற்றம்
வரவேற்கத் தக்கது
|
|
ந்ம்புவதற்கில்லை
|
|
தேர்தல் தந்திரம்
|
|
புரியமாட்டேங்குதே!
|
|
10. காலணி வீசும் கலாசாரத்திற்கு
தொலைக்காட்சிகள் காரணம்
|
|
அடக்குமுறை காரணம்
|
|
விளம்பர ஆசை காரண்ம்
|
|
2009, Actors, ADMK, தேர்தல், நடிகர், வாக்கு, வோட்டு, BJP, Canddiates, Cinema, Congress, DMK, Elections, Films, Movies, Politics, Polls, Screen, Tamilnadu, TN, Voters
In Lists on ஏப்ரல் 20, 2009 at 7:52 பிப
- நடிகன் நெப்போலியன் – பெரம்பலூர் : திமுக
- காமெடியன் சிவக்குமார் என்கிற ஜே கே ரித்தீஷ் – ராமநாதபுரம் : திமுக
- இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் – கள்ளக்குறிச்சி : லட்சிய திமுக
- வில்லன் மன்சூர் அலிகான் – திருச்சி : லட்சிய திமுக
- வெளிவராத படத்தின் ஹீரோ திருமாவளவன் – சிதம்பரம் : விடுதலை சிறுத்தைகள்
- ஒரு பட கதாநயகன் திருநாவுக்கரசர் – ராமநாதபுரம் : பாஜக
- கார்த்திக் முத்துராமன் – விருதுநகர் : அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
- எஸ்.எஸ்.சந்திரன் – மத்திய சென்னை : அதிமுக
2009, காங்கிரஸ், தேர்தல், பட்டியல், பாஜக, பிரதம மந்திரி, மூண்றாம் அணி, வேட்பாளர், Cabinet, Candidates, Elections, India, Ministers, PM, Politics, Polls, President, Votes
In India, Politics on மார்ச் 30, 2009 at 5:02 பிப
இந்தத் தேர்தலில் பிரதம மந்திரியாக யாருக்கெல்லாம் ஆசை? எவருக்கு வாய்ப்பு?
ஒவ்வொரு கட்சியும் முன்னிறுத்துபவர் பட்டியல்:
- வருண் காந்தி
- இராகுல் காந்தி
- மாயாவதி
- லாலு பிரசாத் யாதவ்
- நரேந்திர மோடி
- மன்மோகன் சிங்
- லால் கிருஷ்ண அத்வானி
- ஜெ ஜெயலலிதா
- சரத் பவார்
- சோனியா காந்தி
Arjun, அரசியல், சினிமா, தேர்தல், படம், Bribes, Cinema, CM, Corruption, Elections, Films, India, Issues, kalainjar, Kamal, Karunanidhi, Kickbacks, Maniratnam, MGR, Minister, MLA, Movies, MP, PM, Politics, Polls, Rajini, Satire, Satyaraj, Shankar, Sivaji, Tamilnadu, TN
In Movies, Politics, Tamilnadu on மார்ச் 19, 2009 at 11:34 பிப
நன்றி: ட்விட்டர் தமிழ்ப்படை
- முகமது பின் துக்ளக் – சோ
- ஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்
- கண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி
- ஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்
- அக்ராஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்
- தியாக பூமி – கல்கி
- சிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி
- நிஜங்கள்
- தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்
- மக்களாட்சி – ஆர் கே செல்வமணி
- முதல்வன் – ஷங்கர்
- இருவர் – மணிரத்னம்
- அச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்
- தேசிய கீதம் – சேரன்
- அமைதிப்படை – சத்யராஜ்
- சத்யா – கமல்ஹாசன்
- என் உயிர்த் தோழன் – பாரதிராஜா
- பாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி
- அருணாச்சலம் – ரஜினி
- மகாநடிகன் – சத்யராஜ்
அரசியல், இணையம், ஐடியா, தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள், தேர்தல், வலை, Blogs, Concepts, Elections, Ideas, New, Politics, Polls, Social, Tamil, Thoughts, Ventures
In India, Politics, Tamilnadu on மார்ச் 18, 2009 at 3:11 பிப
தேர்தல் குறித்து நான் அறிந்தவரைக்கும் நான்கு பதிவுகள்தான் தேறுகிறது.
இப்போது புதிய பதிவு தொடங்குவதற்கான ஐடியா:
- தினம் ஒரு வினா: அன்றைய சூடான பிரச்சினையை கேள்வியாக மாற்றி, இரு தரப்பு விவாதத்தையும் இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லி, வாசகரை வாக்களிக்க சொல்வது. மாலன் இதை செய்கிறார் என்றாலும் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இதைத் தொடரவில்லை.
- புகைப்படமும் செய்தித் தொகுப்பும்: செய்திகளுக்கு கூகிள், தினமலர், யாஹூ, எம்.எஸ்.என் எல்லாம் இருக்கிறது. நிழற்படம் எளிதில் கிடைப்பதில்லை. தினசரி நிகழ்வுகளை பருந்துப் பார்வை செய்தித் தொகுப்பாக்கி, கூடவே முக்கியமான, அரிதான ஒளிக்கோர்வைகளை சொடுப்பது.
- குசும்பு கருத்து கார்ட்டூன்: திருமாவும் கருணாநிதியும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? விஜய்காந்த்தும் ரஜினியும் சேர்ந்திருக்கும் பழைய படத்திற்கு உங்கள் எண்ணச்சிறகு எப்படி பறக்கும்? குசும்பர் செய்கிறார் என்றாலும், எக்ஸ்க்லூசிவாக இந்திய தேர்தல் களத்திற்கு செய்வது.
- அன்றும் இன்றும்; சொன்னார்கள்; துக்கடா: இன்றைக்கு ஒரு அறிக்கை விடுவது; அது என்றோ சொன்னதற்கு நேர் எதிராக இருப்பது அரசியல் லட்சணம். அந்த மாதிரி முரண்களை முன்னிறுத்துவது. பொருத்தமான மேற்கோள்களுக்கு, பதிலாக கருத்துக்கணை ரெண்டணா வீசுவது.
- எண்ணும் புள்ளிவிவரமும்: ‘ரமணா’ விஜய்காந்த் மாதிரி ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு வேட்பாளருக்கும், அனைத்து கட்சிகளுக்கும் பின்புல தகவல்களை சுவையாகக் கொடுப்பது. எத்தனை முறை குற்றஞ்சாட்டப்பட்டார்? எவ்வளவு தடவை தொகுதிக்கு விசிட் அடித்தார்? வாக்கு விகிதாச்சாரம்?
- பேட்டி, நேர்காணல், வல்லுநர் பார்வை: விடுதலை சிறுத்தை இரவிக்குமார் துவங்கி பா.ஜ.க. பிரதம வேட்பாளர் அத்வானி வரை வலையில் வசிப்போரே. அவர்களிடம் இமெயில் பேச்சுவார்த்தை நடத்துவது. முன்னாள் எம்பி, அதிருப்தி எம்.எல்.ஏ என்று வலை வீசி சிறப்புக் கட்டுரை வாங்குவது; தமிழிணைய தாதாக்களிடம் கிடுக்கிப் பிடி இன்டெர்வ்யூ பெறுவது.
- தேர்தல் அறிக்கை ஆராய்ச்சி, ஆய்வு: “கெட்டதெல்லாம் கெட்டது. இலவச டிவி கிழவனைத் தூக்கி மனையில் வை” என்கிற மாதிரி 55 கெட்ட விவாத துவக்க புள்ளிகளை விக்கி பட்டியலிட்டிருக்கிறது. மலிவு அரசியலை விட்டுவிட்டு சமூகம் எதிர்நோக்கும் விஷயங்களில் கட்சி நிலைப்பாடுகளையும் வேட்பாளரின் பாராளுமன்ற நடவடிக்கையையும் அரசின் செயல்பாடுகளையும் அலசுவது.
- ஆங்கில ஊடகம், மாற்று பத்திரிகை, பிற தினசரி: Covert, Tehelka போன்ற பத்திரிகைகளின் தலையங்கம் என்ன? டெலிகிராஃப், ஸ்டேட்ஸ்மேன், TOI, HT என்ன சொல்கிறது? ஈநாடு, ஆனந்த பஜார் பத்ரிகாவில் என்ன முக்கியமான மேட்டர்? அவுட்லுக், சன்டே இந்தியன், வீக், இந்தியா டுடே எல்லாம் என்ன எழுதி உள்ளது?
- தகவல் சரிபார்த்தல்; பிழைபொறுக்கி: நம் தலைவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது கஷ்டம். இலவச அரிசிக்கு எவ்வளவு செல்வாயிற்று? யார் காலத்தில் மின்சாரம் எவ்வளவு கட் ஆனது? எப்போது எந்த நிலையை எவர் ஆதரித்தார்? சொன்னது சரிதானா என்று பூதக்கண்ணாடி வைத்து குற்றங்கண்டுபிடிப்பது.
- யூ ட்யூப், ஃப்ளிக்கர், வலைப்பதிவு தொகுப்பான்: எல்லா சோஷியல் மீடியாவிடமிருந்தும் பொருத்தமான இடுகையை ஒத்த தலைப்பில் சேர்த்துக் கொடுப்பது. வேட்பாளரை நேரில் சந்தித்து விழியமோ, புகைப்படமோ வலையேற்றும் கலையைக் கற்றுத் தருவது.
- கொசுறு – தமிழ் ஆனியன்: ஆங்கில ஆனியன் பார்த்திருப்பீர். லக்கிலுக் போன்றோர் அவ்வப்போது எழுதும் ஒன்றரை பக்க நாளேடு படித்திருப்போம். அன்றாட செய்திகளை நக்கலெடுப்பதே முழு நேரத் தொழில். புகைப்படங்களை வெட்டி ஒட்டுதல், போலி பேட்டி, நிஜ அறிக்கை போன்றே தோன்றும் பகிடி, கிட்டத்தட்ட நம்பிவிடக் கூடிய கிண்டல் உல்டா நிறைப்பது.
ADMK, Assets, Attorneys, அரசியல், எம்பி, தேர்தல், வாக்காளர், வேட்பாளர், BJP, Congress, Courts, Criminals, Criteria, Daughter, Delhi, DMK, Doctor, Elections, Eligibility, Graduation, Kin, Kith, Lawyers, MLA, MP, Nexus, PMK, Politics, Polls, Relations, Relatives, Responsibility, Son, TN
In India, Lists, Politics on மார்ச் 10, 2009 at 9:09 பிப
- ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி
- முன்னாள் (அ) இன்னாள் மந்திரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்
- நாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகையாக பதவி உயர்வு பெற்றவர்.
- பதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.
- ஆளும் எதிர்க்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதிக் கட்சி ஆரம்பித்திருப்பவர்.
- சமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி
- மன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர்/எழுத்தாளர்/இயக்குநர்.
- கட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல்.
- ஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகராய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.
- துணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)