This post contains numerous spoilers about Foxcatcher and Director Shankar & Actor Vikram’s “I” movies
ஃபாக்ஸ் காச்சர் |
ஐ |
|
1. | மல்யுத்த வீரரைப் பற்றிய கதை | ஆணழகன் போட்டியில் கலந்துகொள்பவரைப் பற்றிய கதை |
2. | பெரிய தொழிலதிபரான ட்யூபாண்ட் – முக்கிய வில்லன். ஹீரோவின் வாழ்க்கை நாசமாவதற்கு முக்கிய காரணம். இந்த வேடத்திற்கு என்று சிறப்பு மேக்கப் போட்டிருக்கிறார் – ஸ்டீவ் காரெல் | விஜய் மல்லய்யா போல் தோற்றமளிக்கும் இராம்குமார் – முக்கிய வில்லன். இங்கேயும் பெரும் பணக்காரர் + முதலாளி. இவரை தண்டிக்கப்படுவதற்காக சிறப்பு உடல் அலங்காரம் போடப்பட்டிருக்கிறது. |
3. | தற்பால் சேர்க்கையாளர்களையும் ஓரின விழைவாளர்களையும் படம் உள்ளீடாக விமர்சிக்கிறது. | படத்தின் முக்கிய வில்லன் ஆக தற்பால் விரும்புபவரை அமைத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. |
4. | மார்க் ஷூல்ஸ் என்னும் மல்யுத்த கதாநாயகனின் குரு + ஆதரவாளனாலேயே, மார்க் ஷூல்ஸ் அவதிக்கு உள்ளாகிறான். | லிங்கேஸனின் முக்கிய புரவலரான டாக்டரின் செயல்பாடுகளினாலேயே, லீ – பிரச்சினைகளுக்கு உள்ளாகிறான். |
5. | டியுபாண்ட் பணத்தினால் மரியாதையைப் பெற நினைக்கிறார். | டாக்டர் வாசுதேவன், சதித்திட்டத்தினால் நாயகி தியாவை கைப்பிடிக்க நினைக்கிறார். |
6. | ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றவர், அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தோற்பது அவமானத்தைத் தருகிறது. | அழகினால் உலகெங்கும் புகழ்பெற்ற ‘லீ’, அதே உருக்குலைந்ததால் அவமானம் அடைந்து கூனிக் குறுகிறார். |
7. | ![]() |
![]() |
8. |
என அமெரிக்கக் கலாச்சாரம் பேசப்படுகிறது. |
என இந்திய வாழ்வியல் காணக்கிடைக்கிறது. |
9. | அண்ணனுக்கும் தம்பிக்கும் நடக்கும் போராட்டம் உளவியல் சிக்கலாகச் சொல்லப்படுகிறது. | மாடல் ஜானுக்கும் மிஸ்டர் மெட்ராஸ் லிங்கேசனுக்கும் நடக்கும் விளம்பர யுத்தம் வெளிப்படையாக கறுப்பு-வெள்ளையாக அரங்கேறுகிறது. |
10. | ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. | ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. |