முற்பகல் 11.00 – 12.00: தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம்
திருமிகு கனிமொழி கருணாநிதி;
உரையாடல். திருமிகு கவிதா முரளிதரன்
பிற்பகல் 12.00 – 1.00 நவீன கவிதை – இவர்கள் பார்வையில்
திரு. யாழன் ஆதி
திரு. கண்டராதித்தன்
திரு.இளங்கோ கிருஷ்ணன்
பிற்பகல் 2.00 – 3.00 புலம்பெயர் இலக்கியம்:
திரு. தெய்வீகன்
திரு. செல்வம் அருளானந்தம்
திரு. ஷோபாசக்தி
பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள்
திரு. அழகிய பெரியவன்
திரு.ஜே.பி. சாணக்யா
திரு. ஆதவன் தீட்சண்யா
திரு. காலபைரவன்
பிற்பகல் 4.00 5.00 தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை
திருமிகு சுகிர்தராணி
திருமிகு ச.விஜயலட்சுமி
திருமிகு ஜி. கனிமொழி
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்:
அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம், விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர்: சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.
நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர் டி. செல்வராஜ், நூலின் பெயர்- தோல், வெளியீடு-NCBH
புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ 4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ். நூலின் பெயர் – தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.
குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ 4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் மு. இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்
அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு – எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.
தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர் – அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.
அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்– சாக்பீஸ் சாம்பலில்
குறும்பட ஆவணப்பட பரிசு
பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,
குறும்படங்கள்-
விண்ட் – இயக்குநர் மணிகண்டன் அதிகாலை – இயக்குநர் கவின் ஆண்டனி
ஆவணப்படங்கள்-
அக்றிணைகள் – இயக்குநர் இளங்கோவன் புலி யாருக்கு? – இயக்குநர் ஆன்ட்டோ
10. தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது: மலேசியா வாழ் கணினியியலாளர் முத்து நெடுமாறன்
11. சாகித்ய அகாதமி விருது: காவல் கோட்டம் (நாவல்) – சு. வெங்கடேசன்
12. தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய (Tagore Literature Award) விருது: எஸ் ராமகிருஷ்ணனின் “யாமம்”
13. நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்: குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான எஸ் ராமகிருஷ்ணனின்கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது.
தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து
பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து
ஆங்கில புனைவிலக்கிய நூலின் தமிழாக்கத்திற்கு ஒரு விருது
ஆங்கிலம்/பிற அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள். ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.
தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ரூ.15000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
14. சாகித்ய அகாதெமியின் குழந்தை இலக்கிய விருது: தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா – “சோளக் கொல்லைப் பொம்மை’ என்னும் தலைப்பிலான குழந்தைகளுக்கான பாடல் நூல்
மற்றவை
i). விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ‘அம்பேத்கர் விருது’ : தமிழக அரசின் அன்றைய தலைவரான முதல்வர் கருணாநிதி
சீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.
பெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:
“தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?”
– இந்திரா பார்த்தசாரதி 80
இந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல்? எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார்? யார் சொன்னால் பேச்சு எடுபடும்? எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:
தினம் ஒரு வினா: அன்றைய சூடான பிரச்சினையை கேள்வியாக மாற்றி, இரு தரப்பு விவாதத்தையும் இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லி, வாசகரை வாக்களிக்க சொல்வது. மாலன் இதை செய்கிறார் என்றாலும் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இதைத் தொடரவில்லை.
புகைப்படமும் செய்தித் தொகுப்பும்: செய்திகளுக்கு கூகிள், தினமலர், யாஹூ, எம்.எஸ்.என் எல்லாம் இருக்கிறது. நிழற்படம் எளிதில் கிடைப்பதில்லை. தினசரி நிகழ்வுகளை பருந்துப் பார்வை செய்தித் தொகுப்பாக்கி, கூடவே முக்கியமான, அரிதான ஒளிக்கோர்வைகளை சொடுப்பது.
குசும்பு கருத்து கார்ட்டூன்: திருமாவும் கருணாநிதியும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? விஜய்காந்த்தும் ரஜினியும் சேர்ந்திருக்கும் பழைய படத்திற்கு உங்கள் எண்ணச்சிறகு எப்படி பறக்கும்? குசும்பர் செய்கிறார் என்றாலும், எக்ஸ்க்லூசிவாக இந்திய தேர்தல் களத்திற்கு செய்வது.
அன்றும் இன்றும்; சொன்னார்கள்; துக்கடா: இன்றைக்கு ஒரு அறிக்கை விடுவது; அது என்றோ சொன்னதற்கு நேர் எதிராக இருப்பது அரசியல் லட்சணம். அந்த மாதிரி முரண்களை முன்னிறுத்துவது. பொருத்தமான மேற்கோள்களுக்கு, பதிலாக கருத்துக்கணை ரெண்டணா வீசுவது.
எண்ணும் புள்ளிவிவரமும்: ‘ரமணா’ விஜய்காந்த் மாதிரி ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு வேட்பாளருக்கும், அனைத்து கட்சிகளுக்கும் பின்புல தகவல்களை சுவையாகக் கொடுப்பது. எத்தனை முறை குற்றஞ்சாட்டப்பட்டார்? எவ்வளவு தடவை தொகுதிக்கு விசிட் அடித்தார்? வாக்கு விகிதாச்சாரம்?
பேட்டி, நேர்காணல், வல்லுநர் பார்வை: விடுதலை சிறுத்தை இரவிக்குமார் துவங்கி பா.ஜ.க. பிரதம வேட்பாளர் அத்வானி வரை வலையில் வசிப்போரே. அவர்களிடம் இமெயில் பேச்சுவார்த்தை நடத்துவது. முன்னாள் எம்பி, அதிருப்தி எம்.எல்.ஏ என்று வலை வீசி சிறப்புக் கட்டுரை வாங்குவது; தமிழிணைய தாதாக்களிடம் கிடுக்கிப் பிடி இன்டெர்வ்யூ பெறுவது.
தேர்தல் அறிக்கை ஆராய்ச்சி, ஆய்வு: “கெட்டதெல்லாம் கெட்டது. இலவச டிவி கிழவனைத் தூக்கி மனையில் வை” என்கிற மாதிரி 55 கெட்ட விவாத துவக்க புள்ளிகளை விக்கி பட்டியலிட்டிருக்கிறது. மலிவு அரசியலை விட்டுவிட்டு சமூகம் எதிர்நோக்கும் விஷயங்களில் கட்சி நிலைப்பாடுகளையும் வேட்பாளரின் பாராளுமன்ற நடவடிக்கையையும் அரசின் செயல்பாடுகளையும் அலசுவது.
ஆங்கில ஊடகம், மாற்று பத்திரிகை, பிற தினசரி: Covert, Tehelka போன்ற பத்திரிகைகளின் தலையங்கம் என்ன? டெலிகிராஃப், ஸ்டேட்ஸ்மேன், TOI, HT என்ன சொல்கிறது? ஈநாடு, ஆனந்த பஜார் பத்ரிகாவில் என்ன முக்கியமான மேட்டர்? அவுட்லுக், சன்டே இந்தியன், வீக், இந்தியா டுடே எல்லாம் என்ன எழுதி உள்ளது?
தகவல் சரிபார்த்தல்; பிழைபொறுக்கி: நம் தலைவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது கஷ்டம். இலவச அரிசிக்கு எவ்வளவு செல்வாயிற்று? யார் காலத்தில் மின்சாரம் எவ்வளவு கட் ஆனது? எப்போது எந்த நிலையை எவர் ஆதரித்தார்? சொன்னது சரிதானா என்று பூதக்கண்ணாடி வைத்து குற்றங்கண்டுபிடிப்பது.
யூ ட்யூப், ஃப்ளிக்கர், வலைப்பதிவு தொகுப்பான்: எல்லா சோஷியல் மீடியாவிடமிருந்தும் பொருத்தமான இடுகையை ஒத்த தலைப்பில் சேர்த்துக் கொடுப்பது. வேட்பாளரை நேரில் சந்தித்து விழியமோ, புகைப்படமோ வலையேற்றும் கலையைக் கற்றுத் தருவது.
கொசுறு – தமிழ் ஆனியன்: ஆங்கில ஆனியன் பார்த்திருப்பீர். லக்கிலுக் போன்றோர் அவ்வப்போது எழுதும் ஒன்றரை பக்க நாளேடு படித்திருப்போம். அன்றாட செய்திகளை நக்கலெடுப்பதே முழு நேரத் தொழில். புகைப்படங்களை வெட்டி ஒட்டுதல், போலி பேட்டி, நிஜ அறிக்கை போன்றே தோன்றும் பகிடி, கிட்டத்தட்ட நம்பிவிடக் கூடிய கிண்டல் உல்டா நிறைப்பது.