Snapjudge

Posts Tagged ‘ஜெமோபாரதம்’

ஜெமோபாரதம் – 10, 11

In Mahabharat on ஜனவரி 12, 2014 at 11:59 பிப

முந்தைய பகுதி

1. ” அப்போதும் இறைவன் தோன்றாமலிருக்கவே தன்னைத் தானே தேடி, தன்னுள் எஞ்சிய இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம் விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்.

2. பத்தாம் தவணையை படிக்கும்போது ஏபி நாகராஜனின் “திருவிளையாடல்” நினைவுக்கு வரும்.

3. “வாரணாசியின் படிக்கட்டுகளில் இறங்கிச்சென்று அசைவிலாததுபோல் அகன்றுகிடந்த கங்கையின் விளிம்பில் மெல்ல கரையை துழாவிக்கொண்டிருந்த நீரின் குளிர்நாக்கில் அந்த தீபங்களை வைத்தனர்.

4. சித்ரகர்ணி காணாமல் போய்க் கொண்டிருக்கிறதாம்: A looming lion extinction. They now occupy less than one percent of their historic range in West Africa.

5. “சேதிநாட்டரசர் தமகோஷன் அவரது நெருங்கியநண்பர் என்கிறார்கள். அங்கம், வங்கம், கலிங்கம், மாளவம், மாகதம், கேகயம், கோசலம், கொங்கணம், சோழம், பாண்டியம் என்னும் பத்து நாட்டுமன்னர்களும் அவருடன் கைகோர்த்திருக்கிறார்கள். காசியுடன் உறவை உருவாக்கிக் கொண்டபின்பு அஸ்தினபுரியை கைப்பற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள்.”

“அவர்களுக்கு எப்போதும் அந்தக்கணக்குகள்தான்” என்றாள் புராவதி.

6. “ஏக்கங்களுக்கு நிகராக இனியவை என மண்ணில் ஏதுமில்லை என பின்னர் அறிந்து முதிர்வதே வாழ்க்கை என்றாகியிருக்கிறது என அப்போது உணர்ந்துகொண்டாள்.”

7. “அணிசெய்வதை வேகமாகச் செய்யலாமே” என்றார் ஃபால்குனர். “எக்காலத்திலும் அதை ஆண்களுக்கு புரியவைக்க முடியாது” என்றாள் பிரதமை.

8. “இத்தனை வருடங்களுக்குப்பின் அந்த மின்னும் ஆடையணிகளுக்குள் நுழையும்போது குருதிநுனிகள் மின்னும் கூரிய ஆயுதக்குவியலொன்றுக்குள் விழுவதுபோலவே உணர்ந்தாள்.

9. பாய்கலை:

பாய்ந்து ஓடும் மானின் ஆற்றலோடு அவள் இணைக்கப்பட்டும் மான் கொற்றவையின் ஊர்தியாகவும் விளங்குவது இதில் புலனாகிறது.

வெட்சி வீரர்கள் ஆநிரைகளைக் கவரச் செல்லும்போது அவர்களுக்கு உறுதுணையாகக் கொற்றவை முன்னே செல்லுவாள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

     “ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலை
கூளி மலிபடைக் கொற்றவை-மீளி
அரண் முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்”

என்னும் பாடல் கருத்து இதனை உணர்த்துகிறது.

{1:63}__3+

  • திருஞானசம்பந்த சுவாமிகள் – தலம்: திருப் பிரமபுரம் (அல்லது காழி)

ஐயமேற்கச்சென்ற அழகர்

இப்பதிகம் முழுதும் தலைமகள் தலைமகனைத் தன் எதிர்ப்படுத்திப் பேசுதல்போல் அமைந்துள்ளது.

பெருமான் பெண்கள் தரும் பிச்சையேற்கத் தாருகாவனத்துட் செல்கிறார்ஐயமேற்கும் பொழுது அப்பெண்டிர்களின் ஆடைஅணிவளையல்வாகுவலயம்உள்ளம்பெண்மைஇவைகளைக் கவர்கிறார்அப்பெண்கள் பெருமானை நோக்கி இரங்கிக் கூறும் உரைகள் இவை.

நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டு அயலே
பகலாப்பலி தேர்ந்து ஐயம் வவ்வாய்
பாய்கலை வவ்வுதியே
அகலாது உறையும் மாநிலத்தில்
அயல் இன்மையால்
அமரர் புகலால் மலிந்த பூம்புகலிமேவிய புண்ணியனே

Having placed on one side of the cool matted hair a laughing skull and white crescent

begging alms in the day-time
you do not snatch away the alms.
but snatch away the flowing garment.
in the wide world from which everything dwells without leaving it.
as there is no other place of refuge.
the holy being who is in Pukali where there are many immortals who sought refuge there.

10. மிகப் பெரிய ஊரை, மாபெரும் போரை, பிரும்மாண்டத்தை திரைப்படமாகக் கொணர்வது எளிது. அதுவே, எழுத்தில் கொணர்வது எப்படி என்பதை செயமோகன் மீண்டும் மீண்டும் அருமையாக சொல்கிறார். கூடவே தெரிந்த விஷயங்களை எவ்வளவு சுவாரசியமாக ஆக்குவது என்பதையும் நிரூபிக்கிறார். அதனுடன், பின்னணி நாடகங்களை திரைமறைவில் நடந்திருக்கக் கூடியதை உணர்த்துவது ஆர்வத்தை அதிகரிக்கிறது.

சுட்டி: 10 | 11

ஜெமோபாரதம் – 9

In Mahabharat on ஜனவரி 9, 2014 at 2:49 முப

முந்தைய பகுதி

இன்று விமர்சன காண்டம்.

இந்தியர்களுக்கு விதியின் மீது பழி போடுதல் மிகவும் பிடித்தமான காரியம்.

விபத்து நடந்ததா… வினைப் பயன்.
புற்றுநோய் வந்ததா… போன ஜென்மத்து பாவம்.
குழந்தை பிறக்கவில்லையா… முற்பிறவி மீது பாரத்தைப் போடலாம்.

காரணமில்லாததற்கு காரணம் கற்பிக்க… தலைவிதி உதவுகிறது. மேலும் மேலும் ஆராய்ந்து மண்டை காயாமல், பிரச்சினைக்கு மூடுவிழா போட பூர்வஜென்மத்து தோஷம் பழியேற்கிறது.

நல்ல படிப்பறிவும், படித்ததை கிரகிக்கும் திறனும் கொண்ட பீஷ்மர் செய்த குளறுபடிகளின் தொகுப்பே மகாபாரதம். அடிமைகளாக மூன்று பெண்களைப் பிடித்து வந்தார். அவர் கற்ற நீதிநெறிகளை பின்பற்றாமல், குற்றம் புரிய சொன்னவர்களிடம் இடித்துரைக்காமல், அறமற்ற சேவகனாக தன்னை வெளிக் காட்டிக் கொண்டார்.

கருப்பர்களை நீக்ரோக்கள் என விளித்து அடக்கியாண்டதை எண்ணி அமெரிக்கா நாள்தோறும் விசனப்பட்டு, மாற்றுப் பாதையில் நடப்பதை பார்க்கிறோம். காரோட்டும் உரிமை கூட இல்லாத இஸ்லாமிய நாட்டுப் பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் குரல் எழுப்புகிறோம். இன்னமும் இந்த மகாபாரத அட்டுழியங்களை நாட்டுப் பிரஜைகளோ, அரசியின் சிப்பந்திகளோ உரையாடாத, அரசல் புரசலாகவாவது அங்கலாய்க்காத காலத்தில் இருக்க வேண்டாம்.

பீஷ்மர் ஒரு நாள் கூட ராஜ்ஜிய சுகத்தை அனுபவிக்காமல் இல்லை. பிரம்மச்சாரி என்னும் பட்டத்தை வைத்துக் கொண்டார். சத்தியவதியை நினைத்து கைமைதுனம் செய்திருப்பார் என்பதில் கற்பனையை விட நிஜத்தின் விகிதாச்சாரம் நிறையவே இருக்கும்.

இராமரை அவருடைய குடிமக்கள் விமர்சித்தது போல் வால்மீகியும் கம்பரும் எழுதியிருக்கலாம். ஏனென்றால், அங்கே சீதை பெண். ஆனால், பீஷ்மர் கொத்தடிமைகளை அபகரித்து, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப வாழ்ந்ததை, பீஷ்ம அரசின் கீழ் வாழ்ந்த எந்த குடிமகனும் வம்பு பேசியதாக மகாபாரத எழுத்தாளர்கள் சொல்வதில்லை. எழுதுவது எல்லாமே ஆண்கள்.

அம்பையும் இன்ன பிற மருமகள்களின் வாழ்வு நாசமாகியதற்கு முழுமுதற் காரணம் மாமியார்களே என சன் டிவியும் சோப்ராக்களும் வியாசரும் ஓதுவார்கள்.

பீஷ்மர் மற்றவர்களிடம் இருந்து நல்ல பேரைப் பெற வேண்டும் என்பதற்காக நாய் போல் நன்றியுடன் இயங்கி இருக்கிறார். ”அப்பாவால் மெச்சப் பட வேண்டும்; இவனைப் போல் பிள்ளை கிடைப்பானா” என ஊரார் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக பீஷ்ம சபதம். அந்த சபதத்திற்குப் பின் அதிகாரபூர்வமாக மணம் புரியவில்லை. இக்காலமாக இருந்தால் தற்பால் விரும்பி என அம்பை சரியாக ஊகித்திருப்பாள்.

அப்பா போன பின் சித்தியிடமிருந்து பெரிய பாராட்டும் நற்சான்றிதழும் கிடைப்பதற்காக சத்யவதி ஏவிய காரியங்களை நிறைவேற்றுதல். அதன் பிறகு திருதராஷ்டிரனுக்கு… அதன் பிறகு துரியோதனனுக்கு. அரசு ஊழியராக ஓய்வு பெறும் திருப்தி அவருக்கு வேண்டியிருந்திருக்கிறது. முகஸ்துதிக்கும் அங்கீகாரத்திற்கும் வாழ்நாள் முழுக்க அர்ப்பணித்திருக்கிறார்.

வெறும் கறுப்பு – வெள்ளையாக அமையாமல், நேர்க்கோடில் பலாபலன்களைச் சொல்லிச் செல்லாததால், மேற்கூறிய எண்ணங்களை உருவாக்க வைத்ததால், இன்றைய பகுதி முக்கியமான பகுதி.

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 9 :: பகுதி இரண்டு : பொற்கதவம்

ஜெமோபாரதம் – 8

In Mahabharat on ஜனவரி 8, 2014 at 5:30 முப

முந்தைய பகுதி

1. “அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது

இதை ”மாறுபடுபுகழ் நிலையணி”யாகக் கொள்ளலாம். இதில் அஸ்தினாபுரி அரசர்களின் செயலூக்கமும் வீரமும் புகழப்படுகிறது. இவ்வாறு கோழைகளைப் பழிப்பதற்காக மூதாதையர்களின் பெருமை சொல்லப்படுகிறது.

2. “விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…

இன்று திருமணங்களுக்கு நடைமுறையில் இருப்பது அன்றே இருப்பதாக சொல்வது ”தன்மை நவிற்சி அணி” எனக் கொள்ளலாம். தற்காலத்தை அந்தக் காலத்தின் மீது பொருத்துவதற்கு ஏதாவது அணி உண்டா?

3. “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்

இது “இல்பொருள் உவமையணி”க்கான அபாரமான எடுத்துக்காட்டு. யானை சேற்றில் சிக்கலாம்; ஆனால், அப்பொழுது நாயும் உள்ளே புகுந்தால் அதுவும் மாட்டிக் கொள்ளாதா! என நீங்கள் லாஜிக் பார்ப்பதால் கற்பனையால் மட்டுமே அனுபவிக்கக் கூடியது.

4. “எட்டுத்திசைகளிலும் எண்ணிய பின்புதான் இதைச் சொல்கிறேன்

இப்பொழுது மோனை. ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கீழ்க்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.

5. “விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார்.

இது உயர்வு நவிற்சி அணி. தக்கினியூண்டு அம்பு; அதுவும் பாய்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் அம்பு; அதை இரண்டாக பிய்க்கிறார். நல்ல சாமுராய் கத்தியைக் கொண்டு பொறுமையாக வகிரவே இயலாத ஒன்றை, தொடர்ச்சியாக செய்து வருவதாக சொல்வது ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.

6. “அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்ந்து வரலாம்… அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…

ஒழித்துக்காட்டு அணி எனலாம். அதாவது ராஜ்ஜிய தர்மப்படி இதெல்லாம் தவறு என்பதற்காக மூலநூல்களைக் கொண்டு சத்தியவதியின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதை விட தன் நீதிநெறியை முன்னிறுத்திக் கொள்வதால் தன்மேம்பாட்டுரை அணி என சொல்வோம்

7. ”அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது

இது டி இராஜேந்தர் அணி என்று தற்போது அழைக்கப்படும் அந்தக் கால சொற்பொருள் பின்வருநிலையணி.

8. “அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.

படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.”

ஏகதேச உருவக அணி என்போம். எங்கும் அடைபடாமல் பறக்கின்ற யானையாக உருவகம் செய்கிறார். அப்படி பிறப்பவர் பிள்ளையாராக என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.

9. ”புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.

கதை நெடுக தற்குறிப்பேற்ற அணி பல்கிப் பெருகிக் கிடைக்கிறது. இயல்பான நிகழ்வுகளான தலைமுழூகுவதையும் ஆபிரகாமிய மதங்களின் ஏழு பெரும்பாவங்களான கோபம், பேராசை, சோம்பல், அழுக்காறு, ஆணவம், காமந்தகம், பேருண்டியைக் கொள்வதையும் கற்பனையினால் குறிப்பாக்குகிறார்.

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 8

ஜெமோபாரதம் – 7

In Mahabharat on ஜனவரி 7, 2014 at 3:23 முப

முந்தைய பகுதி

1. “சிப்பிக்குள் வாழ்ந்த பரீட்சித் தனக்கென அறையை உருவாக்கிக் கொண்டதும் சரி, கண் தெரியாத குட்டிநாயாக தன்னை ஜனமேஜயன் உணர்வதும் சரி அவ்வாறு வாசிக்கப்படவேண்டியவை.”

வியாசனை நோக்கி கடலில் வரும் மீன்களை சொற்களாக எடுத்துக்கொண்டால் அவருக்கு ஸித்தி காட்சிகொடுப்பது வரை ஒரு கவிதையைக் காணமுடியும்.
வெண்முரசு – வாசிப்பின் வாசலில்…

2. எழுத்தாளரே தன் எழுத்திற்கு விளக்கம் கொடுப்பது எனக்கு உதவுகிறது. அதனால்தான், எழுத்தாளரின் பேட்டியை வாசிக்கிறேன். நேர்காணல் எடுக்க விரும்புகிறேன். ஆக்கினவரின் வாயினாலேயே ஆக்கத்தின் அர்த்தத்தையும் நுண்ணிய தருணங்களையும் இது போன்ற பொறிப்புரைகளையும் ரசிக்கிறேன். ஆங்கிலத் திரைப்படம் பார்த்து முடித்த பிறகு, அந்தப் படத்தை இயக்கியவரின் வர்ணனையோடு படத்தை மீண்டும் பார்ப்பது போல், படைப்பாளியின் குரலில் படைப்பை மீண்டும் படிக்க இவை உதவுகிறது.

இந்த வார நியு யார்க்கரிலும் ”ஆமென்” என்கிறார் ஹானா ரோஸ்ஃபீல்ட்: No More Questions: A Brief History of Author Interviews : The New Yorker

3. “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன

“People will always elect the government they deserve” (பிரஜைக்களுக்குத் தக்க ராஜாதான் கிடைக்கிறார்) என்பது லிங்கன் முதல் ஜோசப் வரை சொல்வதாக ஜார்ஜ் புஷ்ஷின், இராக் பழிவாங்கல் போரினால் அமெரிக்காவிற்கு பட்டம் சூட்டப்பட்டது. சில பெருநிதி நிறுவனங்கள், இன்னும் மிகச் சில அதிசெல்வந்தர்கள், இன்னும் மிக மிகச் சில உலக சூத்திரதாரிகளால் அவை ஏவப்படுகின்றன என்பதை ஆய்வு புத்தகங்களும் உள்நோக்கர்களும் அமெரிக்காவிலேயே விமர்சனபூர்வமாக தெரிவித்தாலும், அமெரிக்கா என்றால் சண்டைக்கோழி என்னும் பிம்பம் மாறவாப் போகிறது?

4. இரப்பர் காலத்தில் இருந்தே இளமையையும் அழகையும் அந்த வயதில் ஏற்படும் காதலையும் இரம்மியமாக சித்தரிப்பவர் ஜெயமோகன். எப்பின் – த்ரேஸ் ஈடுபாட்டை படித்த பின்னர் இன்னொரு திருப்தியான நேசப் பரிமாற்றமாக இன்றைய அத்ரிகை – சத்தியவான் பகுதி அமைந்திருக்கிறது.

5. “ நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன.

“இளங்காடுகள் நீரலைகளில் நடனமிட்டன.”

“ ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார்.

6. மச்சகன்னி, கடற்கன்னி என்றெல்லாம் கொச்சை வார்த்தைகளைத் தவிர்த்து நீர்மகளிர் என்னும் சொல்லாக்கமே கண்ணியம் கலந்த ஆர்வத்தைத் தூண்டும் பிரயோகம். அதே மாதிரி இம்மி பிசகினாலும் விரசம் ஆகிவிடக் கூடிய பத்மினி, சித்ரிணி, சங்கினி, ஹஸ்தினி இன்ன பிற விவரிப்பும், வெறும் தகவலாக அமையாமல் காட்சியோடும் கதையோடும் ஊடாடி சொருகப்பட்டிருக்கும் லாவகத்திற்காகவே இந்தப் பகுதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.

7. சமீபத்தில் ஜப்பானிய பொருட்காட்சி சென்றிருந்தபோது அங்கே, “ஆ… ஊ…” என்று சத்தம். தலையில் கொண்டை; கூடவே ஆம் அத்மி மாதிரி தொப்பியோ அல்லது ஆங்காங்கே சொருகிய ரிப்பனோ எட்டிப் பார்த்தது. அவளுக்கு மேலே பிள்ளையார் சதுர்த்தி போல் குடை ஒன்று நின்றிருந்தது. எதிரே பெரிய டமாரம். அதில் அடித்து அதகளம் செய்து கொண்டிருந்தாள். இன்னொரு புறம் நிறைய சிப்பிகள். எல்லாமே அழுக்காக, பார்ப்பதற்கு பழுப்பும் கருப்பும் கலந்து அருவருக்கவைத்தன. அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தால், அதில் இருந்து முத்தை எடுத்து நகையாக்கித் தருகிறாள். அலங்காரம், செய்தொழில் ஒவ்வொன்றிலும் கேளிக்கை கலந்த ஆர்பாட்ட வழிமுறை, இவற்றை வேடிக்கையாக அலுக்காமல் மீண்டும் மீண்டும் அரங்கேற்றுவது என்பதால், மச்சகந்தி ஜப்பானில் இருந்து வந்திருப்பாளோ?

8. இருநூற்றியிருபது முத்துக்களை ஒவ்வொரு முழுநிலவுநாளாகப் பிரித்தால், கிட்டத்தட்ட 220 மாதங்கள். அப்படியானால், பதினெட்டே கால் வருடங்கள் சேர்ந்திருந்திருக்கார்கள் என்றவுடன் பழைய ஜோக் தோன்றியது.

கல்யாணம் ஆன முதல் வருடம் மனைவியுடன் சேரும்போதெல்லாம், ஒரு ஜாடியில் ஒரு டாலர் போடுங்கள். முதல் வருடம் முடிந்த பிறகு, உங்கள் மனைவியுடன் எப்பொழுதெல்லாம் சேருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம், அந்த ஜாடியில் இருந்து ஒரு டாலரை எடுங்கள். நீங்கள் சாகும் வரை, அந்த ஜாடியில் நிறைய டாலர்கள் நிச்சயமாக பாக்கி இருக்கும்.

9. திடீர்னு “கடல்” பாடல் நினைவிற்கு வந்தது:

சித்திரை நிலா ஒரே நிலா
பரந்த வானம் படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையிலே நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 7: பகுதி இரண்டு : பொற்கதவம்