Snapjudge

Posts Tagged ‘செல்வாக்கு’

Mother Teresa: அன்னை தெரசா: வாழ்வும் கொள்கையும்

In Business, India, Politics, Religions on ஓகஸ்ட் 27, 2012 at 3:25 முப

1. மதம்: குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சீக்கிரமே சொர்க்கம் அனுப்பும் திட்டத்தை அன்னை தெரஸா ஆரம்பித்தார்; சட்டு புட்டென்று சிறார் செத்தால்தானே படுக்கை காலியாகும்!

2. சட்டம்: அன்னை தெரசாவைப் பொறுத்தவரை பிறந்து விட்ட குழந்தையைக் கொல்வது ஒகே; ஆனால், வன்புணர்வினாலோ, பதின்ம வயது பருவக் கோளாறினாலோ, ஏழை வீட்டில் பத்தாவதாக பிறக்கும் மகவையோ கருக்குலைப்பது குற்றம்.

3. அரசியல்: குவாடாமாலா கொலைகளுக்கு முலாம் போட்டதாகட்டும். மத்திய அமெரிக்க சண்டைகளுக்கு ஆசி வழங்கியது ஆகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்; அதே சமயம் எப்போதுமே கொடுங்கோலரின் கனவு போல் வாடிகனுக்காக போரிட்டவர் மதர் தெரசா.

4. சுயநலம்: பத்தாயிரம் மில்லியன் எல்லாம் எண்பதுகளிலேயே புரண்ட தொண்டு நிறுவனம் மிக மிக சிறப்பான படுக்கைகளையும் மருத்துவ சிகிச்ச்சைகளையும் கவனிப்பாளர்களையும் நோயாளிகளுக்கான வசதிகளையும் செய்து தந்திருக்கலாம். ஆனால், அன்னை தெரசாவோ, தன் பெயரில் நூற்றி ஐந்து நாடுகளில் ஐநூறு கான்வெண்டுகளைத் தன் நிறுவனத்திற்காக திறந்து கன்னியாஸ்திரீகளை சேர்க்க ஆரம்பிக்கும் திருப்பலியை மேற்கொள்கிறார்.

5. குற்றவுணர்ச்சி: மேற்கத்திய உலகிற்கு நாம் மட்டும் நல்ல வாழ்க்கையில் திளைக்கிறோம்; அதே சமயத்தில் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் வறுமையில் வாடுகிறார்கள் என்னும் எண்ணம் நிறைந்த எழுபதுகளில் உதித்தவர். வெள்ளைக்கார பெண்மணியாக சேவை செய்தவர். அமெரிக்க மகளிர் பீச்சில் உல்லாசமாய் இருக்கும்பொழுது எழும் தர்மசங்கடமான வருத்தத்தை சிம்பாலிக்காக கலைத்தவர்.

6. சாதாரணரை வளரவிடாத அடக்குமுறை: சாலையில் செல்லும்போது நாய் அடிபட்டுக் கிடந்தால் என்ன செய்வீர்கள்? மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, காலை சரி பார்த்து நடக்க வைப்பீர்கள். ஏழைகளுக்கு கடன் கொடுத்து, நிமிர்ந்து நடக்க வைப்பது அது போன்றது. நாய் கால் விந்தி விந்தி நடந்தால் கூட முடக்கி மூலையில் உட்கார வைப்பது தெரசாவின் லட்சியம்.

7. பொருள்முதல்வாத போராளி: போபால் விஷவாயு கசிவினால் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டபோது, யூனியன் கார்பைட் நிறுவனத்தை மன்னித்து சும்மா விட்டு விடுங்கள் என்பார். ஹைதி நாட்டில் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பட்டயம் வழங்குவார். கிறித்துவத்திற்கு பணம் கொடுக்கும் எந்த அட்டூழியத்திற்கும் துணை நிற்பார்.

8. பாசிசம் (fascism): முசோலினியும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் மதர் தெர்சாவினால் ஆனுதாபிகளாகப் கொண்டாடப்பட்டவர்கள். அல்பேனிய சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார விஷயங்கள் தீர்மானிப்பவர்களையும், முதலாளிகளையும் வாழ்த்தி வணங்கியவர் அன்னை தெரசா.

9. ஏழைகளிடமிருந்து திருடியவர்: சென்றதெல்லாம் தனியார் விமானம்; சொகுசு கார்; உலகம் எங்கும் சுற்றுலா; இத்தனை கோடி நிதி திரட்டினாலும் கொல்கத்தா வறியவர்களுக்கு ஆஸ்பிரின் கூட கொடுக்காத கெடுபிடி சிறை. இவருக்கு இத்தனை பணம் ஏற்பாடு செய்து தந்த கீட்டிங் போன்ற பலர், தற்போது திருட்டுக் குற்றங்களுக்காக சட்டப்படி தண்டனை அனுபவிக்கின்றனர். பெற்றுக் கொண்ட அன்னை தெரசா ஞானி ஆகிறார்.

10. பச்சிளங்குழந்தைகளின் பாலியல் பலாத்காரத்திற்கு துணை நின்றவர்: New Statesman:Mother Teresa defended notorious paedophile priest – Mother Teresa and the Paedophile

உசாத்துணை: Chatterjee’s book Mother Teresa: The Final Verdict is available on-line. Click here.

அடுத்தவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்காமல், தண்ணீரில் தள்ளிவிட்டு காப்பாற்றிக் கொண்டேயிருந்தவர். தெரசா போன்றவர்கள் இந்தியாவை வறுமையான நாடாக அடையாளம் காட்ட பயன்பட்டார்கள். மேற்கத்திய உலகின் கரிசனையை முழுப்பக்க விளம்பரமாக எடுத்துப் போட உதவினார். அவரின் நிறுவனத்தில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சம் காட்ட இந்திய ஊடகங்களே தயங்கினதால், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை நிறைவேற்றுவதும் எளிதாகியது.

2011: Tamil Literary Awards to Writers and Authors: Book Felicitations & Rewards

In Lists on திசெம்பர் 22, 2011 at 10:41 பிப

இந்த வருடம் வழங்கப்பட்ட முக்கிய விருதுகளும் பெற்றவர்களும்:

1.

தமுஎகச இலக்கியப் பரிசு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்:

அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம், விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர்: சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர் டி. செல்வராஜ், நூலின் பெயர்- தோல், வெளியீடு-NCBH

புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ 4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ்.  நூலின் பெயர் – தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ 4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் மு. இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்

அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு – எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.

தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர் – அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.

அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்– சாக்பீஸ் சாம்பலில்

குறும்பட ஆவணப்பட பரிசு

பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,

குறும்படங்கள்-

விண்ட் – இயக்குநர் மணிகண்டன்
அதிகாலை – இயக்குநர் கவின் ஆண்டனி

ஆவணப்படங்கள்-

அக்றிணைகள் – இயக்குநர் இளங்கோவன்
புலி யாருக்கு? – இயக்குநர் ஆன்ட்டோ


2.

தமிழ் இலக்கியத் தோட்டம்

வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் : எஸ்.பொன்னுத்துரை

3. கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன்

4. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்: அகில் சாம்பசிவம்

5. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல்

வெளியீடு – உயிர்மை

6. கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது

7. வண்ணநிலவன் வண்ணதாசனுக்கு சாரல் விருது

8. பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

9.  விளக்கு விருது, தேவதச்சனுக்கு

10. தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது: மலேசியா வாழ் கணினியியலாளர் முத்து நெடுமாறன்

11. சாகித்ய அகாதமி விருது: காவல் கோட்டம் (நாவல்) – சு. வெங்கடேசன்

12. தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய (Tagore Literature Award) விருது: எஸ் ராமகிருஷ்ணனின்யாமம்

13. நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்: குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான எஸ் ராமகிருஷ்ணனின் கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது.

  • தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து
  • பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து
  • ஆங்கில புனைவிலக்கிய நூலின்  தமிழாக்கத்திற்கு ஒரு விருது
  • ஆங்கிலம்/பிற அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள்.  ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.
  • தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஒவ்வொருவருக்கும் ரூ.15000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

14. சாகித்ய அகாதெமியின் குழந்தை இலக்கிய விருது: தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா – “சோளக் கொல்லைப் பொம்மை’ என்னும் தலைப்பிலான குழந்தைகளுக்கான பாடல் நூல்

மற்றவை

i). விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ‘அம்பேத்கர் விருது’ : தமிழக அரசின் அன்றைய தலைவரான முதல்வர் கருணாநிதி

ii) திருவள்ளுவர் விருது : முனைவர் பா. வளன் அரசு

iii) கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது : என்.எச்.எம் ரைட்டர் மென்பொருள்

iv) அமுதன் அடிகள் இலக்கிய விருது: கே. எஸ். பாலச்சந்திரன்

v) கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா

  1. வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) – சங்கானைச் சண்டியன்
  2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு) – மாத்தகரி
  3. சை.பீர்முகமது (மலேசியா) – பெண் குதிரை
  4. நடேசன் (ஆஸ்திரேலியா) – வண்ணத்திகுளம்
  5. தெணியான் (இலங்கை) – ஒடுக்கப்பட்டவர்கள்
  6. கே.விஜயன் – (இலங்கை) – மனநதியின் சிறு அலைகள்
  7. சிவசுப்ரமணியன் (இலங்கை) – சொந்தங்கள்
  8. தனபாலசிங்கம் (இலங்கை) – ஊருக்கு நல்லது சொல்வேன்
  9. கலைச்செல்வன் (இலங்கை) – மனித தர்மம்
  10. உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.


பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

  1. ஆர்.எஸ்.ஜேக்கப் – பனையண்ணன்
  2. சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
  3. முனைவர் மு.இளங்கோவன் – இணையம் கற்போம்
  4. புவலர். இராச.கண்ணையன் – குறளோசை
  5. ப.ஜீவகாருண்யன் – கவிச்சக்ரவர்த்தி
  6. குறிஞ்சிவேலன் – முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
  7. லேனா தமிழ்வாணன் – ஒரு பக்கக் கட்டுரை 500
  8. வெண்ணிலா – நீரில் அலையும் முகம்
  9. பூங்குருநல் அசோகன் – குமரமங்கலம் தியாக தீபங்கள்
  10. கூத்தங்குடி அழகு ராமானுஜன் – காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்

தெரியாதவை

அ) கவிஞர் சிற்பி அறக்கட்டளை: கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது

ஆ) இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் விருது

&

முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் (நெய்தல்) விருது

இ) பெரியார் விருது

ஈ) அண்ணா விருது

உ) அம்பேத்கர் விருது

ஊ) காமராசர் விருது

எ) பாரதியார் விருது

ஏ) பாரதிதாசன் விருது

ஐ) திரு.வி.க. விருது

ஒ) கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

ஓ) திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள்

ஔ) ஆனந்த விகடனின் விருது

க) பாரதிதாசன் அறக்கட்டளை – மன்னர்மன்னன் இலக்கிய விருது நூல்கள்

ங) கலைமாமணி

ச) நொய்யல் இலக்கிய வட்டம் மூன்றாம் ஆண்டு இலக்கிய விருதுகள்

  1. கவிதை – 2 பரிசுகள்
  2. கட்டுரை – 2 பரிசுகள்
  3. சுற்றுப்புறச் சூழல் – 2 பரிசுகள்
  4. குழந்தை இலக்கியம் – 2 பரிசுகள்
  5. சிறுகதைகள் – 2 பரிசுகள்
  6. ஓவியம் – 3 பரிசுகள் (கோட்டுச் சித்திரம் 1, ஆயில் பெயிண்டிங் 1, வாட்டர் கலர் 1)