போஸ்டர் பாரு… ஒன்பது போடு!

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads
- அது என்ன! ஸ்கர்ட்டும் இல்லாமல், ஷார்ட்சும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவாந்தரமான ஆடை?
- கடற்கரையில் பச்சை புல்வெளி எப்படி சென்னையில் சாத்தியமில்லையோ… அது போல் பீச் வாலிபாலில் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வாங்குவதும் சாத்தியமில்லை.
- மிஸ்டி மே & கெரி வால்ஷ் போல் இருவர் கொண்ட அணியில் ஏன் ஐவர்! ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ? பா ராகவனாருக்கே வெளிச்சம்.
- திருவளர் செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. (வெண்)பா(ம்)கின்ற, பாடும், பாடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.
- பாராவின் ஒன்பது கட்டளைகள் பிரசித்தம். இது நாயகன் கரணின் சட்டையில் 99
- தன் தலையில் கைவைக்கக்கூடாது என்பார்கள். கன் வைக்கலாம்.
- அடைக்கப்பட்ட நூல்வேலி கம்பி கட்டத்திற்குள்ளிருந்து வெளியே குதிக்க பெண் கையை நீட்டுவது போஸ்டர் சங்கேதம்
- அதற்கும் ரகசிய வீடியோ கேமிரா வைத்து CCTV மூலம் கண்காணிப்பது கலிகாலம்
- வேல் எதைக் குறிக்கிறது என்று சொல்லவும் வேணுமோ?