அயல்நாடுகளில் எழுத்தாளர்களுடன் உரையாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் கட்டுரையாளரும் நாவலாசிரியருமான பி ஏ கிருஷ்ணன் லண்டனுக்கும் பே ஏரியாவிலும் வாசகர்களை சந்தித்தார். நாஞ்சில் நாடனும் அமெரிக்கா முழுக்க உலாவி வருகிறார். வெகு விரைவில் எஸ் ராமகிருஷ்ணனும் வட அமெரிக்காவை வலம் வரப் போகிறார்.
இந்த மாதிரி சந்திப்புகளுக்கும் இலக்கிய கூட்டங்களுக்கும் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு பார்க்கிறேன்.
1. எனக்கு அங்கே யாரையும் தெரியாது; அதனால் கூச்சமாகவோ அச்சமாகவோ இருக்கிறது.
2. கார் ஓட்டத் தெரியாது; அவ்வளவு தூரம் ஓட்ட முடியாது.
3. அதுதான் அவரோட எழுத்தைப் படிச்சிருக்கோமே… அப்புறம் எதற்கு சந்திக்கணும்?
4. மகளுடைய பியானோ ஒப்பித்தல்; மகனுடைய கராத்தே பயிற்சி.
5. ஏற்கனவே சென்ற கூட்டங்கள் சிலாகிக்கவில்லை; வந்தவர் பேசாமல் வேறு ஒருவர் ஆக்கிரமிப்பார்; நெறியாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதால், இதுவும் ஒழுங்கற்று இருக்கலாம்.
6. சோம்பேறித்தனம் + போரடிக்கும்.
7. நான் அவரை முன்பே சில முறை சந்தித்து உரையாடிருக்கிறேன்.
கொசுறு: நான் அவரை வாசித்ததில்லை; என் கவிதைத் தொகுப்பை தரட்டுமா?