Snapjudge

Posts Tagged ‘சிந்தனை’

Eight skills of Ancient Sages: How to be The Most Interesting Man in the World

In Lists on ஜனவரி 10, 2015 at 5:45 பிப

நன்றி: பிகே சிவகுமார்

சித்தர்கள் “அட்டமா சித்திகள்” பெற்றவர்கள் என்பது ஐதீகம். அட்டம் என்பது எட்டு என்ற எண்ணைக் குறிக்கிறது. சித்தர்கள் பற்றிய ஒரு புத்தகத்தைக் கொஞ்சநாள் முன்பு புரட்டிக் கொண்டிருந்தபோது, அட்டமா சித்திகள் எவை என்ற குறிப்பையும் வாசித்தேன். புத்தகத்திலிருந்து அப்படியே கீழே:

1. அணிமா, 2. மகிமா, 3. இலகிமா, 4. கரிமா, 5. பிரார்த்தி, 6. பிரகாமியம், 7. ஈசத்துவம் 8. வசித்துவம் ஆகியன அட்டமா சித்திகள்.

1. அணிமா என்பது பரம அணுவிலும் சூக்குமமான தேகத்தைக் கொள்ளுதல்

2. மகிமா என்பது பிரம்மலோகப் பரியந்தமுள்ள தேகத்தைக் கொள்ளுதல்

3. இலகிமா என்பது சீக்கிரமாய் சேற்றிலும் நீரிலும் அழுந்தாமல் செல்லும் தேகத்தைக் கொள்ளுதல்

4. கரிமா என்பது மலைகளாலும் வாயுவினாலும் அசைக்க முடியாத பாரத்துடன் இருத்தல்

5. பிராத்தி என்பது மனத்தில் நினைத்தவை அனைத்தும் தன்முன்னே வந்தடையப் பெற்றல்

6. பிரகாமியம் என்பது திவ்ய ரூபமான அனேக பெண்களை மனச்சங்கற்பத்தினால் உண்டாக்கி, யாவரோடும் ஏககாலத்தில் ஏற்ற வடிவங்கள் கொண்டு கூடுதல்

7. ஈசத்துவம் என்பது நான்முகன் முதலிய தேவர்களுக்கு ஆணையிடல்

8. வசித்துவம் என்பது மக்களையும் பிரகிருதியையும் வசியம் செய்து சிருஷ்டி முதலியவற்றைச் செய்தல்

Top 10 in-Famoused Tamil Visionaries

In Lists, Tamilnadu on ஜூலை 15, 2010 at 4:20 முப

சீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.

பெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:

  • சின்னக்குத்தூசி
  • நக்கீரன் கோபால்
  • விவேக் (நகைச்சுவை நடிகர்)
  • சாலமன் பாப்பையா
  • கோவி கண்ணன் (வலைப்பதிவர்)
  • சாரு நிவேதிதா
  • ரஜினிகாந்த் (நடிகர்)
  • மதன்
  • பாலகுமாரன் (எழுத்தாளர்)
  • வாசந்தி (பெண்களுக்கும் இட ஒதுக்கீடு)

   List of cool thinkers in Tamil

   In Internet, Lists, Misc, Tamilnadu on ஜூலை 12, 2010 at 4:15 முப

   “தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?”
   இந்திரா பார்த்தசாரதி 80

   இந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல்? எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார்? யார் சொன்னால் பேச்சு எடுபடும்? எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:

   • சுகி சிவம் (சமயச் சொற்பொழிவாளர்)
   • ஜெயமோகன் (இலக்கிய எழுத்தாளர் – வசனகர்த்தா)
   • கமல் (சினிமா நடிகர்)
   • மனுஷ்யபுத்திரன் (பத்திரிகையாளர் + பாடலாசிரியர் & உயிர்மை)
   • ரவிக்குமார் எம்.எல்.ஏ. (அரசியல்வாதி – விடுதலை சிறுத்தைகள்)
   • சோ (ஆங்கில ஊடகப் பேட்டியாளர் + துக்ளக்)
   • தமிழருவி மணியன் (கட்சி சார்பற்ற பத்தி ஆசிரியர்)
   • ஜக்கி வாசுதேவ் (மதகுரு)
   • கோபிநாத் (ஸ்டார் விஜய்நீயா நானா)
   • பைத்தியக்காரன் (வலைப்பதிவர்)

   முந்தைய பதிவு: Top 10 Influential Tamils from TN: India Today « 10 Hot