Snapjudge

Posts Tagged ‘சரித்திரம்’

பண்பாட்டு அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Events, Lists, Magazines, Tamilnadu on மார்ச் 8, 2023 at 10:00 பிப

  1. 06.01.2023: முற்பகல் 12.00-1.00 திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் திரு. ஜெ.ஜெயரஞ்சன்
  2. பிற்பகல் 2.00 3.00: திராவிடமும் தமிழ் சினிமாவும்: திரு.ராஜன்குறை
  3. பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்: மொழி – இலக்கியம் – பண்பாடு:
    • திரு.வீ.அரசு
    • உரையாடல். திரு. க. காமராசன்
  4. பிற்பகல் 4.00 5.00: கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் திரு. ம. ராஜேந்திரன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாரதி காலத்து சென்னை திரு. ய. மணிகண்டன்
  6. முற்பகல் 11.00 – 12.00: காலனியமும் ஆனந்தரங்கப் பிள்ளையும்: திரு. மு. ராஜேந்திரன்
  7. பிற்பகல் 12.00 – 1.00: பண்பாட்டு அரங்கில் பெரியார்: திரு. அ. மார்க்ஸ்
  8. பிற்பகல் 2.00 3.00: சிங்கப்பூர் இலக்கியம் அன்றும் & இன்றும்
    • திரு.நா. ஆண்டியப்பன்
    • திருமிகு கமலாதேவி அரவிந்தன்,
    • திருமிகு சூரியரத்னா
  9. பிற்பகல் 3.00 – 4.00: திராவிடக் கருத்தியல் – அவமரியாதையை வெல்லும் சுயமரியாதை திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வன்
  10. பிற்பகல் 4.00 5.00: பெண் ஏன் அடிமையானாள்? திரு. அ. அருள்மொழி
  11. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: ஜெயகாந்தனின் “சென்னை’: திரு. பாரதி கிருஷ்ணகுமார்
  12. முற்பகல் 11.00 – 12.00: வட சென்னை:
    • திரு. தமிழ் மகன்,
    • திரு.ரெங்கையா முருகன்
  13. பிற்பகல் 12.00 – 1.00: அறமெனப்படுவது யாதெனில் திரு. கரு. ஆறுமுகத்தமிழன்
  14. பிற்பகல் 2.00 3.00: தமிழ் ஊடகங்களும் கருத்தியலும் திரு. ஆர். விஜயசங்கர்
  15. பிற்பகல் 3.00 – 4.00: அயோத்திதாசரின் “சென்னை’ திரு.ரவிக்குமார் எம்.பி.,
  16. பிற்பகல் 4.00 – 5.00: 1930களில் சென்னை: கலை இலக்கியச் சூழல்: திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

காவல் கோட்டம்: எஸ் ராமகிருஷ்ணன் விமர்சனப் பத்து

In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப

நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு

1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.

2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.

3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.

4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.

5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.

6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.

7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.

இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.

கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.

8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme

இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.

கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.

10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?

அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.

10 Most Popular & All time Favorite Tamil Writers

In Books, Lists, Literature, Magazines, Tamilnadu on ஓகஸ்ட் 12, 2009 at 9:49 பிப

    • இந்தப் பட்டியல் கிடுக்கிப்பிடி எழுத்தாளர்கள் பற்றியது.
    • தங்களை படிப்பவர்களை சிக்கெனப் பற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.
    • என்ன ஆவி அடித்தாலும், புகுந்தவரை வெளியேற்றுவது இயலாது. பிறிதொரு படைப்பாளி நுழைய எத்தனித்தாலும் துரத்தியடிக்கப்படுவர்.
    • தன்னுள் இருப்பவரை எதற்காக அனுப்பவேண்டும், பிறிதொருவரை ஏன் வாசிக்க வேண்டும் என்று லாஜிக்கலாக புரிய வைக்க முயன்றால், நீங்களே கீழே குறிப்பிடப்படுபவர்களுள் ஈர்க்கப்பட்டு, சுழலுக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
    • ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம், ஆகர்ஷணம், மயக்கம் உண்டு.
      1. சுஜாதா
      2. ரமணி சந்திரன்
      3. கல்கி
      4. மு. வரதராசன் / அகிலன் / நா பார்த்தசாரதி
      5. சாண்டில்யன்
      6. ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிராபகர்
      7. பாலகுமாரன்
      8. ஈ வெ ரா பெரியார் / சோ ராமசாமி
      9. வைரமுத்து / வாலி
      10. தி. ஜானகிராமன்

      பத்து மேற்கோள்: சொன்னது நீதானா?

      In Lists, Misc, Tamilnadu on பிப்ரவரி 13, 2009 at 11:44 முப

      Quotable Quotes :: சொன்னாங்க! சொன்னாங்க

      அறிஞர் அண்ணா
      1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
      2. சட்டம் ஒரு இருட்டறை, வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.

      வீரபாண்டிய கட்டபொம்மன்
      திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய ஜக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது:

      3. “வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி!?”

      கலைஞர் கருணாநிதி

      நேரு காலத்தில் சோசலிசம் பேசிய காங்கிரஸின் பிற்காலத்திய “பரிணாம” வளர்ச்சியைக் கிண்டலடித்து 92ல் அவர் எழுதிய கவிதை

      4. “திருப்பதியில் காங்கிரசு மாநாடு
      ஆவடியில் மொட்டாக வெடித்த சோஷலிசம்
      ஆண்டவன் சந்நிதியில் மொட்டையாக நின்றது”

      சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவரின் பதில்:

      5. ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’

      பா.ம.க. இராமதாஸ்

      6. ‘இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை’

      7. ‘அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு!’

      ஸ்ருதி கமல்ஹாசன்

      8. ‘அப்பா இப்போ நிறைய கவிதைகள் எழுதுறார். வீட்டில் இரவு நேரத்தில் ஆளாளுக்கு பேப்பர் வெச்சுக்கிட்டு நாங்க கவிதைக்காக யோசிப்பதைப் பார்ப்பதே அழகாக இருக்கும்!’

      குஷ்பு

      9. “பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகமாலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டும்” – இந்தியா டுடே

      விகடனில் வந்த நாஞ்சில் நாடனின் சிறப்புப் பேட்டி.

      10. “தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்?” – திருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிருந்து எடுத்தால்?