Snapjudge

Posts Tagged ‘சந்திப்பு’

எழுத்தாளர்களை நேரில் சந்திக்க ஏழு காரணங்கள்

In Blogs, Life, Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப

எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?

மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?

நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை

1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.

2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.

3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.

4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.

5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.

6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.

7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.

இலக்கிய நிகழ்வுகளுக்கு செல்லாமல் இருக்க ஏழு காரணங்கள்

In Blogs, Books, Life, Literature, Tamilnadu on ஜூன் 15, 2012 at 5:45 பிப

அயல்நாடுகளில் எழுத்தாளர்களுடன் உரையாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் கட்டுரையாளரும் நாவலாசிரியருமான பி ஏ கிருஷ்ணன் லண்டனுக்கும் பே ஏரியாவிலும் வாசகர்களை சந்தித்தார். நாஞ்சில் நாடனும் அமெரிக்கா முழுக்க உலாவி வருகிறார். வெகு விரைவில் எஸ் ராமகிருஷ்ணனும் வட அமெரிக்காவை வலம் வரப் போகிறார்.

இந்த மாதிரி சந்திப்புகளுக்கும் இலக்கிய கூட்டங்களுக்கும் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு பார்க்கிறேன்.

1. எனக்கு அங்கே யாரையும் தெரியாது; அதனால் கூச்சமாகவோ அச்சமாகவோ இருக்கிறது.

2. கார் ஓட்டத் தெரியாது; அவ்வளவு தூரம் ஓட்ட முடியாது.

3. அதுதான் அவரோட எழுத்தைப் படிச்சிருக்கோமே… அப்புறம் எதற்கு சந்திக்கணும்?

4. மகளுடைய பியானோ ஒப்பித்தல்; மகனுடைய கராத்தே பயிற்சி.

5. ஏற்கனவே சென்ற கூட்டங்கள் சிலாகிக்கவில்லை; வந்தவர் பேசாமல் வேறு ஒருவர் ஆக்கிரமிப்பார்; நெறியாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதால், இதுவும் ஒழுங்கற்று இருக்கலாம்.

6. சோம்பேறித்தனம் + போரடிக்கும்.

7. நான் அவரை முன்பே சில முறை சந்தித்து உரையாடிருக்கிறேன்.

கொசுறு: நான் அவரை வாசித்ததில்லை; என் கவிதைத் தொகுப்பை தரட்டுமா?