Snapjudge

Posts Tagged ‘கன்னியாகுமரி’

Kaalachuvadu Short Story Writers: Tamil Fiction Authors List

In Books, Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப

கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?

குறிப்புகள்:

  • ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
  • பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது

தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List

  1. அ. முரளி
  2. அ.முத்துலிங்கம்
  3. அசோகமித்திரன்
  4. அரவிந்தன்
  5. இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
  6. இடலாக்குடி ஹஸன்
  7. இராம. முத்துகணேசன்
  8. எம். கே. குமார்
  9. எம். கோபாலகிருஷ்ணன்
  10. எஸ். செந்தில்குமார்
  11. குமாரசெல்வா
  12. குலசேகரன்
  13. கே.என். செந்தில்
  14. கோகுலக்கண்ணன்
  15. சச்சிதானந்தன் சுகிர்தராஜா
  16. சசி
  17. சந்திரா
  18. சந்ரு
  19. சிறீநான். மணிகண்டன்
  20. சுந்தர ராமசாமி
  21. சுரேஷ்குமார இந்திரஜித்
  22. தமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்
  23. தமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
  24. தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
  25. தமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
  26. தமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்
  27. தமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
  28. தமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
  29. தமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
  30. தமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்
  31. தமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
  32. தமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
  33. தமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
  34. தமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
  35. தமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
  36. தமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
  37. தி. மயூரன்
  38. தூரன் குணா
  39. தேவிபாரதி
  40. ந. முத்துசாமி
  41. நாகரத்தினம் கிருஷ்ணா
  42. பா. திருச்செந்தாழை
  43. பா. வெங்கடேசன்
  44. பெருமாள்முருகன்
  45. மண்குதிரை
  46. மாதங்கி
  47. யுவன் சந்திரசேகர்
  48. ரஞ்சகுமார்
  49. லதா
  50. வாஸந்தி
  51. வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்
  52. வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்
  53. ஜே.பி. சாணக்யா
  54. ஸ்ரீரஞ்சனி

கன்னியாகுமரி – ஜெயமோகன்

In Books on ஓகஸ்ட் 28, 2009 at 3:48 முப

நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்:

  1. அவனது முதிரா இளமைக் கனவுகளில் பளிங்கு நிறமுள்ள, உருண்டு பெருகி ஒன்றோடொன்று நெருங்கி நிறைந்த பெரும் மார்பகங்கள் நிரம்பியிருந்தன. அவை இருதசை குமிழ்களன்றி வேறல்ல என்ற உண்மையை அவன் கற்பனை ஏற்க மறுத்தது.
  2. kanniyakumariசானலை மாற்றி மாற்றிச் சென்று ஃபாஷன் டிவியை அடைந்தான். தொலைக்காட்சித் திரையின் வெண்திரவ ஆழத்திலிருந்து வண்ணக்குமிழிகள் போலப் பெண்ணுருவங்கள் எழுந்து வந்து வெடித்தபடியே இருந்தன.
  3. நாராயணன் பேசாத நேரங்களில் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருமுறை வேடிக்கை பேச்சினூடாக பார்கவிச்சேச்சி “நானும் பார்த்திருக்கேன். அந்த சமயத்திலும் பேசிகிட்டிருக்கிற ஒரே ஆள் இவர்தான்”
  4. கோபக்கார புருஷனுக்கு சமையல் பண்ற பொண்டாட்டியோட மனநிலை
  5. ரொம்ப அந்தரங்கமான விஷயத்த வெளியே சொல்றப்ப எப்பவுமே ஒரு செயற்கைத் தன்மை வந்துடும்.
  6. விசித்திரமான ஓர் ஒலி கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். பலநூறு பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போன்ற ஒலி எதிர்ப்பக்க முட்கம்பி வேலியிலிருந்து கேட்டது. நெருங்கி உற்றுப் பார்த்தான். வேலியெங்கும் பாலிதீன் உறைக்கிழிசல்கள் காற்றில் வந்து சிக்கியிருந்து அதிர்ந்து படபடத்துக் கொண்டிருந்தன.
  7. அப்போதுதான் கொள்ளையடித்த கிராமத்துவீடு போலிருந்தாள் ஷைலஜா. எங்கே தொட்டாலும் பவுடரோ கிரீமோ கண்மையோ ஒட்டியது.
  8. அந்தச் செயல் போல அவனை இம்சை செய்வது வேறு ஏதுமில்லை.கல்லறை மீது பூக்களையும் சொற்களையும் வைப்பது போல.
  9. பெரிய அவமானம்னு ஒரு பிராயத்தில தோண்றது பிறகு ரொம்ப சாதாரணமா ஆகிடும். போய்ப் பேசுங்க. அவங்க சிரிப்பாங்க
  10. நடிப்புக்காகவென்றாலும் – கூட வருவதன் மூலம் உருவாகும் நிறைவு அது என்று புரிந்து கொண்டான். நம்பிக்கையூட்டக் கூடிய வலுவான ஆளுமை ஒன்றின் துணையைப் பெற்றுக் கொண்ட உணர்வா அது?
  11. அவள் மயிர்ச்சுருள்கள் ஆடின. பிணத்தின் மயிர்கள் காற்றிலாடுவது போல.
  12. சேற்றுப் பாதையில் இதமான வெப்பம் இருந்தது. தன் உடல் அச்சுவர்களில் உரசிய போதுதான் அவை வியர்த்த ஈரச் சருமப் பரப்புகள் என்று தெரிந்தது. நிர்வாணமான பெண்ணுடல்களினாலான சுவர். மென்முலைகள், வயிறுகள், தொடைகள்…
  13. சன்னலோரம் சென்று நின்று கடலைப் பார்த்தான். இருட்டில் மிதக்கும் படகு விளக்குகளே கடலாக மனதில் விரிந்து கொண்ட விந்தையை எண்ணிக் கொண்டான்.
  14. அவள் நடந்துபோய் சரக்கொன்றை மரத்தின் அடியில் அமர்ந்தாள். செம்மஞ்சள் மலர்கள் பூத்து நிரம்பிய, முதலைத் தோல் கொண்ட மரம்.
  15. ஒரு குறிப்பிட்டத் தோற்றத்தில் காட்சியளிக்க ஆரம்பித்தால் அதை நம்பும் பிறர் அத்தோற்றத்தை தன்மீது பதியவைத்து பிறகு அதிலிருந்து நினைத்தாலும் தப்ப முடியாத நிலையை உருவாக்கி விடுவார்கள் என்று அறிந்தான்.
  16. பெண் விரோதிகளில் ஒரு கணிசமான பங்கினர் மிகத் தீவிரமான பெண்பித்தர்கள்.
  17. எல்லா ஒழுக்கவிதிகளும் மத்தவங்களை சுரண்டக்கூடாதுங்கிற நீதியோட அடிப்படையில் உருவான விஷயங்கள்தான்னு எனக்குப் படுது. மத்தவங்களைப் பொருள் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ ஏமாற்றாம இருந்தா எல்லாமே ஒழுக்கம்தான்
  18. மானுடக் கற்பனையின் அதிகபட்ச எல்லை மனக்கனவுகளில் உலவுகையில்தான் தெரிகிறது. அல்லது அது அகங்காரத்தின் எல்லையா? மனிதனுக்குத்தான் எத்தனை குறைவாகத் தேவைப்படுகிறது வாழ்க்கை! அகங்கார சமனத்தின் சில கணங்கள். அதை முடிவற்ற கண்ணாடிப் பரப்புகளில் பிரதிபலித்துப் பிரதிபலித்து பிரம்மாண்டமான வெளியாக மாற்றிக் கொள்கிறான்.
  19. பெண் என்றால் உடம்பு மட்டுமல்ல; தன்னிலையும் அகங்காரமும் கூட. அதை உடலால் தொட முடியாது. அதை அகங்காரத்தால் மட்டும்தான் தொட முடியும்.