Snapjudge

Posts Tagged ‘எழுத்தாளர்’

List of Online Tamil Magazines and How to Write for them

In Literature, Magazines, Tamilnadu on நவம்பர் 8, 2020 at 4:08 முப

முந்தைய பதிவு:

  1. Madras Paper: மெட்ராஸ் பேப்பர் –> https://www.madraspaper.com/paper@bukpet.com
  2. Kizhakku Today: கிழக்கு டுடே –> https://kizhakkutoday.in/kizhakku.today@gmail.com
  3. Arunchol: அருஞ்சொல் –> https://www.arunchol.com/aruncholeditorial@gmail.com
  4. Mayir: மயிர் –> https://mayir.in/mayirmagazine@gmail.com
  5. Law and Order: அளவை சட்ட இதழ் –> https://alavaimagazine.blogspot.com/
  6. Poems: கவிதைகள்: http://www.kavithaigal.in/kavithaigaltamil2021@gmail.com
  7. Tamil Literature: தமிழினி –> http://tamizhini.co.in/
  8. Japan, Russia Special Issues in Tamil: கனலி –> http://kanali.in/editor@kanali.in
  9. Singapore and Malaysia: வல்லினம் –> http://vallinam.com.my/ — vallinam.padaippukal@gmail.com
  10. Book Publishers: யாவரும் –> http://www.yaavarum.com/ editor@yaavarum.com
  11. Agazh: அகழ் –> https://akazhonline.com/akazhonline@gmail.com
  12. Manushyaputhiran: உயிர்மை –> https://uyirmmai.com/
  13. Print Books and Publications: வாசகசாலை –> https://www.vasagasalai.com/vasagasalaiweb@gmail.com
  14. Arts and Letters – Tamil Ilakkiyam: சொல்வனம் https://solvanam.com/solvanam.editor@gmail.com
  15. Fiction, Poems and Short Stories in Tamil: பதாகை https://padhaakai.com/editor@padhaakai.com
  16. Eezham and Sri Lanka: நடு வெப் –> https://naduweb.com/editornadu@gmail.com
  17. Maatru: மாற்று –> https://maattru.com/
  18. Padaippu: படைப்பு –> https://padaippu.com/admin@padaippu.com
  19. Amrutha Magazine: அம்ருதா மாத இதழ் –> https://amruthamagazine.com/
  20. Tamil Studio Koodu: கூடு –> https://thamizhstudio.com/Koodu/index.htmeditor@thamizhstudio.com
  21. Siragu: சிறகு –> http://siragu.com/editor@siragu.com
  22. Book Day: புத்தக தினம் / நூல் நாள் (புக் டே) –> https://bookday.in/ — பாரதி புத்தகாலயம் / ‘புத்தகம் பேசுது’ மாத இதழ் — thamizhbooks1@gmail.com
  23. Chuvadu: சுவடு –> https://suvadu.in/suvadueditor@gmail.com
  24. Print Magazine – Little Magz in Tamil: காலச்சுவடு –> https://kalachuvadu.com/magazineseditor@kalachuvadu.com
  25. Religion, Hinduism, Philosophy: தமிழ் ஹிந்து –> http://www.tamilhindu.com/tamizh.hindu@gmail.com
  26. Thinnai: திண்ணை –> http://puthu.thinnai.com/ editor@thinnai.com
  27. Scifi, Science-Fiction in Tamil: அரூ –> https://aroo.space/aroomagazine@gmail.com
  28. Adavi: அடவி –> https://www.adavimagazine.com/
  29. Olai chuvadi: ஓலைச்சுவடி –> https://www.olaichuvadi.in/olaichuvadiweb@gmail.com
  30. Padhivugal” பதிவுகள் –> https://www.geotamil.com/pathivukalnew/editor@pathivukal.com
  31. Azhisi: அழிசி –> https://www.azhisi.in/
  32. Wow Thamizha: வாவ் தமிழா –> https://wowtam.com/ta_in/wowtamizhaa@gmail.com
  33. பத்திரிகைகள்: The Hindu in Tamil: தி ஹிந்து பத்திரிகை (தமிழ் இலக்கியம்) –> https://www.hindutamil.in/news/literatureonline.editor@hindutamil.co.in
  34. The Indian Express in Thamizh: தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் (தமிழ் படைப்புகள்) –> https://tamil.indianexpress.com/literature/userfeedback@indianexpress.com
  35. Valai Tamil: வலைத்தமிழ் (அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்) –> https://www.valaitamil.com/literature
  36. Kuvigam: குவிகம் –> https://kuvikam.com/editor@kuvikam.com
  37. Than Aram: தன்னறம் –> http://thannaram.in/thannarame@gmail.com

Top 100 Tamil People: Notable and Important Thamizhar

In India, Lists, Politics, Tamilnadu on மார்ச் 9, 2019 at 5:19 பிப

  1. Admiral Oscar Stanley Dawson
  2. Admiral Sushil Kumar
  3. Air Chief Marshal Srinivasapuram Krishna Swamy
  4. Akshay Venkatesh – அக்‌ஷய் வெங்கடேஷ்
  5. Alagappa Chettiar – அழகப்ப செட்டியார்
  6. Ambujammal – அம்புஜம்மாள்
  7. Andal – ஆண்டாள்
  8. Anjali Gopalan – அஞ்சலி கோபாலன்
  9. Annamalai Chettiar – அண்ணாமலை செட்டியார்
  10. Arunagirinathar – அருணகிரிநாதர்
  11. Asalambikai Ammaiyaar – அசலாம்பிகை அம்மையார்
  12. Avvaiyar – ஔவையார்
  13. B Kakkan – பி. கக்கன்
  14. Ba Jeevanandham – ப. ஜீவானந்தம்
  15. Bharathidasan – பாரதிதாசன்
  16. C. Rangarajan – கவர்னர் சி ரங்கராஜன்
  17. C. Subramaniam – சி சுப்ரமணியம்
  18. C. V. Raman Nobel
  19. Captain Lakshmi Sehgal – காப்டன் இலட்சுமி சாகல்
  20. Chitra Visweswaran – சித்ரா விஸ்வேஸ்வரன்
  21. Cho Ramaswamy – சோ ராமசாமி
  22. Cuddalore Anjalaimmal – கடலூர் அஞ்சலையம்மாள்
  23. Dr. Rukmini Lakshmipathy – டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி
  24. Dr.S.Radhakrishnan – டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்
  25. G. Nammalvar Indian organic farming scientist – ஜி நம்மாழ்வார்
  26. General Krishnaswamy Sundararajan
  27. General Paramasiva Prabhakar Kumaramangalam
  28. Govindhammaal – கோவிந்தம்மாள்
  29. GU Pope – ஜி யூ போப்
  30. Haji Mohammed Maulana Saheb – ஹாஜி முகமது மெளலானா சாகிப்
  31. Illango Adigal – இளங்கோ அடிகள்
  32. Jaanaki Aadhi Nagappan – ஜானகி ஆதி நாகப்பன்
  33. Jayakanthan writer – ஜெயகாந்தன்
  34. Jeyamohan – எழுத்தாளர் ஜெயமோகன்
  35. K. Kamaraj – கே காமராஜர்
  36. K.B. Sundarambal – கே பி சுந்தராம்பாள்
  37. Kalki – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
  38. Kambar – கம்பர்
  39. Kannammaiyaar – கண்ணம்மையார்
  40. Kattabomman – கட்டபொம்மன்
  41. KB Janakiammal – கே. பி. ஜானகியம்மாள்
  42. Kirupananda Variyar – கிருபானந்த வாரியார்
  43. KKS Kaliyammaal – கே.கே.எஸ். காளியம்மாள்
  44. Krishnammal Jagannathan – கிருஷ்ண்ணம்மாள் ஜெகந்நாதன்
  45. M. Bhaktavatsalam – எம் பக்தவத்சலம்
  46. M.S. Subbulakshmi – எம் எஸ் சுப்புலஷ்மி
  47. Ma Singaravelar ம. சிங்காரவேலர்
  48. Ma. Po. Si. ம. பொ. சிவஞானம் கிராமணியார்
  49. Major Ramaswamy Parmeshwaran
  50. Manaloor Maniyamma மணலூர் மணியம்மா
  51. Maraimalai Adigal – மறைமலை அடிகள்
  52. Marudhanayagam மருதநாயகம்
  53. Marudhu Pandiyar மருது பாண்டியர்
  54. Meenambal மீனாம்பாள்
  55. Mohammed Ismail முஹம்மது இஸ்மாயில்
  56. Mohan Kumaramangalam மோகன் குமாரமங்கலம்
  57. Muthulakshmi Reddy முத்துலட்சுமி ரெட்டி
  58. Muvaloor Ramamirtham மூவலூர் இராமாமிர்தம்
  59. Nagammaiyaar நாகம்மையார்
  60. Nagore E.M. Hanifa – நாகூர் ஈ எம் ஹனீஃபா
  61. Namakkal Ve Ramalingam Pillai நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
  62. Neelavathy Rama Subramaniyam நீலாவதி இராம. சுப்பிரமணியம்
  63. Pachaiyappa Mudaliar – பச்சையப்ப முதலியார்
  64. Pankajathammaal பங்கஜத்தம்மாள்
  65. Papanasam R. Sivan – பாபநாசம் ஆர் சிவன்
  66. Pulithevan பூலித்தேவன்
  67. Raani Mangammal – ராணி மங்கம்மா
  68. Rajaji / C. Rajagopalachari ராஜாஜி
  69. Ramalinga Swamigal – இராமலிங்க சுவாமிகள்
  70. Ramanujar – ராமானுஜர்
  71. Rasamma Bhoopalan இராசம்மா பூபாலன்
  72. Rettamalai Srinivasan – ரெட்டமலை ஸ்ரீனிவாசன
  73. Sekkizhar – சேக்கிழார்
  74. Shenbagaraman Pillai – ஷெண்பகராமன் பிள்ளை
  75. SN Sundharambaal எஸ். என். சுந்தராம்பாள்
  76. Subrahmanyan Chandrasekhar – நோபல் சுப்ரமணியன் சந்திரசேகர்
  77. Subramaniya Siva – சுப்ரமணிய சிவா
  78. Theeran Chinnamalai தீரன் சின்னமலை
  79. Thillaiaadi Valliammai – தில்லையாடி வள்ளியம்மை
  80. Thiru. Vi. Kalyanasundaram – திரு வி கலியாணசுந்தர முதலியார்
  81. Thirumular – திருமூலர்
  82. Thiruvalluvar – திருவள்ளுவர்
  83. Tholkappiar – தொல்காப்பியர்
  84. Tiruppur Kumaran – திருப்பூர் குமரன்
  85. U. Muthuramalingam Thevar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
  86. U.V. Swaminatha Iyer – உ வே சாமிநாத அய்யர்
  87. Umaru Pulavar – உமறுப் புலவர்
  88. V.O. Chidhambaram வ. உ. சிதம்பரம் பிள்ளை
  89. V.S. Ramachandran neuroscientist; Director Professor at UC San Diego
  90. Vadivu வடிவு
  91. Vai Mu Kothainaayagi வை. மு. கோதைநாயகி
  92. Vanchinadhan வாஞ்சிநாதன்
  93. Varadarajan Mudaliar Naayagan movie was based on him – வரதராஜ முதலியார்
  94. Veeramamunivar – வீரமாமுனிவர்
  95. Velu Naachiyaar வேலு நாச்சியார்
  96. Velupillai Prabhakaran LTTE – வேலுப்பிள்ளை பிரபாகரன்
  97. Venkatraman Ramakrishnan – வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
  98. Viswanathan Anand chess – விஸ்வநாதன் ஆனந்த்
  99. Vyjayanthimala – வைஜயந்திமாலா

Top 12 Tamil Books of Writer Jeyamohan

In Books, Literature, Tamilnadu on திசெம்பர் 15, 2018 at 11:54 பிப

நூறு புத்தகங்களாவது ஜெயமோகன் எழுதியிருப்பார். அதில் எனக்குப் பிடித்த தலை பத்து (சரி… பன்னிரெண்டு ஆகிவிட்டது; அதற்கே தாவு தீர்கிறது! ஈராறு கால்கொண்டெழும் புரவி எல்லாம் சேர்க்க முடியவில்லை)  நூல்கள் கீழே காணலாம். இதில் மஹாபாரதம் கிடையாது (இன்னும் வாசிக்கவில்லை); சிறுகதைத் தொகுப்புகளுக்கு ஒன்று உண்டு; நாவல்களும் உண்டு; கட்டுரைகள் எனக்கு உவப்பானவை – எனவே அவை நிறைய உண்டு:

  1.  இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
  2.  ஏழாம் உலகம்
  3.  இலக்கிய முன்னோடிகள்
  4.  புறப்பாடு
  5.  காடு
  6.  அபிப்பிராய சிந்தாமணி
  7. ஜெயமோகன் குறுநாவல்கள்
  8.  பின் தொடரும் நிழலின் குரல்
  9.  சங்கச்சித்திரங்கள்
  10.  விஷ்ணுபுரம்
  11.  சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்
  12.  ஜெயமோகன் சிறுகதைகள்

உதவி:

எழுத்தாளர்களை நேரில் சந்திக்க ஏழு காரணங்கள்

In Blogs, Life, Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப

எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?

மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?

நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை

1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.

2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.

3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.

4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.

5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.

6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.

7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.

Kaalachuvadu Short Story Writers: Tamil Fiction Authors List

In Books, Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப

கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?

குறிப்புகள்:

  • ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
  • பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது

தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List

  1. அ. முரளி
  2. அ.முத்துலிங்கம்
  3. அசோகமித்திரன்
  4. அரவிந்தன்
  5. இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
  6. இடலாக்குடி ஹஸன்
  7. இராம. முத்துகணேசன்
  8. எம். கே. குமார்
  9. எம். கோபாலகிருஷ்ணன்
  10. எஸ். செந்தில்குமார்
  11. குமாரசெல்வா
  12. குலசேகரன்
  13. கே.என். செந்தில்
  14. கோகுலக்கண்ணன்
  15. சச்சிதானந்தன் சுகிர்தராஜா
  16. சசி
  17. சந்திரா
  18. சந்ரு
  19. சிறீநான். மணிகண்டன்
  20. சுந்தர ராமசாமி
  21. சுரேஷ்குமார இந்திரஜித்
  22. தமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்
  23. தமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
  24. தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
  25. தமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
  26. தமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்
  27. தமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
  28. தமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
  29. தமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
  30. தமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்
  31. தமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
  32. தமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
  33. தமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
  34. தமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
  35. தமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
  36. தமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
  37. தி. மயூரன்
  38. தூரன் குணா
  39. தேவிபாரதி
  40. ந. முத்துசாமி
  41. நாகரத்தினம் கிருஷ்ணா
  42. பா. திருச்செந்தாழை
  43. பா. வெங்கடேசன்
  44. பெருமாள்முருகன்
  45. மண்குதிரை
  46. மாதங்கி
  47. யுவன் சந்திரசேகர்
  48. ரஞ்சகுமார்
  49. லதா
  50. வாஸந்தி
  51. வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்
  52. வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்
  53. ஜே.பி. சாணக்யா
  54. ஸ்ரீரஞ்சனி

2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List

In Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:06 பிப

கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?

குறிப்புகள்:

  • நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
  • ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
  • பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
  1. அ.முத்துலிங்கம்
  2. அசோகமித்திரன்
  3. இமையம்
  4. இரா.சரவணன்
  5. எஸ் ராமகிருஷ்ணன்
  6. க.சீ.சிவகுமார்
  7. கவிதா சொர்ணவல்லி
  8. கவிதாபாரதி
  9. கவின் மலர்
  10. கி ராஜநாராயணன்
  11. கிருஷ்ணா டாவின்சி
  12. சதத் ஹசன் மண்டோ
  13. சுகா
  14. சுகுணா திவாகர்
  15. சுதேசமித்திரன்
  16. சொக்கன்
  17. தமிழ்மகன்
  18. தமிழருவி மணியன்
  19. தமயந்தி
  20. பட்டுக் கோட்டை பிரபாகர்
  21. பாவண்ணன்
  22. பாஸ்கர்சக்தி
  23. பிரபஞ்சன்
  24. பெருமாள் முருகன்
  25. மேலாண்மை பொன்னுசாமி
  26. வண்ணதாசன்
  27. வண்ணநிலவன்
  28. வாமு கோமு
  29. ஷங்கர் பாபு

வீட்டுப்பாடம்:

  • தவறவிட்டவர்களை சுட்டவும்
  • மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
  • யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
  • விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
    1. ஜெயமோகன்
    2. அழகிய பெரியவன்
    3. கோணங்கி
    4. பா ராகவன்
    5. கீரனூர் ஜாகிர் ராஜா
    6. விமலாதித்த மாமல்லன்
    7. மனுஷ்யபுத்திரன்
    8. ஆபிதின்
    9. கண்மணி குணசேகரன்
    10. பிரான்சிஸ் கிருபா
    11. நாஞ்சில் நாடன்
    12. இரா முருகன்

85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி

In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.

  1. வாணிதாசன்
  2. முடியரசன்
  3. ஜெகசிற்பியன்
  4. தமிழவேள் உமாமகேசுவரனார்
  5. கா. அப்துல்கபூர்
  6. தி.கோ.சீனிவாசன்
  7. கா. சுப்பிரமணிய பிள்ளை
  8. கெ.என். சிவராஜ பிள்ளை
  9. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
  10. ஆனந்தரங்கப்பிள்ளை
  11. புலவர் குழந்தை
  12. பா. வே. மாணிக்க நாயக்கர்
  13. ஆர். சண்முகசுந்தரம்
  14. சி. இலக்குவனார்
  15. கா. அப்பாத்துரை
  16. மா. இராசமாணிக்கனார்
  17. அ.சிதம்பரநாதச் செட்டியார்
  18. வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
  19. டி.எஸ். சொக்கலிங்கம்
  20. சதாசிவ பண்டாரத்தார்
  21. சே.ப.நரசிம்மலு நாயுடு
  22. வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
  23. த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
  24. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
  25. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
  26. பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
  27. கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
  28. வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
  29. தொல்காப்பியர்
  30. ஒளவையார்
  31. கம்பன் (தமிழ் மகாகவி)
  32. மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
  33. பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
  34. புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  35. ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
  36. வேதநாயகம் பிள்ளை
  37. கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  38. ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
  39. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
  40. மறைமலை அடிகள்
  41. திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
  42. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
  43. அ. மாதவையா
  44. ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
  45. நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
  46. நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
  47. க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
  48. ம.ப. பெரியசாமித் தூரன்
  49. அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
  50. வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
  51. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
  52. பாரதியார்
  53. தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
  54. அறிஞர் அண்ணா
  55. கல்கி
  56. மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
  57. விந்தன்
  58. நா.வானமாமலை
  59. சோமலெ
  60. உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
  61. செய்குத் தம்பிப் பாவலர்
  62. வை.மு.கோதைநாயகி அம்மாள்
  63. தேவநேயப் பாவாணர்
  64. ந. பிச்சமூர்த்தி
  65. ஜீவ நாரண துரைக்கண்ணன்
  66. உடுமலை நாராயண கவி
  67. கோபாலகிருஷ்ண பாரதி
  68. குலசேகராழ்வார்
  69. தி. ஜானகிராமன்
  70. திரிகூடராசப்பக்கவிராயர்
  71. வ.உ. சிதம்பரனார்
  72. மா.பொ.சிவஞானம்
  73. பி. எஸ்.ராமையா
  74. பெரியார் ஈ.வெ.ரா
  75. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
  76. திருஞானசம்பந்தர்
  77. பரஞ்சோதி முனிவர்
  78. கு.அழகிரிசாமி
  79. க. அயோத்திதாச பண்டிதர்
  80. அழ. வள்ளியப்பா
  81. அருணகிரிநாதர்
  82. குமரகுருபரர்
  83. குன்றக்குடி அடிகளார்
  84. தேசிக விநாயகம் பிள்ளை
  85. காரைக்காலம்மையார்

20 தமிழ் இலக்கியவாதிகள்

In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 10, 2012 at 6:50 பிப

பல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.

அப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.

உரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல! சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக!!

1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி

2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்

3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து

4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி

5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்

6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்

7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு

8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி

9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்

10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை

11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்

12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்

13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்

14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்

15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி

16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்

17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்

18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா

19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்

20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்

21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்

Writer Jeyamohan on Author S Ramakrishnan

In Books, Literature on ஜூலை 6, 2012 at 7:39 பிப

1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்

தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.

2.

3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.

4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்

பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன

எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.

5. இருவகை எழுத்து

எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

8. ஜெய்? மோகன்?

ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி

எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.

”தெரியுமே”

”உங்ககூட பேசுவாரா?”

”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”

”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”

அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.

9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்

10. http://www.jeyamohan.in/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&searchsubmit&paged=3

’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.

கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

Writer S Ramakrishnan: 20 Links

In Lists, Literature, Tamilnadu on ஜூன் 26, 2012 at 6:29 பிப

1. Webulagam நேர்காணல்எஸ். ராமகிருஷ்ணன்

சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.

`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’

`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன்உயிர்மை பதிப்பகம்

நெல் எப்படி உருவானது?

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?

பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?

என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்

3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்

வாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

4. Anandha Vikadan Interview with Noted Writer S Ramakrishnan on Eelam, Jeyamohan, Tamil Cinema

” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?”

”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?”

”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்?”

5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது

சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.

6. மாற்று மருத்துவம்கால்களால் சிந்திக்கிறேன்

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

7. வைரமுத்து, ரஜினிகாந்த் பேச்சுக்களும் விழியங்களும்: S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

8. ‘நெடுங்குருதிகுறித்து எஸ். ராமகிருஷ்ணன்

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.

9. Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.

10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005

“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”

11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்

12. Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.

என்ன நடந்தது அங்கே?

13. Short Films based on S Ramakrishnan Stories: எஸ் ராமகிருஷ்ணன் குறும்படங்கள்

14. Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

16. Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

17. Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam

ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ?

18. வரல் ஆற்றின் திட்டுகள்

19. நள் எனும் சொல்

20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்

More… இன்னும் வரலாம்

21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்

22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்

23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு