Snapjudge

Posts Tagged ‘உயிர்மை’

Writer Jeyamohan on Author S Ramakrishnan

In Books, Literature on ஜூலை 6, 2012 at 7:39 பிப

1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்

தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.

2.

3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.

4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்

பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன

எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.

5. இருவகை எழுத்து

எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

8. ஜெய்? மோகன்?

ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி

எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.

”தெரியுமே”

”உங்ககூட பேசுவாரா?”

”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”

”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”

அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.

9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்

10. http://www.jeyamohan.in/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&searchsubmit&paged=3

’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.

கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

Writer S Ramakrishnan: 20 Links

In Lists, Literature, Tamilnadu on ஜூன் 26, 2012 at 6:29 பிப

1. Webulagam நேர்காணல்எஸ். ராமகிருஷ்ணன்

சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.

`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’

`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன்உயிர்மை பதிப்பகம்

நெல் எப்படி உருவானது?

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?

பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?

என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்

3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்

வாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

4. Anandha Vikadan Interview with Noted Writer S Ramakrishnan on Eelam, Jeyamohan, Tamil Cinema

” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?”

”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?”

”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்?”

5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது

சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.

6. மாற்று மருத்துவம்கால்களால் சிந்திக்கிறேன்

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

7. வைரமுத்து, ரஜினிகாந்த் பேச்சுக்களும் விழியங்களும்: S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

8. ‘நெடுங்குருதிகுறித்து எஸ். ராமகிருஷ்ணன்

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.

9. Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.

10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005

“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”

11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்

12. Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.

என்ன நடந்தது அங்கே?

13. Short Films based on S Ramakrishnan Stories: எஸ் ராமகிருஷ்ணன் குறும்படங்கள்

14. Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

16. Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

17. Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam

ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ?

18. வரல் ஆற்றின் திட்டுகள்

19. நள் எனும் சொல்

20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்

More… இன்னும் வரலாம்

21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்

22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்

23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு

 

Manushya Puthiran picks his top books for 2012

In Books, Tamilnadu on ஜனவரி 16, 2012 at 5:12 பிப

கவிஞர் மனுஷ்ய புத்திரன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்

1. கரமஸோவ் சகோதரர்கள் – தஸ்தயேவஸ்கி

2. கமல் நம் காலத்து நாயகன்

3. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய்

4. ஒன்றுக்கும் உதவாதவன் – அ. முத்துலிங்கம்

5. பாலற்ற பொற்பால் – ஜெர்மெய்ன்கிரீர் (தமிழில் ராஜ் கௌதமன்)

6. இருத்தலியமும் மார்க்சியமும் – எஸ்.வி.ராஜதுரை

7. கதைக் கருவூலம்

8. விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் `ஆரண்யக்’ – வனவாசி – விபூதி பூஷண்: த.நா. குமாரசாமியால் `வனவாசி’ : 1968ல் சாகித்ய அகாதமியால் பிரசுரிக்கப்பட்டது.

9. கால்கள் – அபிலாஷ்

10. புத்தனாவது சுலபம் – எஸ்.ராமகிருஷ்ணன்

Sujatha Story Analysis in Numbers by Jeyamohan

In Books, Literature on மார்ச் 13, 2009 at 9:44 பிப

ஜெயமோகன் :: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் சுஜாதா :: உயிர்மை பதிப்பகம்

சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:

  1. சுருக்கம்
  2. நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு

சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:

  1. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
  2. குறைவான கதைமாந்தர்
  3. சிறிய கால அளவு
  4. மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்

அவரது கதைகளின் பலம்:

  1. வலுவான வடிவ உணர்வு
  2. நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.

சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:

  1. பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
    • ஒரே ஒரு மாலை
    • வழி தெரியவில்லை
    • சென்ற வாரம்
  2. பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம்.  உதாரணமாக
    • அம்மா மண்டபம்
    • கள்ளுண்ணாமை
    • கால்கள்
    • கரைகண்ட ராமன்

சுஜாதாவின் தொடக்கம்

  1. ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
  2. ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
  3. அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.

அவரது கதைகளின் வகை.

  1. நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
    • மகன் தந்தைக்கு
    • வீடு
    • சிலவித்தியாசங்கள்
    • செல்வம்
    • எல்டொராடோ
    • ரேணுகா
  2. . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.  உதாரணமாக
    • பார்வை
    • ரஞ்சனி
    • நீர்
    • நிபந்தனை
    • நிதர்சனம்
    • சாரங்கன்.
  3. உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
    • சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது.
    • மாமாவிஜயம்
    • சார் இந்த அக்கிரமத்தை
  4. ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
    • நகரம்
    • முரண்
    • நிலம்
    • நொ ப்ரொப்ளாம்
    • எப்படியும் வாழலாம்
    • பாரீஸ் தமிழ்ப்பெண்

சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்

  1. சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
  2. சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
  3. சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
  4. சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.