தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்குப் படங்களில் எந்தத் திரைப்படங்கள் கர்னாடக இசையையோ சாஸ்திரீய சங்கீதத்தையோ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன? அவற்றில் எந்த சினிமாக்கள் இன்றும் உங்களின் மனதில் நிலைத்திருக்கின்றன? ஹிந்துஸ்தானி என்றோ ராப் பாடல் என்றோ மியூசிகல் என்றோ எதைச் சொல்வீர்கள்?
எந்த வரிசையிலும் இல்லை.
- தில்லானா மோகனாம்பாள் (1968)
- தியாகய்யா (1946) – தெலுங்கு
- சர்வம் தாள மயம்
- சங்கராபரணம் (శంకరాభరణం) – தெலுங்கு
- Rock On!! (2008) – ஹிந்தி
- Gully Boy (2019) – ஹிந்தி
- சுவாதித் திருநாள் (1987) – மலையாளம்
- கொஞ்சும் சலங்கை (1962)
- அருணகிரிநாதர் (1964)
- நந்தனார் (1942, 1935)
- மீரா (1945, 1979)
- Baiju Bawra (1952)

இசையை சும்மா ஊறுகாய் மாதிரி வைத்துக் கொண்டு தமிழ்ப்பட மசாலா ஆன காதல், அம்மா செண்டிமெண்ட், சண்டை எல்லாம் வைத்து எடுக்கப்பட்ட ஜனரஞ்சகப் படங்கள்:
- கிழக்கு வாசல் (1990)
- கரகாட்டக்காரன் (1989)
- சிந்து பைரவி (1985)
- சூயட் (1994)
- முகவரி (2000)
- பாய்ஸ் (2003)
- சங்கமம் (1999)
- திருவிளையாடல் (1965)