Snapjudge

Posts Tagged ‘ஆவி’

2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List

In Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:06 பிப

கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?

குறிப்புகள்:

  • நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
  • ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
  • பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
  1. அ.முத்துலிங்கம்
  2. அசோகமித்திரன்
  3. இமையம்
  4. இரா.சரவணன்
  5. எஸ் ராமகிருஷ்ணன்
  6. க.சீ.சிவகுமார்
  7. கவிதா சொர்ணவல்லி
  8. கவிதாபாரதி
  9. கவின் மலர்
  10. கி ராஜநாராயணன்
  11. கிருஷ்ணா டாவின்சி
  12. சதத் ஹசன் மண்டோ
  13. சுகா
  14. சுகுணா திவாகர்
  15. சுதேசமித்திரன்
  16. சொக்கன்
  17. தமிழ்மகன்
  18. தமிழருவி மணியன்
  19. தமயந்தி
  20. பட்டுக் கோட்டை பிரபாகர்
  21. பாவண்ணன்
  22. பாஸ்கர்சக்தி
  23. பிரபஞ்சன்
  24. பெருமாள் முருகன்
  25. மேலாண்மை பொன்னுசாமி
  26. வண்ணதாசன்
  27. வண்ணநிலவன்
  28. வாமு கோமு
  29. ஷங்கர் பாபு

வீட்டுப்பாடம்:

  • தவறவிட்டவர்களை சுட்டவும்
  • மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
  • யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
  • விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
    1. ஜெயமோகன்
    2. அழகிய பெரியவன்
    3. கோணங்கி
    4. பா ராகவன்
    5. கீரனூர் ஜாகிர் ராஜா
    6. விமலாதித்த மாமல்லன்
    7. மனுஷ்யபுத்திரன்
    8. ஆபிதின்
    9. கண்மணி குணசேகரன்
    10. பிரான்சிஸ் கிருபா
    11. நாஞ்சில் நாடன்
    12. இரா முருகன்

Kanimozhi’s Top 10 Book Picks

In Lists on ஓகஸ்ட் 20, 2009 at 3:58 பிப

1. அகநானூறு – புறநானூறு

2. பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார்

3. 100 Years of Solitude: Gabriel Garcia Marquez

4. Deep River (深い河, Fukai kawa): Shusaku Endo

5. The Bluest Eye: Tony Morrison

6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்

7. செம்மீன்: தகழி சிவசங்கரன் பிள்ளை (சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பு)

8. தக்கையின் மீது நான்கு கண்கள்: சா கந்தசாமி

9. Traditions, Tyranny and Utopias: Essays in the Politics of Awareness: Ashis Nandy

10. Collected Poems: Pablo Neruda

Prakashraj’s Top 10 Movie Picks

In Movies on பிப்ரவரி 26, 2009 at 2:12 பிப

நன்றி: ஆனந்த விகடன்

பிரகாஷ்ராஜ் பார்த்ததிலே பிடித்த பத்து திரைப்படங்கள்:

  1. பராசக்தி
  2. வீரபாண்டிய கட்டபொம்மன்
  3. எங்க வீட்டுப் பிள்ளை
  4. கை கொடுத்த தெய்வம்
  5. காதலிக்க நேரமில்லை
  6. நீர்க்குமிழி
  7. தில்லானா மோகனாம்பாள்
  8. 16 வயதினிலே
  9. உதிரிப் பூக்கள்
  10. ஒரு தலை ராகம்

சுஜாதா கேள்விகள்: கற்றதும் பெற்றதும் (ஆனந்த விகடன்)

In Life, Questions on பிப்ரவரி 23, 2009 at 6:32 பிப

இன்றைய தினங்களில் எல்லாமே விழுக்காடு அல்லது எண்ணிக்கைதான். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து ஐ.ஐ.டி. அனுமதித் தேர்வு வரை வாழ்வில் உள்ள இலக்கங்களும் விழுக்காடுகளும் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கேள்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள் (பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது).

நீங்கள் எத்தனை விழுக்காடு?

1. சம்பளத்தில் தர்ம காரியங்களுக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

2. எத்தனைக் கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறீர்கள்?

3. எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து, சுத்தப்படுத்துகிறீர்கள்?

4. எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள்?

5. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

6. எத்தனை முறை ஓட்டுப் போட்டிருக்கிறீர்கள்?

7. அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் நிஜமாக வேலை செய்கிறீர்கள்?

8. உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?

9. தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செய்கிறீர்கள்?

10. எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?

11. எவ்வளவு நேரம் டி.வி. பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?

12. பாட்டு மட்டும் எவ்வளவு நேரம் கேட்கிறீர்கள்?

13. போன வருஷம் எத்தனை பேருக்குப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அனுப்பினீர்கள்?

14. தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிகை படிக்கிறீர்கள்?

15. எத்தனை மணி நேரம் ஜஸ்ட் சும்மா இருக்கிறீர்கள்?

16. தினம் எத்தனை மணி நேரம் பஸ், ஸ்கூட்டர் அல்லது காரில் பயணிக்கிறீர்கள்?

17. பள்ளியில் உங்களுக்குப் பிடித்திருந்த பாடம் எது?

18. இப்போது பிடித்த நடிகர், நடிகை யார், யார்?

இந்த 18 கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு… எனக்கு அனுப்பாதீர்கள்! ஒரு வாரம் கழித்து அவற்றைப் பாருங்கள். உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள். கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.

நான் ஒரு…

1. சோம்பேறி

2. சாதாரண மனிதன்

3. நல்ல குடிமகன்

4. அறிவு ஜீவி

எ.பி.க. 10 – சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

In Literature, Magazines on பிப்ரவரி 21, 2009 at 6:13 முப

1. sujatha-katrathum-petrathum-tamil-kavithai-poems-litமுன்னாள் :: முகுந்த் நாகராஜ்

தினம் சமைக்கும்போது
இந்தத் தண்ணீரில்தான்
நீந்திச் சாதனைகள் செய்தோம்
என்று நினைத்ததுண்டா
என்ற கேள்விக்கு சிரித்தாள்
குடும்பத் தலைவி ஆகி
கொஞ்சம் குண்டாகவும் ஆகிவிட்ட
அந்த முன்னாள் நீச்சல் வீராங்கனை!

~oOo~

2. ச.முகுந்தன்

‘வேட்டுக் கோதினைப் போல நிறத்தவள்
வெட்கத்தில் ‘பரா’ லைற்றாய் ஒளிர்பவள்
றோட்டுச் சோதனைச் சாவடி போலவென்
இரவுத் தூக்கப் பயணம் தடுப்பவள்
காட்டிக் காட்டி முகத்தை மறைப்பதில்
கண்ட தீர்வுப் பொதியினைப் போன்றவள்
வீட்டைத் தேடிப் பிடித்து என்னிலை
எஃகுக் கம்பியே சொல்லிவா சீக்கிரம்.’

‘20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ :: இலங்கை பூபாலசிங்கம் புத்தக சாலையின் வெளியீடு

வேட்டுக் கோது & உபயோகமற்றுப்போன துப்பாக்கி ரவை; ‘பரா’ லைற்றாய் & எதிரிகளைத் தேடத் தற்காலிகமாக விண்ணில் ஏவப்படும் பிரகாசமான விளக்கு போல; தீர்வுப் பொதி & இருவருக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தம் அல்லது ஏற்பாடு

~oOo~

3. பூமா ஈஸ்வரமூர்த்தி

ஒருதரம் காதல்
என்னை மீட்டுத் தந்தது
ஒருதரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத் தந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் தந்தது
நான்தான் அடிக்கடி
தொலைந்துவிடுகிறேன்!

~oOo~

4. ‘என் வீடு’ (தொகுப்பு: ‘யாருமற்ற நிழல்’) :: தேவதச்சன்

என் வீடு மிகச் சிறிய வீடு
ஆனாலும்,
வீடு திரும்ப விரும்புகிறேன்!

***

ஒவ்வொரு வீடும் நிரந்தரச்
சூரியனை
ஜன்னல் வழியே அழைக்கிறது
அதை கைக்குழந்தையைப் போல்
படுக்கவைத்துக் கொள்கிறது
தினமும் படியில் ஏறியதும்
பயங்கள் மறையும்
என் சிறிய வீட்டின் பின்கதவைத் திறந்து
பார்க்கிறேன்
வீட்டிற்கு அப்பால்
வேறு எதுவும் இல்லை!

~oOo~

5. ‘நதிக் காட்சி’ (தொகுப்பு: ‘பூமியை வாசிக்கும் சிறுமி’) :: சுகுமாரன்

கரையதுக்கிக்
கட்டப்பட்ட
அசையும் தோணிக்குள்
மிஞ்சிய மழை நீர்
அதில்
சிலிர்த்துக்கொண்டு
இருக்கிறது
நிலவு
பூமிக்கு ஒளி பொழிந்த
கருணையில்!

~oOo~

6. மார்கன்

பிளாட்பாரத்தில்
பலூன் விற்பவனுடன்
ஒட்டிக்கொண்டு
பாடப் புத்தகம்
படிக்கும் சிறுமி!

~oOo~

7. ‘அமர் – நிகழ்ச்சி நிரல்’ :: விக்ரமாதித்யன்

கையில் காசு இருந்தால்
டாஸ்மாக் போவான்
இல்லையென்றால் செய்யது பீடி
பிடித்துக்கொண்டிருப்பான்
தோன்றினால் மட்டும்
கவிதை எழுதுவான்!

~oOo~

8. வில்லக விரலினார் (குறுந்தொகை 370) – வில்லும் விரலும்

பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
வண்டு வாய்திறக்கும் தண்துறை ஊரனோடு
இருப்பின் இருமருங்கினமே கிடப்பின்
வில்லக விரலின் பொருந்தி அவன்
நல்லகம் சேரின் ஒருமருங்கினமே

(பொய்கையில் ஆம்பல் மலர்மொட்டுகளை வண்டுகள் திறக்கும் துறையூர்க்காரனோடு உட்கார்ந்திருக்கும்போது இருவராக இருப்போம். படுத்துக்கொண்டால் வில்லைப் பிடித்த விரல்களைப் போல அவன் உடலைக் கட்டிக்கொண்டு ஒருவராவோம்.)

~oOo~

9. ஒற்றைச் சாட்சி (தொகுப்பு: அவளை மொழிபெயர்த்தல்) :: சுகிர்தராணி

சொல்லாமல் விடப்பட்ட காதலை
மரக்கன்று ஒன்றை நடுவதன் மூலம்
சொல்லிவிட முடியாதுதான் என்றாலும்
இதுநாள் வரை நீருற்றிக் காத்துவந்த
வாகைமரம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய பூக்களின் நெடி
உன்னை நோக்கி நீள
ஏதாவது விருட்சத்தின் அடியில்
நீயும் நின்றிருக்கலாம்
நிராகரிப்பின் ஒற்றை சாட்சியாய்!

Cry: 10 Questions by Njaani (Anandha Vikadan)

In Guest, Life, Questions on பிப்ரவரி 21, 2009 at 5:07 முப

அறிந்தும் அறியாமலும் :: ஞாநி

சில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது?

2. அப்போது எதற்காக அழுதேன்?

3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா?

4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்?

5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி?

6. கடைசியாக நான் அழுதது எப்போது? எதற்காக?

7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது?

8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்?

9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய விரும்புவேன்?

10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது?

நன்றி: ஆனந்தவிகடன்

சுஜாதா: தலை பத்து புத்தகம்

In Books, Lists, Magazines on ஜனவரி 31, 2009 at 5:53 பிப

விகடனில் சுஜாதா தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (மார்ச் 26, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து):

1. புறநானூறு
2. பைபிள்
3. பகவத் கீதை
4. பாரதியார் கவிதைகள்
5. புதுமைப்பித்தன் கதைகள்
6. திருக்குறள்
7. சிவப்புப் புத்தகம் (மா சே துங்)
8. தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு)
9. நாலாயிர திவ்யப் பிரபந்தம்
10. Why I Write? – ஜார்ஜ் ஆர்வெல் கட்டுரைகள்