Snapjudge

Posts Tagged ‘அறிவு’

புகழ் பெற்ற பட்டிமன்றத் தலைப்புகள்

In Events, Lists, Religions, Tamilnadu on மார்ச் 5, 2023 at 1:16 முப

சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களில் என்ன தலைப்புகளில் வாதாடினார்கள்?

கம்பன் கழக வழக்காடு மன்றங்களின் தலை பத்து அலசல்கள் என்ன?

  1. நீதியரசர் மு.மு. இஸ்மாயில்,
  2. குன்றக்குடி அடிகளார்,
  3. அ.சா.ஞானசம்பந்தம்,
  4. சோ.சத்தியசீலன்,
  5. இலங்கை ஜெயராஜ்,
  6. ஆய்வுரை திலகம் அ அறிவொளி  துவங்கி
  7. சன் டிவி புகழ் எஸ்.ராஜா,
  8. சண்முகவடிவேலு ,
  9. திருமதி பாரதி.பாஸ்கர்,
  10. பட்டிமண்டபம் ராஜா எனத் தொடர்ந்து
  11. திண்டுக்கல் லியோனி,
  12. பர்வீன் சுல்தானா,
  13. மோகனசுந்தரம்,
  14. சுகி சிவம்,
  15. திருமதி சுதா சேஷஷையன்,
  16. புலவர் இராமலிங்கம் 
  17. வழக்கறிஞர் சுமதி
  18. உமா மகேஸ்வரன்
  19. மதுக்கூர் ராமலிங்கம்
  20. மணிகண்டன்
  21. கவிஞர் முத்துநிலவன்
  22. முத்தமிழ் வித்தகர் டாக்டர் பழ முத்தப்பன்
  23. நெல்லை கண்ணன்
  24. நாஞ்சில் சம்பத்

வந்தபிறகு நகைச்சுவை என்பற்காகவோ ஜனரஞ்சகம் என்னும் பெயரிலோ சன் டிவி பார்வையாளர்களின் பொது தரம் என்பதாலோ இவை எவ்வாறு மாறின?

சில புகழ்பெற்ற வழக்குகள்:

  1. கம்பன் பாத்திரப் படைப்பில் மகளிரின் உரிமை பறிக்கப்படுகிறது: ஆம் . இல்லை
  2. காப்பியப் போக்கிற்குப் பெரிதும் பெருமை சேர்ப்பது:
    • மதி நுட்மன்று, உறுதிப்பாடே!
    • உறுதிப்பாடன்று, தியாக உணர்வே!
    • தியாக உணர்வன்று, கொடுமை மனமே!
    • கொடுமை மனமன்று, மதி நுட்பமே!
  3. கட்டளையாய் மாறிய கவினுறு வாசகம்
    • அடியாரின் ஏவல் செய்தி
    • கோதிலானை நீயே என்வயின் கொணர்தி
    • நீயே பற்றி நல்கலை போலும்
    • நெடுத்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்
  4. தலைசிறந்த தூதுவன் யார்? அன்மனா? கண்ணனா?
  5. பாரதி கண்ட கனவு நிறைவேறியது என்பது குற்றமே… – வாக்கு தொடுப்பர் / வாக்கு மறுப்பவர்
  6. கோவலன் கொலையில் முதல் குற்றவாளி கண்ணகியே… : வாக்குரைஞர் / எதிர் வழக்கு உரைஞர்
  7. பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்று ஆசிரியர் கல்கி மீது இந்த வழக்காடு மன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது! வழக்குரைப்பவர் / வழக்கு மறுப்பவர் / அறங்கூறுவோர்
  8. இன்றைய வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு… : எடுத்துக்கட்டா? எச்சரிக்கையா?
  9.  “இளங்கோ வென்ற தமிழ், கம்பன் கொன்ற தமிழ்”.
    இளங்கோவையும் கம்பனையும் – இலக்கிய இலக்கணம், காப்பிய அமைப்பு, இயல் அமைப்பு, இசை அமைப்பு, நாடக அமைப்பு, காதை/படலம், வடிவம், வரலாறு, பொது மக்களின் உணவு உடை உறையுள் வாழ்வியல், மன்னர்களின் அரசியல், மக்களின் சமூகப் பொருண்மை – ஆய்வு
  10. பேயோன் என்ற எழுத்தாளர் யாராக இருக்க கூடும்?

Why do we read Fiction?

In Books, Literature on செப்ரெம்பர் 30, 2009 at 1:52 பிப

உதவி: புள்ளி – சித்ரன்

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது

  1. சும்மா பொழுதுபோக்கிற்காகவா?
  2. குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை?
  3. மனதைக் கொள்ளைகொண்ட படைப்பாளியின் நடை மேல் எழும் கவர்ச்சி கலந்த ஆர்வமா?
  4. இலக்கிய தாகமா?
  5. கமர்ஷியல் ஆசையா?
  6. கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா?
  7. தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா?
  8. பொது அறிவு வளர்ப்பதற்கா?