Posts Tagged ‘அரசியல்’
2023 , Authors , அரங்கு , அரசியல் , எழுத்தாளர்கள் , கருத்தியல் , கலாச்சாரம் , கலை , கூட்டம் , சங்கமம் , சமூகம் , சமூகவியல் , சரித்திரம் , சென்னை , சொற்பொழிவுகள் , ஜனவரி , திமுக , திராவிடம் , நூல்கள் , பண்பாடு , புத்தகங்கள் , பேச்சு , மதராஸ் , மார்கழி , முக ஸ்டாலின் , மொழி , விழாக்கள் , Books , Chennai , Culture , DMK , Festival , Jan , January , Literature , LitFest , Madras , MK Stalin , Read , Sangamam , Speakers , Tamil , Tradition , Writers
In Events , Lists , Magazines , Tamilnadu on மார்ச் 8, 2023 at 10:00 பிப
06.01.2023: முற்பகல் 12.00-1.00 திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் திரு. ஜெ.ஜெயரஞ்சன்
பிற்பகல் 2.00 3.00: திராவிடமும் தமிழ் சினிமாவும்: திரு.ராஜன்குறை
பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்: மொழி – இலக்கியம் – பண்பாடு:
திரு.வீ.அரசு
உரையாடல். திரு. க. காமராசன்
பிற்பகல் 4.00 5.00: கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் திரு. ம. ராஜேந்திரன்
07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாரதி காலத்து சென்னை திரு. ய. மணிகண்டன்
முற்பகல் 11.00 – 12.00: காலனியமும் ஆனந்தரங்கப் பிள்ளையும்: திரு. மு. ராஜேந்திரன்
பிற்பகல் 12.00 – 1.00: பண்பாட்டு அரங்கில் பெரியார்: திரு. அ. மார்க்ஸ்
பிற்பகல் 2.00 3.00: சிங்கப்பூர் இலக்கியம் அன்றும் & இன்றும்
திரு.நா. ஆண்டியப்பன்
திருமிகு கமலாதேவி அரவிந்தன்,
திருமிகு சூரியரத்னா
பிற்பகல் 3.00 – 4.00: திராவிடக் கருத்தியல் – அவமரியாதையை வெல்லும் சுயமரியாதை திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வன்
பிற்பகல் 4.00 5.00: பெண் ஏன் அடிமையானாள்? திரு. அ. அருள்மொழி
08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: ஜெயகாந்தனின் “சென்னை’: திரு. பாரதி கிருஷ்ணகுமார்
முற்பகல் 11.00 – 12.00: வட சென்னை:
திரு. தமிழ் மகன்,
திரு.ரெங்கையா முருகன்
பிற்பகல் 12.00 – 1.00: அறமெனப்படுவது யாதெனில் திரு. கரு. ஆறுமுகத்தமிழன்
பிற்பகல் 2.00 3.00: தமிழ் ஊடகங்களும் கருத்தியலும் திரு. ஆர். விஜயசங்கர்
பிற்பகல் 3.00 – 4.00: அயோத்திதாசரின் “சென்னை’ திரு.ரவிக்குமார் எம்.பி.,
பிற்பகல் 4.00 – 5.00: 1930களில் சென்னை: கலை இலக்கியச் சூழல்: திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Anna Hazare , அரசியல் , அல்லா , இந்திரா , இறைவர் , ஊழல் , ஒற்றுமை , கடவுள் , காங்கிரஸ் , கார்ட்டூன் , கேலிப்படம் , கோவில் , சிங் , சித்திரம் , சோனியா , தர்கா , தெய்வம் , நேரு , பட்டியல் , மன்மோகன் , முகம்மது , முஹமது , மொகமது , மொஹமது , ராஜீவ் , வித்தியாசம் , Congress , Delhi , India , Islam , Manmohan , Muslim , Politics , Rajiv , Religion , Sonia
In India , Lists , Religions on செப்ரெம்பர் 12, 2012 at 2:06 முப
நபிகள் நாயகம் (எ) முகம்மது
மன்மோகன் சிங்
1.
இறைத் தூதர்
சோனியாவின் தூதர்
2.
கார்ட்டூன் போட்டால் தொண்டர்கள் கழுத்தை வெட்டிவிடுவார்கள்
கார்ட்டூன் போட்டால் சட்டம் வழியாக கைது செய்வார்கள்
3.
13 மனைவிகள் வைத்துக் கொண்டவர்
14வது லோக்சபாவில் ஆட்சிபீடம் ஏறியவர்
4.
மெக்காவை புனிதத்தலமாக்கியவர்
10 ஜன்பத் இல்லத்தை மூலஸ்தானமாக வழிபடுபவர்
5.
பேசி இருக்கிறார்
பேசாமடந்தை என புகழ்பெற்றவர்
6.
பல தெய்வங்கள் வழிபாட்டை நிராகரித்து ஒரு தெய்வம் முன் ஒருங்கிணைத்தார்.
பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சரத் பவார், என் டி திவாரி என்று சிதறுண்ட காங்கிரசை ஒருவருக்கு முன் ஒருங்கிணைத்தார்.
7.
போரில் தோற்று இருக்கிறார்.
எந்தத் தேர்தலிலும் ஜெயித்தது இல்லை
8.
அப்பா, அம்மாவிற்கு பெரிய அளவில் அரசியலிலோ மதத்திலோ பின்புலம் கிடையாது.
நேரு குடும்பத்தவர் இல்லை
9.
எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் வென்றவர்.
லால் பகதூர் சாஸ்திரி மாதிரி கொலை ஆகாமல், தப்பித்துக் கொண்டே வருகிறார்
10.
அவர் கடவுளைக் கண்டது கற்பனை எனினும் நம்பவைத்தார்
அவர் ஆட்சியில் களங்கம் இல்லை என்பது கற்பனை எனினும் மாட்டிக் கொண்டார்
Action , Admin , Administrative , Anna Hazare , அத்வானி , அன்னா , அரசியல் , ஆக்கம் , ஆட்சி , ஆட்சியர் , இஆப , ஊக்கம் , ஊழல் , ஐஏஎஸ் , காங்கிரஸ் , காந்தி , காவல் , சட்டம் , செயல் , சோனியா , திட்டம் , பணம் , பாஜக , போலிஸ் , போலீஸ் , மசோதா , லஞ்சம் , லோக்பால் , ஹசாரே , ஹஜாரே , ஹஸாரே , Bribery , Bribes , Congress , Corruption , Fast , Gandhi , IAS , Kickbacks , Law , Lokpal , Officers , Philosophy , Reboot , Restart , Team
In India , Politics on செப்ரெம்பர் 6, 2012 at 9:48 பிப
Voting for “clean” candidates – நல்ல வேட்பாளருக்கு வாக்களித்தல்
Press for right to reject – வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையில் வாக்களித்தல்
Seek more powers for gram sabha – கிராமசபாவுக்கு அதிக அதிகாரம் கோருதல்
Citizens charter – குடிமக்கள் பட்டயம் தயார் செய்தல்
Removing delays in official work – அலுவலகப் பணிகளில் தாமதத்தை தவிர்த்தல்
Bringing police under “the control” of Lokpal and Lokayukta – போலீசையும் லோக்பால் அல்லது லோக்-ஆயுக்தா சட்டத்தின்கீழ் கொண்டு வருதல்
Anna , அண்ணா , அன்னா , அரசியல் , ஊழல் , ஒப்பீடு , ஒற்றுமை , சம்பந்தம் , சினிமா , சிம்பு , நடிகர் , லஞ்சம் , வித்தியாசங்கள் , வேற்றுமை , ஹசாரே , ஹஸாரே , BJP , Bribes , Chimbu , Congress , Corruption , Gandhi , Hazare , Kickbacks , Manmohan , Silambarasan , Simbu , Sonia , STR
In India , Lists , Movies , Tamilnadu on ஓகஸ்ட் 22, 2011 at 9:39 பிப
அண்ணா ஹசாரே
சிம்பு (எ) சிலம்பரசன்
1.
இளைஞர்களின் இலட்சிய நாயகர்
யூத்தை கவர்வதற்கு அரும்பாடுபடுகிறார்
2.
அருந்ததி ராய்களினால் அர்சிக்கப்படுபவர்
ரோசா வசந்த்களினால் அர்சிக்கப்பட்டவர்
3.
விருதுகளுக்காக வாழாதவர்
கலைமாமணி விருது வாங்கியவர்
4.
கொள்கைப் பிடிப்பு, ஊழலொழிப்பு விடாக்கண்டர் பட்டப்பெயர்
நயந்தாரா, ஐஸ்வர்யா தனுஷ் சர்ச்சைகளில் சிக்கியவர்
5.
மேற்குலக, ஆங்கில, அமெரிக்க மீடியாக்களில் அடிபடுகிறார்
ட்விட்டர் திண்ணையில் கூட பெரிதாக பேசப்படாதவர்
6.
கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், ராம்தேவ் பாபா உடன் காணப்படுகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா, சந்தானம், வெங்கட் பிரபு கூட்டணியில் தென்படுபவர்
7.
பாரதீய ஜனதா கட்சி ஆள் என்று அடைக்கமுயன்றாலும் காங்கிரஸ் பக்கம் சாய்வாரா? என்று தெரியவில்லை
அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொண்டாலும், இளைய தளபதி விஜய் தொண்டனாகவும் மாறுவார்
8.
திருமணம் ஆகவில்லை
கிம் கர்டாஷியன் போல் திருமணத்தை ஜெயா டிவிக்கோ சன் தொலைக்காட்சிக்கோ விற்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது
9.
ஆளுங்கட்சிக்கு ஹிட் மேல் ஹிட் கொடுக்கிறார்
அவ்வப்போது சறுக்கினாலும், விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் என்று தொடர் ஹிட் நாயகர்
10.
அடுத்த காந்தி என்கிறார்கள்
லிட்டில் சூப்பர் ஸ்டார் – அடுத்த ரஜினியா? கமலா?
அரசியல் , இலவசக்க்கொத்தனார் , கிண்டல் , குறுஞ்செய்தி , ட்விட்டர் , தமிளன் , தமிழன் , தமிழ் , தமிழ்நாடு , நக்கல் , பகிடி , பட்டியல் , வாழ்க்கை , Mayavarathaan , SMS , Tamilan , Thamil , Thamizhan
In Blogs , Life , Lists , Tamilnadu on ஜூலை 15, 2010 at 4:32 முப
ட்விட்டரில் மாயவரத்தனார் எழுதிய ‘இவன் தான் தமிழன்’ குறுஞ்செய்திகளில் இருந்து சில:
1. ’தலை சுத்துதுன்னு’ சொன்னா, ‘அஜீத்தா?’ அப்படீன்னோ, ‘ஹை..முதுகை பார்க்கலாமே’ அப்படீன்னோ அச்சுபிச்சு ஜோக் (?!) அடிக்கிறவன் தான் #தமிளன்
2. யாருனாச்சும் கேமரா வெச்சிருந்தா தான் போட்டோ எடுத்து தர்றாதா சொல்லி தலையை பாதி கட் பண்ணி போட்டோ எடுக்கிறவன் தான் #தமிளன்
3. பிட்ஸா கண்டு பிடிச்சதே நம்மூரு ஊத்தப்பத்தை வெச்சு தான் அப்படீன்னு உலக மகா உண்மையை அடிச்சு விடுறவன் தான் #தமிளன்
4. பர்கரை வாங்கி ரெண்டு பன்னையும் தனித்தனியா பிச்சு சாப்பிடுறவன் தான் #தமிளன்
5. பக்கத்து தெருவுக்கு சும்மா போவுறதுக்கு கூட முதுகில ஒரு பொதி மூட்டையை மாட்டிக்கிட்டு கிளம்புறவன் தான் #தமிளன்
6. டொக்கு செல்போனிலயும் 4 ஜிபி மெமரி இருக்குறதா கதை உடுறவன் தான் #தமிளன்
7. கூட்டமான எலக்ட்ரிக் ட்ரெயினிலே நட்ட நடு செண்டரில நின்னு செல்போனிலே உச்சபச்ச டெசிபலில் பேசுபவன் தான் #தமிளன்
8. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ எல்லாம் ஒரு பஞ்ச் டயலாக்குன்னு இன்னமும் நம்பிட்டிருக்கவன் #தமிளன்
9. பாண்டிச்சேரிக்கு போறோம்ன்னு சொன்னாலே பாட்டிலுக்கு தான் அப்படீன்னு நெனச்சு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிறவன் தான் #தமிளன்
10. எந்த ஊர் பேர் சொன்னாலும் அந்த ஊர் ஸ்பெஷல் சாப்பாட்டைப் பத்தி பேசறவன் #தமிளன் – பெனாத்தல்
11. ரவுடியா இருந்தாலும் நடிகரா இருந்தாலும் ‘அடைமொழி’யோட தான் சொல்லுவேன்னு அடம் புடிக்கிறவன் தான் #தமிளன்
12. சன் டி.வி.யில ஒரு நியூஸ் பாத்திட்டு அதையே ஜெயா, கலைஞர், விஜய், டி.டி. எல்லாத்திலயும் மறுபடியும் பாக்குறவன் #தமிளன்
13. இளையராஜா காலத்தில எம்.எஸ்.வி.யையும், ரஹ்மான் காலத்துல இளையராஜாவையும் புகழ்ந்து பேசுறவன் #தமிளன்
14. டூத் பேஸ்ட் முடிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சும் ஏறி நின்னு மிதிச்சு உள்ள இருக்கிறதை உபயோக்கிறவன் #தமிளன்
15. பக்கத்து வீட்டுல இடியே விழுந்தாலும் கண்டுக்காம சீரியல் பாக்குறவன் #தமிளன்
16. டிவிட்டர் ஃப்ரீன்னா இப்படி எதையாவது சொல்லி ரிவிட் அடிக்கிறவன் #தமிழன். – ஹரன்பிரசன்னா
17. ’இந்த மாதிரி ஒரு சம்மரை என் லைப் டைம்ல பாத்ததில்லை’ன்னு ஒவ்வொரு வருஷமும் சொல்றவன் #தமிளன்
18. ஆனந்த விகடனில் தனது ட்விட் வராவிட்டால், ஆள் தெரியாததாலோ கவனிக்காததாலோ வராமல் போச்சுன்னு ட்விட்டறவன் தான் #தமிளன் – ஸ்னாப்ஜட்ஜ்
19. செஃல்ப் டேமேஜ் பண்ணிக்கிட்டாலும் சிரிச்சுக்கிட்டே யாருக்கோ மாதிரி நினைச்சுகிறவன் #தமிளன் – ஆயில்யன்
20. தன் மூஞ்சியை கண்ணாடில பார்க்காம விஜயகாந்த்தையும் T.Rரையும் கிண்டலடித்துக் கொண்டிருப்பவன் #தமிளன் – ஜிகார்த்தி1
21. தல தல என்று சொல்லியே அந்த தலயின் காலை வாருகின்றவன் #தமிளன் – மு75
22. பொழுதுபோகலன்னு தமிழனையே கிண்டல் பண்ணி பேசுறவன் தான் உண்மையான தமிழன் #தமிளன் – கார்க்கி
23. ஆக்ஸ்வலி என்னாது இது? இதை எப்படி செய்வாங்க என்று அரிசியை பார்த்து கேட்பவன் தான் தமிழன் # தமிளன் – குசும்புஒன்லி
24. 53 வயசான ஒருத்தரை இன்னமும் ‘இளைய’ திலகம் எண்டு அழைக்கிறவன் #தமிளன் – kangon
25. விடை தெரிந்தே கேள்வி கேட்கும் நீர்தான் உண்மையான #தமிளன் – கேஸ்வாமி
26. அமெரிக்க பொருளாதாரத்தை நினைத்து கவலை கொள்பவன் #தமிளன் – mu75
27. அடுத்தவன் தப்பை அருவாமணையா திருத்திகிட்டிருக்கறவன் # தமிளன் – ஜெயஸ்ரீ
28. தன் பெருமையே பேசிக்கிட்டு திரியறவன். #தமிளன் – Jsrigovind
29. அடுத்தவன் எழுதறதை சுட்டு, தானே எழுதியதாப் போடறவன் தமிழன் – ஸ்னாப்ஜட்ஜ்
30. டீ சர்ட்டும் முக்கால் டவுசரும் போட்டுக்கிட்டு கிராமத்து கோயிலில் காட் & கல்ச்சர் பத்தி டிபைனுறவன் #தமிளன் – aayilyan
31. மூணு பேரு சேர்ந்தா நாலு சங்கம் ஆரம்பிக்கறவன் #தமிளன் – ஸ்ரீகாந்த்
32. பறவை முனியம்மான்ற பேர் வெச்சிருக்காங்க. றெக்கையே இல்லையேன்னு ஆராய்ச்சி பண்ணுறவன் #தமிளன்
33. திருவள்ளுவர்தான் தெய்வம்னு சொல்லிக்கிட்டு, ஒரு திருக்குறளை கூட உருப்படியா சொல்லத் தெரியாதவன் #தமிளன் – ஹரன் பிரசன்னா
34. பாரின் போய்ட்டு வந்தா எப்பவும் அரைடிராயரோட கையில மினிமினரல் வாட்டர் பாட்டிலோட சுத்தறவன் #தமிளன் – அதிஷா
35. ஒருத்தன் ஒண்ணு சொன்னா இதை ஏற்கெனவே இன்னார் இங்க சொல்லிட்டாங்கன்னு உடனே ஓடிவர்றவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா
36. ஜப்பான்ல பொட்டிக்கடைக்காரனுக்கு இங்கிலீஷே தெரிலன்னு கோபப்படுறவன் தான் #தமிளன்
37. ஊர்க்காரங்களைப் பார்த்ததும் யார் ஜாதி என்னான்னு நேரடியா கேக்காம கண்டுபிடிக்கிறது எப்படின்னு யோசிக்கிறவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா
ஃபினிஷிங் டச்:
அடுத்தவன் நம்மை எதாவது சொல்லிடப் போறானேன்னு அவனுக்கு முன்னால் தானே சொல்லறவந்தான் #தமிளன் – இலவசம்
கொசுறு:
தான் என்னவோ வேற்றுகிரக ஆசாமி போல இப்படி ட்வீட்டுறவன் தான் #தமிளன்
Arjun , அரசியல் , சினிமா , தேர்தல் , படம் , Bribes , Cinema , CM , Corruption , Elections , Films , India , Issues , kalainjar , Kamal , Karunanidhi , Kickbacks , Maniratnam , MGR , Minister , MLA , Movies , MP , PM , Politics , Polls , Rajini , Satire , Satyaraj , Shankar , Sivaji , Tamilnadu , TN
In Movies , Politics , Tamilnadu on மார்ச் 19, 2009 at 11:34 பிப
நன்றி : ட்விட்டர் தமிழ்ப்படை
முகமது பின் துக்ளக் – சோ
ஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்
கண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி
ஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்
அக்ராஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்
தியாக பூமி – கல்கி
சிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி
நிஜங்கள்
தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்
மக்களாட்சி – ஆர் கே செல்வமணி
முதல்வன் – ஷங்கர்
இருவர் – மணிரத்னம்
அச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்
தேசிய கீதம் – சேரன்
அமைதிப்படை – சத்யராஜ்
சத்யா – கமல்ஹாசன்
என் உயிர்த் தோழன் – பாரதிராஜா
பாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி
அருணாச்சலம் – ரஜினி
மகாநடிகன் – சத்யராஜ்
அரசியல் , இணையம் , ஐடியா , தமிழ்நாடு , தமிழ்ப்பதிவுகள் , தேர்தல் , வலை , Blogs , Concepts , Elections , Ideas , New , Politics , Polls , Social , Tamil , Thoughts , Ventures
In India , Politics , Tamilnadu on மார்ச் 18, 2009 at 3:11 பிப
தேர்தல் குறித்து நான் அறிந்தவரைக்கும் நான்கு பதிவுகள்தான் தேறுகிறது.
இப்போது புதிய பதிவு தொடங்குவதற்கான ஐடியா:
தினம் ஒரு வினா: அன்றைய சூடான பிரச்சினையை கேள்வியாக மாற்றி, இரு தரப்பு விவாதத்தையும் இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லி, வாசகரை வாக்களிக்க சொல்வது. மாலன் இதை செய்கிறார் என்றாலும் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இதைத் தொடரவில்லை.
புகைப்படமும் செய்தித் தொகுப்பும்: செய்திகளுக்கு கூகிள் , தினமலர், யாஹூ, எம்.எஸ்.என் எல்லாம் இருக்கிறது. நிழற்படம் எளிதில் கிடைப்பதில்லை. தினசரி நிகழ்வுகளை பருந்துப் பார்வை செய்தித் தொகுப்பாக்கி, கூடவே முக்கியமான, அரிதான ஒளிக்கோர்வைகளை சொடுப்பது.
குசும்பு கருத்து கார்ட்டூன்: திருமாவும் கருணாநிதியும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? விஜய்காந்த்தும் ரஜினியும் சேர்ந்திருக்கும் பழைய படத்திற்கு உங்கள் எண்ணச்சிறகு எப்படி பறக்கும்? குசும்பர் செய்கிறார் என்றாலும், எக்ஸ்க்லூசிவாக இந்திய தேர்தல் களத்திற்கு செய்வது.
அன்றும் இன்றும்; சொன்னார்கள்; துக்கடா : இன்றைக்கு ஒரு அறிக்கை விடுவது; அது என்றோ சொன்னதற்கு நேர் எதிராக இருப்பது அரசியல் லட்சணம். அந்த மாதிரி முரண்களை முன்னிறுத்துவது. பொருத்தமான மேற்கோள்களுக்கு, பதிலாக கருத்துக்கணை ரெண்டணா வீசுவது.
எண்ணும் புள்ளிவிவரமும் : ‘ரமணா’ விஜய்காந்த் மாதிரி ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு வேட்பாளருக்கும், அனைத்து கட்சிகளுக்கும் பின்புல தகவல்களை சுவையாகக் கொடுப்பது. எத்தனை முறை குற்றஞ்சாட்டப்பட்டார்? எவ்வளவு தடவை தொகுதிக்கு விசிட் அடித்தார்? வாக்கு விகிதாச்சாரம்?
பேட்டி, நேர்காணல், வல்லுநர் பார்வை : விடுதலை சிறுத்தை இரவிக்குமார் துவங்கி பா.ஜ.க. பிரதம வேட்பாளர் அத்வானி வரை வலையில் வசிப்போரே. அவர்களிடம் இமெயில் பேச்சுவார்த்தை நடத்துவது. முன்னாள் எம்பி, அதிருப்தி எம்.எல்.ஏ என்று வலை வீசி சிறப்புக் கட்டுரை வாங்குவது; தமிழிணைய தாதாக்களிடம் கிடுக்கிப் பிடி இன்டெர்வ்யூ பெறுவது.
தேர்தல் அறிக்கை ஆராய்ச்சி, ஆய்வு : “கெட்டதெல்லாம் கெட்டது. இலவச டிவி கிழவனைத் தூக்கி மனையில் வை ” என்கிற மாதிரி 55 கெட்ட விவாத துவக்க புள்ளிகளை விக்கி பட்டியலிட்டிருக்கிறது. மலிவு அரசியலை விட்டுவிட்டு சமூகம் எதிர்நோக்கும் விஷயங்களில் கட்சி நிலைப்பாடுகளையும் வேட்பாளரின் பாராளுமன்ற நடவடிக்கையையும் அரசின் செயல்பாடுகளையும் அலசுவது.
ஆங்கில ஊடகம், மாற்று பத்திரிகை, பிற தினசரி : Covert, Tehelka போன்ற பத்திரிகைகளின் தலையங்கம் என்ன? டெலிகிராஃப், ஸ்டேட்ஸ்மேன், TOI, HT என்ன சொல்கிறது? ஈநாடு, ஆனந்த பஜார் பத்ரிகாவில் என்ன முக்கியமான மேட்டர்? அவுட்லுக், சன்டே இந்தியன், வீக், இந்தியா டுடே எல்லாம் என்ன எழுதி உள்ளது?
தகவல் சரிபார்த்தல்; பிழைபொறுக்கி : நம் தலைவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது கஷ்டம். இலவச அரிசிக்கு எவ்வளவு செல்வாயிற்று? யார் காலத்தில் மின்சாரம் எவ்வளவு கட் ஆனது? எப்போது எந்த நிலையை எவர் ஆதரித்தார்? சொன்னது சரிதானா என்று பூதக்கண்ணாடி வைத்து குற்றங்கண்டுபிடிப்பது.
யூ ட்யூப், ஃப்ளிக்கர், வலைப்பதிவு தொகுப்பான் : எல்லா சோஷியல் மீடியாவிடமிருந்தும் பொருத்தமான இடுகையை ஒத்த தலைப்பில் சேர்த்துக் கொடுப்பது. வேட்பாளரை நேரில் சந்தித்து விழியமோ, புகைப்படமோ வலையேற்றும் கலையைக் கற்றுத் தருவது.
கொசுறு – தமிழ் ஆனியன் : ஆங்கில ஆனியன் பார்த்திருப்பீர். லக்கிலுக் போன்றோர் அவ்வப்போது எழுதும் ஒன்றரை பக்க நாளேடு படித்திருப்போம். அன்றாட செய்திகளை நக்கலெடுப்பதே முழு நேரத் தொழில். புகைப்படங்களை வெட்டி ஒட்டுதல், போலி பேட்டி, நிஜ அறிக்கை போன்றே தோன்றும் பகிடி, கிட்டத்தட்ட நம்பிவிடக் கூடிய கிண்டல் உல்டா நிறைப்பது.
ADMK , Assets , Attorneys , அரசியல் , எம்பி , தேர்தல் , வாக்காளர் , வேட்பாளர் , BJP , Congress , Courts , Criminals , Criteria , Daughter , Delhi , DMK , Doctor , Elections , Eligibility , Graduation , Kin , Kith , Lawyers , MLA , MP , Nexus , PMK , Politics , Polls , Relations , Relatives , Responsibility , Son , TN
In India , Lists , Politics on மார்ச் 10, 2009 at 9:09 பிப
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி
முன்னாள் (அ) இன்னாள் மந்திரி யின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்
நாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகை யாக பதவி உயர்வு பெற்றவர்.
பதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.
ஆளும் எதிர்க்கட்சி யில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதி க் கட்சி ஆரம்பித்திருப்பவர்.
சமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி
மன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர் /எழுத்தாளர்/இயக்குநர் .
கட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல் .
ஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகரா ய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.
துணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)
10 , அரசாங்கம் , அரசியல் , அரசு , இந்தியா , ஊழல் , கணிப்பு , செய்தி , டாப் , தமிழ்நாடு , தலை , தினமலர் , பத்து , Corruption , Economy , Finance , Govt , Kickbacks , Money , Police , Public , Service , Top 10
In India , Life , Lists , Politics , Technology on ஜனவரி 28, 2009 at 7:27 பிப
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:
ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
எந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).
போலீஸ் 215,
வீட்டுவசதி வாரியம் 157,
பத்திரப்பதிவு 124,
மின்சாரம் 105,
மருத்துவம் 87,
வங்கி 83,
ரேஷன் 45,
வனத்துறை 24,
குடிநீர் 24,
பள்ளிக்கூட கல்வி 12,
கிராம வேலை வாய்ப்பு 7