அருமைத்தம்பி ஆருயிர் தோழர் டைனோபாய் நடத்தும் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம் கண்டிருக்கிறது. ஏன்?
- அவர் அளவுக்கு அதிகமாக வளர்ந்துவிட்டார். அதாவது நிறைய நண்பர்களைப் பெற்று புகழ்பெற்ற மனிதராக விளங்கியதால் ஃபேஸ்புக் வட்டத்தில் பொறாமைக்காரர்களின் கோள்மூட்டல், இந்த பின்விளைவைப் பெற்றுத்தந்தது.
- டைனோ என்பது அவர் பெயர் அல்ல. அதற்கு பதில் லியோ கர்கா என்பது போல் நம்பகமான புனைப்பெயர் கொண்டிருக்கவில்லை.
- உண்மையான பெயரிலியாக அவர் விளங்கவில்லை. பல சந்திப்புகளுக்கு வந்து முகம் காட்டிவிட்டார்.
- முகமிலியாக இருப்பவருக்கான உண்மையான இலட்சணங்கள் அவருக்கு இல்லை: பலான கதைகள் எழுதவில்லை; கிசுகிசுக்களைப் பரப்புவதில் மட்டுமே ஈடுபடவில்லை; புறம் கூறி பிரச்சினைகளை பூதாகாரமாக்குவதிலேயே நேரம் செலவிடவில்லை
- லிபரல் ரிபப்ளிகனாகக் காட்டிக் கொண்டதால், டெமொகிராட்டுகளின் சதிகளில் இதுவும் ஒன்று.
- அமெரிக்கத் தமிழர்களின் ஒரே சங்கமமான ஃபெட்னாவிற்கு எதிராகப் பேசினால் இதுதான் கதி.
- என்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னபோதே இதை எதிர்பார்த்தோம்.
- அங்கே முடக்கினால் என்ன… ட்விட்டரில் இருக்கிறோமே என்னும் மெத்தனம்
- அவர் தமிழ் வெறியர்; தமிழர் தலைவராக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமே கணக்கு வைத்திருக்கும் பார்ப்பன அடிவருடி; சுந்தர் பிச்சையின் ஆதரவாளர்
- All Good Things Must Come to an End என்று நினைக்காமல், வேறு பெயரில் அதே முகபுத்தகத்தில் உலவுவதால் வந்த வினை.