இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டுத் தியாகிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த தமிழக தியாகிகள் வெளியான தமிழ்நாட்டுத் தியாகிகள் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்குப் படங்களில் எந்தத் திரைப்படங்கள் கர்னாடக இசையையோ சாஸ்திரீய சங்கீதத்தையோ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன? அவற்றில் எந்த சினிமாக்கள் இன்றும் உங்களின் மனதில் நிலைத்திருக்கின்றன? ஹிந்துஸ்தானி என்றோ ராப் பாடல் என்றோ மியூசிகல் என்றோ எதைச் சொல்வீர்கள்?
எந்த வரிசையிலும் இல்லை.
தில்லானா மோகனாம்பாள் (1968)
தியாகய்யா (1946) – தெலுங்கு
சர்வம் தாள மயம்
சங்கராபரணம் (శంకరాభరణం) – தெலுங்கு
Rock On!! (2008) – ஹிந்தி
Gully Boy (2019) – ஹிந்தி
சுவாதித் திருநாள் (1987) – மலையாளம்
கொஞ்சும் சலங்கை (1962)
அருணகிரிநாதர் (1964)
நந்தனார் (1942, 1935)
மீரா (1945, 1979)
Baiju Bawra (1952)
இசையை சும்மா ஊறுகாய் மாதிரி வைத்துக் கொண்டு தமிழ்ப்பட மசாலா ஆன காதல், அம்மா செண்டிமெண்ட், சண்டை எல்லாம் வைத்து எடுக்கப்பட்ட ஜனரஞ்சகப் படங்கள்:
சுனாமி மாதிரி பேண்டமிக் ( பாண்டமிக் எது சரி ? ) தமிழ் வார்த்தையாகி இரண்டு வாரம் ஆகிறது. இந்த கொரோனா உலகத்தையே ஒரு புதிய ரீசெட் பட்டன் கொண்டு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் உலகம் எப்படி மாறப் போகிறது என்று தெரியவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது போன்ற கிளிஷேவை கடந்து கொஞ்சம் யோசித்தால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
2. வெங்கடேஷ்:புரட்டிப் போடும் கரோனா – நேசமுடன்: கரோனா கொள்ளைநோயில் இருந்து தப்பிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் ஐந்தாவது நாள் இன்று. இதற்குள் எதிர்பாராத இரண்டு மூன்று விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரு சின்ன நகர்வு தான். வீட்டுக்குள் அனைவரும் பத்…
3. ஜெயமோகன்:
கொரோனோ: ஒரு சினிமாச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மலையாளம். அங்கிருந்து அழைத்தார்கள்.
வைரஸ் அரசியல்: கொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்…
வைரஸ் அரசியல்-3: அன்புள்ள ஜெ, வைரஸ் அரசியல் படித்தேன். என் பார்வையில் கேரளம் செய்வதுதான் சரியெனப்படுகிறது.
கொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல் | Pa Raghavan: இதற்கு முன்பும் இத்தகைய வைரஸ்கள் சில அச்சமூட்டியிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் நாம் நிறையப் பேசி அஞ்சியிருக்கிறோம். ஆனால் இந்தளவு அல்ல. இவ்வளவு உக்கிரமாக அல்ல. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மதுச்சாலைகளுக்கு விடுமுறை, வழிபாட்டுத் தலங்கள், கூட்டம் சேரும் திருமணம் போன்ற சம்பவங்களின் நிகழிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு, தொடர் சுகாதாரப் பிரசாரங்கள், தொலைபேசி வழி எச்சரிக்கை – இம்முறை சந்தேகமின்றி அச்சமூட்டுவதாகவே உள்ளது. வீட்டில் …
கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை: டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் – “ நாளைக்கே உலகம் அழிஞ்ச…
இட்ட உறவு ஏனாதிக்கூட்டம்; வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம். கொத்து எதிர்ப்புத்திறன் கொரொனாவைத் தடுக்குமா? கொஞ்சம் கொஞ்சமாக நோய்த் தடுப்பாற்றலைக் கொண்டு வருவது ஒரு வழி. மொத்தமாக எல்லோரையும் பழக விட்டு அனைவரையும் நோய்க்குட்படாமல் வைப்பது இன்னொரு வழி:
விளையாட்டு வினையில் முடியும். இங்கொருவர் சும்மானாச்சிக்கும் காய்கறிகள் மீது தும்மி இருக்கிறார். அவருக்கு கொரோனா இருக்கிறதா/இல்லையா என்று சோதித்து, அந்த முடிவுகள் வர குறைந்தது 10/12 நாள்களாவது ஆகி விடும். அது வரை காய்கறிகளை சாப்பிடுவோரை ஆபத்துக்குள்ளாக்கலாமா? பழமுதிர்ச்சோலை அங்காடியில் இருந்து அனைத்தும காய்கனிகளும் தூக்கி எறியப்பட்டது. பகிடியாகத் தும்மியவர் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் மீண்டும் வா… ஒரு முறை வந்தவருக்கு மீண்டும் கொரொனாவைரஸ் வராது என்று சொன்னார்கள். இப்பொழுது முதல் முறை வந்து குணமாக்கப்பட்டவருக்கு மீண்டும் கொரோனாவைரஸ் வந்திருக்கிறது. இது இன்னொரு தோற்றமா என்பதை ஆராய வேண்டும். அப்படி மற்றுமொரு திரிபு என்றால் மீண்டும் தனித்திருக்கச் சொல்வார்களோ?
என்ன கொடுமை இது சார் தருணம். அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். மெக்சிகோவில் இருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவிற்குள் வருபவர்களைத் தடுப்பதற்காக பெரிய சுவரை அமெரிக்க எல்லையில் கட்டினார் டொனால்ட் டிரம்ப். இப்பொழுது கொரோனாவைரஸ் தலைவிரித்தாடும் அண்டை நாட்டில் இருந்து எங்களுக்கும் தொற்று வியாதியைப் பரப்பாதீர்கள் என்கிறது மெக்சிகோ.
இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு. காய்கறிகளை நன்றாக அலம்பி உண்ணுங்கள் என்கிறார். எந்தப் பொருளை வெளியில் இருந்து வாங்கி வந்தாலும் எவ்வாறு தொற்றுயிரி இடமிருந்து பாதுகாப்பது என்பதையும் சொல்கிறார். கொரொனோவைரஸ் காற்றில் மூன்று மணி நேரம் தன்னைத் தொடுவோரை பீடிக்க தயாராக இருக்கும். அட்டைப்பெட்டிகளில் ஒரு மணி நேரம் உயிர்ப்போடு இருக்கும். பிளாஸ்டிக் பொருள்களிலும் உலோகத்திலும் மூன்று நாள் வரை நச்சுயிர் தாக்குப் பிடிக்கும். எப்படி விரட்டுவது? பாருங்கள்:
டிம் அர்பன் நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டியவர். விஷயத்தை எடுத்தால் எளிமையாகவும் ஆழமாகவும் அருமையாகவும் விளக்குபவர். மனதில் பதியும்படி எண்ணங்களை முன்வைக்கிறார்.
SARS-CoV-2 : grain of sand :: grain of sand : house
ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே. கஜக்ஸ்தான் நாட்டில் கோதுமையைப் பதுக்குகிறார்கள். செர்பியா சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினார்கள்.
இட்ட குடியும் கெட்டது; ஏற்ற குடியும் கெட்டது. லண்டனில் இருக்கும் வீடற்றோருக்கு ஹோட்டல்களில் அறை ஒதுக்கப்பட்டது. இல்லமற்ற அனாதரவோர் சாலைகளிலும் பூங்காக்களிலும் இருப்பதால் கொரொனோவைரஸ் பரவும் அபாயம் அதிகம் ஆகிறது. அதைத் தடுப்பதற்காக அவர்களுக்கு விடுதிகளில் இடம் கொடுத்திருக்கிறது இங்கிலாந்து.
ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம். ஒரு தடவை அடங்கிய நோய் மீண்டும் திரும்ப வருமா? சரித்திரம் என்ன சொல்கிறது? 1918ல் அமெரிக்காவைத் தாக்கிய ஃப்ளூ ஜுரத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எப்பொழுது எந்த நகரங்களில் நுண்ணுயிரி அதிரடியாகத் திரும்பத் தாக்கியது என்பதை விவரிக்கும் நேஷனல் ஜியாகிரபி பதிவு