முந்தைய பதிவு: அ – பத்து பழமொழிகள்

- ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
- ஆயிரம் அரைக்காசு
- ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா?
- ஆயிரம் பொன் பெற்ற குதிரையானாலும் சவுக்கடி வேண்டும்.
- ஆயிரம் வித்தை கற்றாலும் உலகத்தில் ஆடம்பரம் வேண்டும்.
- ஆழ அமுக்கினாலும் நாழி நானாழி கொள்ளாது.
- ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய்.
- ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அருச்சுனன் மனைவியரை எண்ண முடியாது.
- ஆற்றோடே போனாலும் போவேன்; தெப்பக்காரனுக்குக் கூலி கொடுக்க மாட்டேன் என்றானாம்.
- ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவு மேல்.
- ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை பூனையைத் தரையில் இழுக்குமா?