Snapjudge

தம்பி டைனோ செய்த பத்து தவறுகள்

In Blogs, Internet on செப்ரெம்பர் 5, 2015 at 3:50 பிப

அருமைத்தம்பி ஆருயிர் தோழர் டைனோபாய் நடத்தும் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம் கண்டிருக்கிறது. ஏன்?

  1. அவர் அளவுக்கு அதிகமாக வளர்ந்துவிட்டார். அதாவது நிறைய நண்பர்களைப் பெற்று புகழ்பெற்ற மனிதராக விளங்கியதால் ஃபேஸ்புக் வட்டத்தில் பொறாமைக்காரர்களின் கோள்மூட்டல், இந்த பின்விளைவைப் பெற்றுத்தந்தது.
  2. டைனோ என்பது அவர் பெயர் அல்ல. அதற்கு பதில் லியோ கர்கா என்பது போல் நம்பகமான புனைப்பெயர் கொண்டிருக்கவில்லை.
  3. உண்மையான பெயரிலியாக அவர் விளங்கவில்லை. பல சந்திப்புகளுக்கு வந்து முகம் காட்டிவிட்டார்.
  4. முகமிலியாக இருப்பவருக்கான உண்மையான இலட்சணங்கள் அவருக்கு இல்லை: பலான கதைகள் எழுதவில்லை; கிசுகிசுக்களைப் பரப்புவதில் மட்டுமே ஈடுபடவில்லை; புறம் கூறி பிரச்சினைகளை பூதாகாரமாக்குவதிலேயே நேரம் செலவிடவில்லை
  5. லிபரல் ரிபப்ளிகனாகக் காட்டிக் கொண்டதால், டெமொகிராட்டுகளின் சதிகளில் இதுவும் ஒன்று.
  6. அமெரிக்கத் தமிழர்களின் ஒரே சங்கமமான ஃபெட்னாவிற்கு எதிராகப் பேசினால் இதுதான் கதி.
  7. என்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னபோதே இதை எதிர்பார்த்தோம்.
  8. அங்கே முடக்கினால் என்ன… ட்விட்டரில் இருக்கிறோமே என்னும் மெத்தனம்
  9. அவர் தமிழ் வெறியர்; தமிழர் தலைவராக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமே கணக்கு வைத்திருக்கும் பார்ப்பன அடிவருடி; சுந்தர் பிச்சையின் ஆதரவாளர்
  10. All Good Things Must Come to an End என்று நினைக்காமல், வேறு பெயரில் அதே முகபுத்தகத்தில் உலவுவதால் வந்த வினை.

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: