இன்றைய தேதியில் யார் ஹாட்?
எவருடைய புத்தகங்கள் சுடச்சுட விற்கின்றன?
ஆயிரம் எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள என் வீட்டில் விருந்தினர் வந்தால், எவை விரும்பி கேட்கப்படுகின்றன?
பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு அயல்நாடு போய்விட்டாலும், பார்ட்டிகளிலும் சந்திப்புகளிலும் எந்த ஆசிரியரின் ஆக்கங்கள் அதிகம் பேசப்படுகின்றன?
புத்தக விற்பனையாளர் பத்ரியை கேட்காமல் விமரிசகர் ஜெயமோகனிடம் சர்வே போடும் இட்லி வடை சரிபார்க்காமல் சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி மதிப்பிடாமல் சாமானியனின் பட்டியல்:
எழுதாவிட்டாலும் இன்றும் ஆயிரம் பொன்
- சுஜாதா
- லஷ்மி
- கல்கி
- அறிஞர் அண்ணா
- தமிழ்வாணன்
- தி. ஜானகிராமன்
- ஜெயகாந்தன்
- கண்ணதாசன்
- சாண்டில்யன்
- பாரதியார்
புதியது லாண்டிரி குறிப்பாகவே இருந்தாலும் ஆயிரம் பொன்
- பாலகுமாரன்
- மதன்
- வைரமுத்து
- சுகி சிவம்
- ரமணிசந்திரன்
- ஜெயமோகன்
- ஜக்கி வாசுதேவ்
- எஸ் ராமகிருஷ்ணன்
- மல்லிகா பத்ரிநாத்
- சாரு நிவேதிதா
உங்க ஜோசியத்தில் யாருண்டு?
என்னை இப்படி அசாமானியன் ஆக்கிவிட்டீர்களே! 🙂
ஆனாலும் லக்ஷ்மி, தமிழ்வாணன், அண்ணாதுரை எல்லாம் லிஸ்டிலா? ரொம்ப அநியாயம் சார். அப்படி என்ன அண்ணாதுரை புத்தகம் உங்கள் வீட்டுக்கு வந்தவர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது?
திராவிடர் கழகப் பற்றாளர் வந்தால் அவருக்கு கதை, இலக்கியம் எல்லாம் உவப்பில்லை. அண்ணாவின் சொற்பொழிவுகள் முழுவதும் இருக்கின்றன. அவை மட்டுமே கவர்கின்றன. (கலைஞர் உரை இல்லையா என்பது கொசுறு கேள்வி 🙂
அருமையான லிஸ்ட் பாலா, ரசித்தேன்!
good information. tanx…..