அண்ணா ஹசாரே |
சிம்பு (எ) சிலம்பரசன் |
|
1. | இளைஞர்களின் இலட்சிய நாயகர் | யூத்தை கவர்வதற்கு அரும்பாடுபடுகிறார் |
2. | அருந்ததி ராய்களினால் அர்சிக்கப்படுபவர் | ரோசா வசந்த்களினால் அர்சிக்கப்பட்டவர் |
3. | விருதுகளுக்காக வாழாதவர் | கலைமாமணி விருது வாங்கியவர் |
4. | கொள்கைப் பிடிப்பு, ஊழலொழிப்பு விடாக்கண்டர் பட்டப்பெயர் | நயந்தாரா, ஐஸ்வர்யா தனுஷ் சர்ச்சைகளில் சிக்கியவர் |
5. | மேற்குலக, ஆங்கில, அமெரிக்க மீடியாக்களில் அடிபடுகிறார் | ட்விட்டர் திண்ணையில் கூட பெரிதாக பேசப்படாதவர் |
6. | கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், ராம்தேவ் பாபா உடன் காணப்படுகிறார். | யுவன் ஷங்கர் ராஜா, சந்தானம், வெங்கட் பிரபு கூட்டணியில் தென்படுபவர் |
7. | பாரதீய ஜனதா கட்சி ஆள் என்று அடைக்கமுயன்றாலும் காங்கிரஸ் பக்கம் சாய்வாரா? என்று தெரியவில்லை | அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொண்டாலும், இளைய தளபதி விஜய் தொண்டனாகவும் மாறுவார் |
8. | திருமணம் ஆகவில்லை | கிம் கர்டாஷியன் போல் திருமணத்தை ஜெயா டிவிக்கோ சன் தொலைக்காட்சிக்கோ விற்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது |
9. | ஆளுங்கட்சிக்கு ஹிட் மேல் ஹிட் கொடுக்கிறார் | அவ்வப்போது சறுக்கினாலும், விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் என்று தொடர் ஹிட் நாயகர் |
10. | அடுத்த காந்தி என்கிறார்கள் | லிட்டில் சூப்பர் ஸ்டார் – அடுத்த ரஜினியா? கமலா? |
SuperStar யாருன்னு முடிவு பண்ணிடுங்க. அப்புறமா கடைசி கேள்வி வெச்சிக்கலாம்