Snapjudge

Top 10 woes of Tamil Writers & Book Authors

In Life, Lists, Tamilnadu on பிப்ரவரி 15, 2011 at 3:23 முப

ஜெயமோகனின் அறம் சிறுகதை புனைவு; இது எழுத்தாளர்கள் படும் நிஜ சிரமங்கள்; அசல் கஷ்டங்கள்; கொஞ்சம் கூட கற்பனை கலக்காமல் படைப்பாளியின் பிரச்சினைகளும் புத்தக ஆசிரியரின் அசௌகரியங்களும்:

  1. ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வது
  2. கதையோ, புனைவோ கொடுத்தால், அதைத் தங்களின் ஸ்டார் எழுத்தாளரிடம் கொடுத்து, ரெண்டு ‘மானே/தேனே’ சேர்த்து, திருடி, அவர் பெயரில் வெளியிடுவது
  3. எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வது (போன புல்லட்டில் பணம் கிடைக்காது; இதில் தொகை உண்டு)
  4. எழுத்துப் பிரதி பத்திரமாக பீரோவில் இருந்தாலும் ‘தொலைந்து போனது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிடுவது
  5. வெளியாகிய புத்தகத்திற்குரிய சன்மானம் கேட்டால், ‘விற்ற பின் தருவதாக’ பணம் தராமல் டபாய்ப்பது
  6. ‘எட்டாம் பதிப்பு’ வெளியாகி இருக்கிறதே என்று கொஞ்ச தசாப்தம் கழித்து கேட்டால், ‘சில்லறைப் பற்றாக்குறை’ என்று காரணம் உண்டாக்கித் தள்ளிப் போடுவது
  7. வீட்டிலோ, தெருமுக்குகளின் பிசிஓ போன் இல்லாத காலத்தில் அலைய விடுவது
  8. கிடுக்கிப் பிடியாக சத்தியாகிரகம் செய்தால், ‘உங்ககிட்ட இந்தப் பெரிய ப்ராஜெக்ட் கொடுக்கலாம்னு இருந்தேன்’னு தூண்டில் போட்டு உக்கிரத்தை இளக்குவது
  9. மெய்ப்பு (ப்ரூஃப்) பார்க்க செய்வது; (நீங்க சரி பார்த்தால்தான் ஒழுங்கா இருக்கு’ என்பது சங்கேத மொழி)
  10. இப்படி வெறும் எழுத்தை அச்சில் பார்க்குயம் மகிழ்ச்சியில் மட்டும் இருப்பவர்களை, Vanity publishing மூலமும் படைப்பாளியின் முன்னுரை முடக்கம், ஆசிரியரின் சிறுகுறிப்பு இருட்டடிப்பு மூலமும் கன்ட்ரோலில் வைத்திருப்பது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: