சென்னைக்குப் போகிறேன். வலைப்பதிவரை சந்திக்கலாம். என்ன கேள்வி கேட்கலாம்? எதற்கு விடை அறிய ஆவல்?
- ஏன் வலைப்பதிகிறீர்கள்?
- உங்களுக்கு மணமாகிவிட்டதா? குழந்தை உள்ளதா?
- வேலை? ஊதியத்துக்கேற்ற உழைப்பைத் தருவதாக நினைக்கிறீர்களா?
- கடைசியாக பதவி மாறியது எப்போது?
- ட்விட்டர், ஃபேஸ்புக் பிடித்திருக்கிறதா? பதிவு அதிகம் பிடிச்சிருக்கா?
- குமுதம், விகடனில் எழுத ஆசையா?
- தமிழ்ப்பேப்பர், திண்ணை, சொல்வனம் குறித்த உங்கள் எண்ணம்.
- உங்கள் பதிவு எந்த இடங்களில் கவனிக்கப்பட்டிருக்கிறது?
- வலைப்பதிவு அறிமுகம் இல்லாதவர்களால், உங்கள் பதிவு எவ்வாறு நோக்கப்படுகிறது?
- பைசா பிரயோசனம் உண்டா?
1. சும்மா- சும்மா இருக்கிறேன். சும்மா இருக்க முடியவில்லை. சும்மா எழுத விடுகிறார்கள். ஸோ, சும்மா டைம் பாஸ்.
2. ஒரு மனைவி. ஒரு மகன்.
3. வேலையா? 🙂 எந்த வேலை? பிழைப்புக்காக செய்கிற வேலையில் ஊதியம் உண்டு. உழைப்பு ரொம்ப கம்மி. வெட்டி வேலையில் உழைப்பு ஜாஸ்தி. வருமானம் கிடையாது.
4. என்ன ஒரு பத்து வருஷம் இருக்கும்.
5. பதிவுதான். டிவிட்டர் பேஸ்புக்- இதிலெல்லாம் அரட்டை அடிக்க வேண்டும். பதிவில் நாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கலாம்.
6. இல்லை.
7. தமிழ் பேப்பர் சொல்வனத்துக்கு சரியான சவால். சொல்வனம் மாதமிரு முறை செய்வதை தமிழ் பேப்பர் விட்டால் தினம் ரெண்டு தடவை செய்வார்கள் போல இருக்கிறது. திண்ணையில் பதிவோடை இல்லாததால் அதைப் புறக்கணிக்கிறேன். அங்கு என்ன செய்கிறார்கள் என்று ஏதும் தெரியாது.
8. தினமும் நாற்பது முதல் ஐம்பது ஹிட் வாங்குகிறது. திரு ஜெயமோகன் சாரு போன்ற சூப்பர் ஸ்டார்களைத் திட்டி எழுதினால் காரண்டீயாக சதம் அடிக்கலாம். ஒரு தடவை வர்ட்ப்ரஸ் வளரும் தளங்களில் மூன்றாக இருந்ததுதான் என் தளத்தின் உச்சகட்ட சாதனை. படிக்க வேண்டியவர்கள் படிக்கிறார்கள் என்ற நினைப்பில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
9. சொன்னாலே சிரிக்கறாங்க.
10. இதைத்தான் என் மனைவியும் எப்போது பார்த்தாலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.