Snapjudge

Who is the Real Thamizhan?

In Blogs, Life, Lists, Tamilnadu on ஜூலை 15, 2010 at 4:32 முப

ட்விட்டரில் மாயவரத்தனார் எழுதிய ‘இவன் தான் தமிழன்’ குறுஞ்செய்திகளில் இருந்து சில:

1. ’தலை சுத்துதுன்னு’ சொன்னா, ‘அஜீத்தா?’ அப்படீன்னோ, ‘ஹை..முதுகை பார்க்கலாமே’ அப்படீன்னோ அச்சுபிச்சு ஜோக் (?!) அடிக்கிறவன் தான் #தமிளன்

2. யாருனாச்சும் கேமரா வெச்சிருந்தா தான் போட்டோ எடுத்து தர்றாதா சொல்லி தலையை பாதி கட் பண்ணி போட்டோ எடுக்கிறவன் தான் #தமிளன்

3. பிட்ஸா கண்டு பிடிச்சதே நம்மூரு ஊத்தப்பத்தை வெச்சு தான் அப்படீன்னு உலக மகா உண்மையை அடிச்சு விடுறவன் தான் #தமிளன்

4. பர்கரை வாங்கி ரெண்டு பன்னையும் தனித்தனியா பிச்சு சாப்பிடுறவன் தான் #தமிளன்

5. பக்கத்து தெருவுக்கு சும்மா போவுறதுக்கு கூட முதுகில ஒரு பொதி மூட்டையை மாட்டிக்கிட்டு கிளம்புறவன் தான் #தமிளன்

6. டொக்கு செல்போனிலயும் 4 ஜிபி மெமரி இருக்குறதா கதை உடுறவன் தான் #தமிளன்

7. கூட்டமான எலக்ட்ரிக் ட்ரெயினிலே நட்ட நடு செண்டரில நின்னு செல்போனிலே உச்சபச்ச டெசிபலில் பேசுபவன் தான் #தமிளன்

8. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ எல்லாம் ஒரு பஞ்ச் டயலாக்குன்னு இன்னமும் நம்பிட்டிருக்கவன் #தமிளன்

9. பாண்டிச்சேரிக்கு போறோம்ன்னு சொன்னாலே பாட்டிலுக்கு தான் அப்படீன்னு நெனச்சு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிறவன் தான் #தமிளன்

10. எந்த ஊர் பேர் சொன்னாலும் அந்த ஊர் ஸ்பெஷல் சாப்பாட்டைப் பத்தி பேசறவன் #தமிளன் – பெனாத்தல்

11. ரவுடியா இருந்தாலும் நடிகரா இருந்தாலும் ‘அடைமொழி’யோட தான் சொல்லுவேன்னு அடம் புடிக்கிறவன் தான் #தமிளன்

12. சன் டி.வி.யில ஒரு நியூஸ் பாத்திட்டு அதையே ஜெயா, கலைஞர், விஜய், டி.டி. எல்லாத்திலயும் மறுபடியும் பாக்குறவன் #தமிளன்

13. இளையராஜா காலத்தில எம்.எஸ்.வி.யையும், ரஹ்மான் காலத்துல இளையராஜாவையும் புகழ்ந்து பேசுறவன் #தமிளன்

14. டூத் பேஸ்ட் முடிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சும் ஏறி நின்னு மிதிச்சு உள்ள இருக்கிறதை உபயோக்கிறவன் #தமிளன்

15. பக்கத்து வீட்டுல இடியே விழுந்தாலும் கண்டுக்காம சீரியல் பாக்குறவன் #தமிளன்

16. டிவிட்டர் ஃப்ரீன்னா இப்படி எதையாவது சொல்லி ரிவிட் அடிக்கிறவன் #தமிழன். – ஹரன்பிரசன்னா

17. ’இந்த மாதிரி ஒரு சம்மரை என் லைப் டைம்ல பாத்ததில்லை’ன்னு ஒவ்வொரு வருஷமும் சொல்றவன் #தமிளன்

18. ஆனந்த விகடனில் தனது ட்விட் வராவிட்டால், ஆள் தெரியாததாலோ கவனிக்காததாலோ வராமல் போச்சுன்னு ட்விட்டறவன் தான் #தமிளன் – ஸ்னாப்ஜட்ஜ்

19. செஃல்ப் டேமேஜ் பண்ணிக்கிட்டாலும் சிரிச்சுக்கிட்டே யாருக்கோ மாதிரி நினைச்சுகிறவன் #தமிளன் – ஆயில்யன்

20. தன் மூஞ்சியை கண்ணாடில பார்க்காம விஜயகாந்த்தையும் T.Rரையும் கிண்டலடித்துக் கொண்டிருப்பவன் #தமிளன் – ஜிகார்த்தி1

21. தல தல என்று சொல்லியே அந்த தலயின் காலை வாருகின்றவன் #தமிளன் – மு75

22. பொழுதுபோகலன்னு தமிழனையே கிண்டல் பண்ணி பேசுறவன் தான் உண்மையான தமிழன் #தமிளன் – கார்க்கி

23. ஆக்ஸ்வலி என்னாது இது? இதை எப்படி செய்வாங்க என்று அரிசியை பார்த்து கேட்பவன் தான் தமிழன் # தமிளன் – குசும்புஒன்லி

24. 53 வயசான ஒருத்தரை இன்னமும் ‘இளைய’ திலகம் எண்டு அழைக்கிறவன் #தமிளன் – kangon

25. விடை தெரிந்தே கேள்வி கேட்கும் நீர்தான் உண்மையான #தமிளன் – கேஸ்வாமி

26. அமெரிக்க பொருளாதாரத்தை நினைத்து கவலை கொள்பவன் #தமிளன் – mu75

27. அடுத்தவன் தப்பை அருவாமணையா திருத்திகிட்டிருக்கறவன் # தமிளன் – ஜெயஸ்ரீ

28. தன் பெருமையே பேசிக்கிட்டு திரியறவன். #தமிளன் – Jsrigovind

29. அடுத்தவன் எழுதறதை சுட்டு, தானே எழுதியதாப் போடறவன் தமிழன்ஸ்னாப்ஜட்ஜ்

30. டீ சர்ட்டும் முக்கால் டவுசரும் போட்டுக்கிட்டு கிராமத்து கோயிலில் காட் & கல்ச்சர் பத்தி டிபைனுறவன் #தமிளன் – aayilyan

31. மூணு பேரு சேர்ந்தா நாலு சங்கம் ஆரம்பிக்கறவன் #தமிளன் – ஸ்ரீகாந்த்

32. பறவை முனியம்மான்ற பேர் வெச்சிருக்காங்க. றெக்கையே இல்லையேன்னு ஆராய்ச்சி பண்ணுறவன் #தமிளன்

33. திருவள்ளுவர்தான் தெய்வம்னு சொல்லிக்கிட்டு, ஒரு திருக்குறளை கூட உருப்படியா சொல்லத் தெரியாதவன் #தமிளன் – ஹரன் பிரசன்னா

34. பாரின் போய்ட்டு வந்தா எப்பவும் அரைடிராயரோட கையில மினிமினரல் வாட்டர் பாட்டிலோட சுத்தறவன் #தமிளன் – அதிஷா

35. ஒருத்தன் ஒண்ணு சொன்னா இதை ஏற்கெனவே இன்னார் இங்க சொல்லிட்டாங்கன்னு உடனே ஓடிவர்றவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா

36. ஜப்பான்ல பொட்டிக்கடைக்காரனுக்கு இங்கிலீஷே தெரிலன்னு கோபப்படுறவன் தான் #தமிளன்

37. ஊர்க்காரங்களைப் பார்த்ததும் யார் ஜாதி என்னான்னு நேரடியா கேக்காம கண்டுபிடிக்கிறது எப்படின்னு யோசிக்கிறவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா


ஃபினிஷிங் டச்:
அடுத்தவன் நம்மை எதாவது சொல்லிடப் போறானேன்னு அவனுக்கு முன்னால் தானே சொல்லறவந்தான் #தமிளன் – இலவசம்

கொசுறு:
தான் என்னவோ வேற்றுகிரக ஆசாமி போல இப்படி ட்வீட்டுறவன் தான் #தமிளன்

  1. தமிழய்யா, கருங்குருவி புத்தகக்குறிப்புக்குட்டி என்று ஒன்று இங்கே இருக்கிறதே- http://publitweet.com/blog/2010/05/05/blackbird-bookmarklet-publish-a-tweet-in-html/- அதைப் பயன்படுத்தி இந்த ட்வீட்டோலிகளை தங்கள் வலைமனையில் பதித்தால் அவை அழகுடன் மிளிருமன்றோ? #முரட்டுத்தமிழன்.

    • சிறு திருத்தம்: நெடிலைக் குறிலாக்கி ட்வீட்டொலி என்று திருத்திப் பதிக்கவும். ப்ளீஸ். #சரியாகதமிழெழுதத்தெரியாததமிழன்.

  2. இந்த விஷயத்தைக் குறித்து நான் ஏற்கெனவே 1983ல் என் தளத்தில் விபரமாக எழுதி இருக்கிறேன் http://jottit.com/bzggy/ #ஸ்பாம்தமிழன்

    (சுட்டியைத் தட்டி ஏமாந்து போகாதீங்க…)

  3. தில்லு இருந்தா நேருக்கு நேர் நின்று மோதவும் #அனானிதமிழன்

    dear snapjudge, everytime i read your list i am getting grassitching. i don’t think your list does justice to your genius. if you increase it to top 20 or even top 100, you will give us two times ten times happiness. #பினாமிதமிழன்

    @#$% மம்மி! *#@$$# டாடி! #பெமானிதமிழன்

    (சண்டைக்கு வருவார்கள் என்று நீங்கள் நினைத்தால் இந்த பின்னூட்டத்தை குப்பைத் தொட்டியில் போடவும். இது நகைச்சுவையாக மட்டும் எழுதப்பட்டது).

  4. கொசுறு is the real surprise and top one!! Ha ha…

  5. சிரிக்கலாம் சிந்தித்தால் உங்கள் அறியாமை நினைத்தும் சிரிக்கலாம்

    muthukumar

  6. இங்லீஷ்காரனவிட அதிகமா ‘சார்’ சொல்றவன்தான் தமிழன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: