திரைப்பட அனுபவ, விமர்சன, நுண்ணரசியல், கமல் என்னும் நடிகன் vs பிரச்சாரகர், இன்ன பிற தொகுப்பு: உன்னைப் போல் ஒருவன்
இலவசக்கொத்தனார் கண்டுபிடித்தவை
- வெள்ளைக் கமல். வெள்ளை லட்சுமி. இருவரும் சேர்ந்து நிறம் மட்டாக இருக்கும் லாலை வதைப்பது – 6 minutes ago
- காய்கறி மட்டுமே வாங்கிச் செல்வதன் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிப்பதில் மாமிசம் உண்பவர்களை மட்டம் தட்டுவது – 10 minutes ago
- ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வது – 11 minutes ago
- நடாஷா என்ற அன்னிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடன் – 14 minutes ago
- மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அனைவரும் அடங்கி இருப்பது – 16 minutes ago
- காந்தியை கரம்சந்த என்றே அழைப்பது. காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. – 16 minutes ago
- போலீஸ் ஸ்டேஷனில் பாம் வைத்துவிட்டு வெளியில் வரும் பொழுது கையைக் கழுவிக்கொண்டு வராத லாஜிக் பிழை – 24 minutes ago
samsudeen_ariff
கரிகாலனுக்கு ஒரு வார்த்தை கூட வசனம் கிடையாது, நடாஷா கேள்வி கேட்கும் போது கூட தலைய மட்டுமே ஆட்டுகிறார் வாய் திறக்கமாட்டேன்கிறார் – 15 minutes ago
dynobuoy
- கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசர் இந்த படத்தில் வராதது,மனுஷ்யபுத்திரனின் பாடலும்இருட்டடிப்பு – கண்டிப்பா -துவா! – less than 10 seconds ago
- மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை… பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா? – 7 minutes ago
- கமல் மோகன்லாலுடன் பேசும் முக்கிய காட்சியில் அவருக்கு பின்னே இரண்டு கம்பிகள் தெளிவாக இருக்கும் – ட்வின் டவர்ஸ்? – 11 minutes ago
- சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland’னு இருக்கு… அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா? – 23 minutes ago
- லென்சு வச்சு பார்த்தா பாமோட வலது மூலை பக்கத்துல“Made in P…”னு இருக்கே, என்ன சொல்லவர்றார்? – 25 minutes ago
- தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? – 27 minutes ago
- ”ராம் ஜானே”ன்னோ, “பீட்டர் ஜானே”ன்னோ பாட்டு வைக்கலையே ஏன்? அந்த சாமிகளுக்கு தெரியாதா? – 28 minutes ago
- முகம்மதுகுட்டி என்ற மம்முட்டியை நடிக்கவைக்காமல், மோகன்லால் என்ற நாயரை தேர்ந்தெடுத்த நுண்ணரசியல்னு :)) – about 1 hour ago
- ஒரு காட்சியில் கமல் கழுத்து சுளுக்கு எடுப்பதைப்போல தலையாட்டுவார், கவனித்தீர்கள்னா அது துஆ செய்யறதைபோலவே இருக்கும்! – 2 minutes ago
- கமல் கையை கோர்த்திருக்கும் ஸ்டைல் ஒரு கிருஸ்துவர் சர்ச்சில் ப்ரே செய்வதைபோலவே இருக்கும்.மற்ற கமல் படங்களில் அது இல்லை! – 19 minutes ago
குறிச்சொற்களில் உண்னைப் போல் என எழுத்துப்பிழையை நுழைத்து இருக்கும் உம் நுகபிநிதான்யா பெஸ்ட்!!
ப் கிடையாதா? ஏன்?