தமிழ்ப் பதிவுகளில் ஏற்கனவே 1-10 பட்டியல் போட்டது போல் அடுத்த பத்து போட்டு பார்க்கும் ஆசை. அடுத்த பத்து வலைப்பதிவுகளுக்கான 10 காரணங்கள்:
- முதல் பதிவு முழுக்க நேம் ட்ராப்பிங். இது ட்ரீம் ரைட்டிங்.
- எப்படி இட ஒதுக்கீடு? அடிக்கடி எழுதவேண்டும். தினந்தோறும் எழுதும் ஆர்வத்தில், செய்தித்தளங்களை சக்களத்தி ஆக்கிக் கொள்ளாமல், கருத்து கனகாம்பரங்களை மட்டும் வெறும் முழம் போடாமல் இருக்க வேண்டும்.
- அப்பொழுது பத்ரி. இப்பொழுது சன்னாசியின் இடப்புறத்தில் இடம் இருக்கிறதா?
- போன தடவை லக்கிலுக் உரல் காண்பித்து கூட்டம் கூட வைத்தார். இந்த முறையும் அந்த மாதிரி செய்யத் தகுந்த எவராவது ஒருவருக்காவது இடந்தர வேண்டும்.
- எமக்குப் பிடித்தது 3 மேட்டர்: சினிமா, அனுபவம், இலக்கிய அரசியல். இதைப் பற்றியெல்லாம் யார் ரெகுலரா எழுதறாங்களோ… அவங்க.
- தொடர்புள்ள பதிவு: முந்தைய 30 இட்டதில் இருந்து உருவலாம்
- சென்ற பத்து பதிவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள். பலர் அச்சு ராசியும், புத்தக லக்கின ஜாதகமும் கொண்டவர்கள். இந்தப் பட்டியலில் பலரும், எல்லோரும் அறிந்த எக்ஸ்க்ளூசிவ் இணைய எழுத்தாளர்கள்.
- யாம் படிப்பது பெறுக இவ்வையக விரிவு வலை.
- இன்று செப். 2; அப்படியானால் இரண்டாம் ஸ்டேஜ் பதிவர் ரிலீஸ்.
- உரிமைதுறப்பு: ‘மன்னன்‘ படத்தில் ரஜினி கேட்கும் கேள்வி: ‘ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா!’
எந்த வரிசையிலும் இல்லை.
- செல்வேந்திரன்: Selvendran
- R P Rajanayagam: ஆர் பி ராஜநாயஹம்
- உண்மைத்தமிழன்: Unmai Thamizhan
- “சாத்தான்”குளத்து வேதம்: ஆசிப் மீரான்
- மாதவராஜ்: தீராத பக்கங்கள்
- Latanand: லதானந்த்
- வினவு: வினை செய்!
- மடத்துவாசல் பிள்ளையாரடி: கானா பிரபா
- டிசே தமிழன்: DISPASSIONATED DJ
- குமரன் குடில்: சரவணகுமரன்
அண்ணா,
சுவாரஸ்யமான பட்டியலுக்கு நன்றி.
ஆனா இந்தப் பட்டியல்ல கிட்டத்தட்ட பாதி பேர் (செல்வேந்திரன், ஆர். பி. ராஜநாயஹம், லதானந்த், கான பிரபா, வினவு) புத்தகங்கள் / அச்சு ஊடகங்களிலும் எழுதுகிறார்கள் இல்லையா? #7 காரணத்தைக் கொஞ்சம் மாத்திக்கோங்களேன் 🙂
– என். சொக்கன்,
பெங்களூர்.
உங்களை மாதிரி பெஸ்ட்செல்லர் பட்டியலில் இடம் பெற்ற பின் நீக்கிடறேன் என்பது சப்பைக்கட்டு (அ) சால்ஜாப்பு 🙂
thanks a lot, Sir!