- யூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி
- சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்
- மனோஜ்குமார் – பால்
- பா.வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
- தளவாய்சுந்தரம் – ஹிம்சை
- கோகுலகண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
- பவாசெல்லத்துரை – வேட்டை
- லட்சுமிமணிவண்ணன் – பூனை
- குமாரசெல்வா – உக்கிலு
- பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
- க.சீ.சிவக்குமார் – நாற்று
- சோ.தருமன் – வலைகள்
மிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பு என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுவது முடிவெடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் தரும். மறைந்த மூத்த எழுத்தாளர்களை வைத்துக் கொள்வதா விட்டுவிடுவதா, வாழும் மூத்த எழுத்தாளர்களில் யார் யாரை எடுத்துக் கொள்வது என நிறைய பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
1995க்குப் பின் எழுதப்பட்ட இளம் எழுத்தாளர்கள் கதைகளில் முக்கியமானவர்களாகச் சிலரை நான் மனத்தில் வைத்திருக்கிறேன். இவர்கள் பெயர்களை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
இவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் முதல்தொகுப்பே வரவில்லை. மீதிப்பேர் சமீபத்தில்தான் தம் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் புதியதான மொழி ஆளுமையும் படைப்புலகும் கொண்டவர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்த அடையாளத்தைத் தற்காலத்திய தமிழ்ப்படைப்புலகின் அடையாளமாகப் பார்க்கத் தடையில்லை.