Snapjudge

கன்னியாகுமரி – ஜெயமோகன்

In Books on ஓகஸ்ட் 28, 2009 at 3:48 முப

நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்:

  1. அவனது முதிரா இளமைக் கனவுகளில் பளிங்கு நிறமுள்ள, உருண்டு பெருகி ஒன்றோடொன்று நெருங்கி நிறைந்த பெரும் மார்பகங்கள் நிரம்பியிருந்தன. அவை இருதசை குமிழ்களன்றி வேறல்ல என்ற உண்மையை அவன் கற்பனை ஏற்க மறுத்தது.
  2. kanniyakumariசானலை மாற்றி மாற்றிச் சென்று ஃபாஷன் டிவியை அடைந்தான். தொலைக்காட்சித் திரையின் வெண்திரவ ஆழத்திலிருந்து வண்ணக்குமிழிகள் போலப் பெண்ணுருவங்கள் எழுந்து வந்து வெடித்தபடியே இருந்தன.
  3. நாராயணன் பேசாத நேரங்களில் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருமுறை வேடிக்கை பேச்சினூடாக பார்கவிச்சேச்சி “நானும் பார்த்திருக்கேன். அந்த சமயத்திலும் பேசிகிட்டிருக்கிற ஒரே ஆள் இவர்தான்”
  4. கோபக்கார புருஷனுக்கு சமையல் பண்ற பொண்டாட்டியோட மனநிலை
  5. ரொம்ப அந்தரங்கமான விஷயத்த வெளியே சொல்றப்ப எப்பவுமே ஒரு செயற்கைத் தன்மை வந்துடும்.
  6. விசித்திரமான ஓர் ஒலி கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். பலநூறு பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போன்ற ஒலி எதிர்ப்பக்க முட்கம்பி வேலியிலிருந்து கேட்டது. நெருங்கி உற்றுப் பார்த்தான். வேலியெங்கும் பாலிதீன் உறைக்கிழிசல்கள் காற்றில் வந்து சிக்கியிருந்து அதிர்ந்து படபடத்துக் கொண்டிருந்தன.
  7. அப்போதுதான் கொள்ளையடித்த கிராமத்துவீடு போலிருந்தாள் ஷைலஜா. எங்கே தொட்டாலும் பவுடரோ கிரீமோ கண்மையோ ஒட்டியது.
  8. அந்தச் செயல் போல அவனை இம்சை செய்வது வேறு ஏதுமில்லை.கல்லறை மீது பூக்களையும் சொற்களையும் வைப்பது போல.
  9. பெரிய அவமானம்னு ஒரு பிராயத்தில தோண்றது பிறகு ரொம்ப சாதாரணமா ஆகிடும். போய்ப் பேசுங்க. அவங்க சிரிப்பாங்க
  10. நடிப்புக்காகவென்றாலும் – கூட வருவதன் மூலம் உருவாகும் நிறைவு அது என்று புரிந்து கொண்டான். நம்பிக்கையூட்டக் கூடிய வலுவான ஆளுமை ஒன்றின் துணையைப் பெற்றுக் கொண்ட உணர்வா அது?
  11. அவள் மயிர்ச்சுருள்கள் ஆடின. பிணத்தின் மயிர்கள் காற்றிலாடுவது போல.
  12. சேற்றுப் பாதையில் இதமான வெப்பம் இருந்தது. தன் உடல் அச்சுவர்களில் உரசிய போதுதான் அவை வியர்த்த ஈரச் சருமப் பரப்புகள் என்று தெரிந்தது. நிர்வாணமான பெண்ணுடல்களினாலான சுவர். மென்முலைகள், வயிறுகள், தொடைகள்…
  13. சன்னலோரம் சென்று நின்று கடலைப் பார்த்தான். இருட்டில் மிதக்கும் படகு விளக்குகளே கடலாக மனதில் விரிந்து கொண்ட விந்தையை எண்ணிக் கொண்டான்.
  14. அவள் நடந்துபோய் சரக்கொன்றை மரத்தின் அடியில் அமர்ந்தாள். செம்மஞ்சள் மலர்கள் பூத்து நிரம்பிய, முதலைத் தோல் கொண்ட மரம்.
  15. ஒரு குறிப்பிட்டத் தோற்றத்தில் காட்சியளிக்க ஆரம்பித்தால் அதை நம்பும் பிறர் அத்தோற்றத்தை தன்மீது பதியவைத்து பிறகு அதிலிருந்து நினைத்தாலும் தப்ப முடியாத நிலையை உருவாக்கி விடுவார்கள் என்று அறிந்தான்.
  16. பெண் விரோதிகளில் ஒரு கணிசமான பங்கினர் மிகத் தீவிரமான பெண்பித்தர்கள்.
  17. எல்லா ஒழுக்கவிதிகளும் மத்தவங்களை சுரண்டக்கூடாதுங்கிற நீதியோட அடிப்படையில் உருவான விஷயங்கள்தான்னு எனக்குப் படுது. மத்தவங்களைப் பொருள் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ ஏமாற்றாம இருந்தா எல்லாமே ஒழுக்கம்தான்
  18. மானுடக் கற்பனையின் அதிகபட்ச எல்லை மனக்கனவுகளில் உலவுகையில்தான் தெரிகிறது. அல்லது அது அகங்காரத்தின் எல்லையா? மனிதனுக்குத்தான் எத்தனை குறைவாகத் தேவைப்படுகிறது வாழ்க்கை! அகங்கார சமனத்தின் சில கணங்கள். அதை முடிவற்ற கண்ணாடிப் பரப்புகளில் பிரதிபலித்துப் பிரதிபலித்து பிரம்மாண்டமான வெளியாக மாற்றிக் கொள்கிறான்.
  19. பெண் என்றால் உடம்பு மட்டுமல்ல; தன்னிலையும் அகங்காரமும் கூட. அதை உடலால் தொட முடியாது. அதை அகங்காரத்தால் மட்டும்தான் தொட முடியும்.
  1. //அப்போதுதான் கொள்ளையடித்த கிராமத்துவீடு போலிருந்தாள் ஷைலஜா. எங்கே தொட்டாலும் பவுடரோ கிரீமோ கண்மையோ ஒட்டியது//

    வெள்ளையடித்த?

    • மாற்றலாம். பொருந்தும். ஆனால், அச்சில் அப்படித்தான் பார்த்த நினைவு.

      கொள்ளையடித்த வீட்டில் எதுவும் பதுக்கிவைக்கப் பட்டிருக்காது. திருடும்போது சிதறியவை எளிதில் தட்டுப்படும். பொக்கிஷம் எல்லாம் திறந்து கிடக்கும். அந்த மாதிரி நினைத்துக் கொண்டேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: